சிறந்த முறையில் துணிகளை வெண்மையாக்குவதற்கான எளிமையான வழிகாட்டி கையேடு

எங்கள் அனுபவத்தில், வெண்மைநிற ஆடைகள் கறைகள் எதுவுமில்லாமல் சுத்தமாக பிரகாசமாக இருந்தால் மட்டுமே அதற்கான மதிப்புடன் இருக்கும். பழைய ஆடைகளோ, புதிய ஆடைகளோ எதுவாயினும் வெண்மை நிற ஆடைகளை புதியது போன்று பிரகாசிக்க வைப்பதற்கான குறிப்புகள் இதோ!

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

துணிகளை வெண்மையாக்க குறிப்புகள்
விளம்பரம்
Rin ala

நமது வெண்மை நிற  உடைகளில் இருக்கும் கடினமான கறைகளை நீக்குவது என்பது மிகுந்த சிரமமான, அயற்சி அளிக்கக்கூடிய செயலாகவே இருந்து வருகிறது. நம்மில் பெரும்பாலானவர்கள், வெள்ளை நிற ஆடைகளுக்கு அவற்றின் வெண்மையை தக்க வைத்துக் கொள்ள, தனிக் கவனம் தேவைப்படும் என்பதை சற்றும் உணராமல், மற்ற சாதாரண உடைகளைப் போலவேஅவற்றையும் சலவை செய்கிறோம். நமது உடைகளில் ஏற்படும் காபி கறையோ, வியர்வை திட்டுக்களோ, உணவுக் கறை அல்லது கிரீஸ் கறை, இவற்றில்  எது ஏற்படினும், துணிகளை மீண்டும், புதிது போல, அவற்றின் பளீரென்ற வெண்மை நிறத்தினை மீட்டுத் தருவது ப்ளீச் செய்வதால் மட்டுமே சாத்தியமாகும். எங்கள் அனுபவத்தில், ஒரு குறிப்பிட்ட கால பயன்பாட்டிற்குப் பின், வெள்ளை நிற ஆடைகள், மஞ்சள் நிறமாக மாறி விடுகின்றன. இதனால், அவை, பழைய ஆடைகளைப் போலவும், களையிழந்தும் காணப்படுகின்றன. ப்ளீச் பயன்படுத்தி, உங்கள் வெள்ளை ஆடைகள் நன்கு பளிச்சிடச் செய்வதற்கான ஒரு எளிமையான வழிகாட்டுதல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1. சேதாரத்தை தவிர்க்க துணியின் சிறு பகுதியில் சோதனை செய்து பார்த்தல்

உங்களது ஒரு குறிப்பிட்ட உடைக்கு ப்ளீச்சினை முதன் முறையாக பயன்படுத்துகிறீர்கள் எனில், முதலில், அந்த உடையுடன் வரும் துவைக்கையில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை கவனமாகப் பார்க்கவும். அப்படி ஒரு ஆடையில், இவ்வாறான துணி பராமரிப்பு முறை வழிகாட்டி இல்லையெனில், துணியின் சிறு பகுதியில், ப்ளீச்சினை பயன்படுத்தி, சோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியம். துணியின் வெளிப்படையாக தெரியாத பகுதியில் இந்த ப்ளீச்சினை பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளலாம். துணிக்கு ஏதேனும் சேதாரம் நேருமாயின், ப்ளீச் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, ஒரு சட்டையின் வெளியே பகிரங்கமாக தெரியாத கழுத்துப் பட்டை பகுதி அல்லது கைப்பட்டை பகுதியில், இந்த பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

2. உங்களது வெள்ளை ஆடைகளை ப்ளீச் கலந்த குளிர்ந்த நீரில் ஊற வையுங்கள்

ஒரு கனமான வாளி அல்லது வாயகன்ற கலனில் நீரை நிரப்பி, துணிகளை ஊற வைக்க வேண்டும். வெள்ளைத் துணிகள் நீரில் முழுமையாக அமிழ்த்தி வைக்கப்பட்டிருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். அனைத்து வெள்ளை உடைகளையும் ஒரு வாளியில் ஊற வைத்து,  அரை வாளி நீரில் 30 நிமிடங்களுக்கு ரின் ஆலா ஃபேப்ரிக் கண்டிஷனர் போன்ற துணி வெளுப்பு திரவத்தினை மூன்றரை மூடிகள் அளவிற்கு கலக்கவும். கறைகள் மிகவும் கடினமானவையாக இருப்பின், கறை பட்ட பகுதியை, மூன்றரை மூடி அளவு திரவத்தில் ஒரு இருபது நிமிடங்கள் முன்கூட்டியே ஊற வைத்து, பிறகுநல்ல தரமான டிடர்ஜெண்ட் கொண்டு துவைக்கவும். எங்கள் அனுபவத்தில், ரின் ஆலா ஃபேப்ரிக் கண்டிஷனர், வெள்ளை பருத்தி ஆடைகள் மற்றும் டெரி காட்டன் ஆடைகளின் மீது நன்றாகச் செயல்படுகின்றது. இதன் பொருள் விபரச் சீட்டினில், இந்த மேம்படுத்தப்பட்ட துணி வெளுப்பு திரவம், ஆக்ஸிஜனை வெளியேற்றி, கடினமான கறைகளை நீக்குவதன் மூலம், துணிகள் பளிச்சென இருப்பதை உறுதி செய்கின்றது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

விளம்பரம்
Comfort core

3. துணிகளில் படிந்திருக்கும் ப்ளீச்சினை நீக்க துணிகளை நன்கு அலசவும்.

துணிகளை ப்ளீச்சில் ஊற வைக்கும் படிமுறை முடிந்ததும், துணிகளில் படிந்திருக்கும், ப்ளீச்,  டிடர்ஜெண்ட் அனைத்தையும் நீக்க வேண்டும். துணிகளை குளிர்ந்த நீரில் துவைத்து, அலசுவதன் மூலம், இவற்றை நீக்கலாம். துணிகளை நன்கு முறுக்கிப் பிழிவதன் மூலம், துணிகளில் படிந்துள்ள மிச்ச மீதி தண்ணீரும் வெளியேறி விடும். இதனால், துணிகளில் படிந்துள்ள தேவையற்ற படிமங்கள் தவிர்க்கப்படுகின்றன / நீக்கப்படுகின்றன.

முக்கியக் குறிப்பு: நீங்கள் ஏற்கனவே அணிந்திருக்கும் உடைகளில் ப்ளீச் பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமுடன் இருங்கள். ப்ளீச் திரவம் ஆடைகளில் படிந்தால், அது வெள்ளை நிறப் புள்ளிகளை ஆடைகளில் உருவாக்கி, துணிகளை களையிழக்கச் செய்து விடும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது