ஒவ்வொரு முறை துவைத்த பின்பும் உங்கள் துணிகளில் நிறம் மங்குகிறதா? இந்த குறிப்புகள் அதைத் தடுக்க முடியும்.

அடிக்கடி துவைப்பதால், வண்ணத் துணிகள் நிறம் மங்குகின்றன. இதை எவ்வாறு தடுப்பது? இதோ சில விஷயங்கள் உங்களுக்கு உதவும். அதை இப்போது பார்க்கலாம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Are Your Clothes Fading After Each Wash? These Tips Can Save Them!
விளம்பரம்
Comfort core

சுத்தமில்லாத உங்கள் துணிகளை துவைக்க அதை நீங்கள் வாஷிங் மெஷினில் போடுகிறீர்கள். ஒவொரு முறை துவைத்த பிறகும் அதில் நிறம் மங்குவதைக் கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? பதட்டப்படாதீர்கள். உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்.

நீங்கள் உங்கள் துணிகளில் இருக்கும் லேபிள்களில் உள்ள சுலபமான வழிமுறைகளைப் பார்க்காமல் அவற்றை வாஷிங் மெஷினில் போட்டுவிடுகிறீர்கள். அதன் மேல் ஒரு மூடி டிடெர்ஜென்ட்டையும் விடுகிறீர்கள். இது உங்கள் துணிகளை பாதிக்கக்கூடும். துணிகளின் நிறத்தை அப்படியே வைப்பதற்கு நீங்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உங்கள் துணிகளைத் துவைக்கும்போது அரை கப் வினிகர் சேர்த்து சிறந்த சலவையைப் பெறுங்கள். சோப்புக் கசடை நீக்குவதற்கும், துணிகளை மிருதுவாக்குவதற்கும் வினிகர் உதவும்.

1) டேகை கவனமாகப் படிக்கவும்.

உங்கள் துணிகளை துவைக்கும் முன்பு அதை எப்படி துவைக்க வேண்டும் என்று துணிகளில் கொடுத்துள்ள டேகை எப்போதும் படிக்கவும். டேகில் குறிப்பிட்டுள்ள வாஷிங் மற்றும் அயனிங் முறைகளை பின்பற்றவும். சரியான சலவை முறையை தேர்வு செய்வதை நீங்கள் உறுதிப்படுத்துவதும் முக்கியமானது.

விளம்பரம்
Comfort core

2) குளிர்ந்த தண்ணீர் பயன்படுத்தவும்

சூடான தண்ணீர் நூலிழைகளை பலவீனமாக்கும். அதனால் உங்கள் துணிகளை குளிர்ந்த தண்ணீரில் துவைக்கவும். குளிர்ந்த தண்ணீர் சாயம் போகாமல் தடுக்கும். 

3) துணிகளை தனியாகப் பிரிக்கவும்

துணிகளை நிற வாரியாக பிரிக்கவும். ஒரே நிறமுள்ள துணிகளை ஒன்றாக துவைத்தால் அவற்றின் நிறத்தை அப்படியே வைக்கலாம்.

4) மிக கவனமாக டிடெர்ஜென்ட்டை தேர்வு செய்யுங்கள்.

வண்ணத்துணிகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட டிடெர்ஜென்ட்டை தேர்வு செய்யுங்கள்.  அவை நிறங்களை அப்படியே வைக்கும். சாயம்போக விடாது. துணிகளை மிருதுவாகவும், புத்துணர்வு நறுமணத்துடனும் வைக்க நீங்கள் ஃபேப்ரிக் கண்டிஷனரும் பயன்படுத்தலாம். 

5) மெஷின் வழிகாட்டியை படிக்கவும்.

ஒருபோதும் ஹெவி ஹாட் வாட்டர் செட்டிங்கில் துவைக்காதீர்கள். மிதமனா செட்டிங் பரிந்துரைக்கப்படுகிறது

இது மிகவும் சுலபமானது எளிமையானது.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது