
ஆடைகளை துவைத்த பிறகு மிகவும் நறுமணத்தோடு இருக்க நாங்கள் சில எளிய வழிமுறைகளை உங்களுக்கு தருகின்றோம்.
உங்கள் துணிகளை துவைத்தப்பின் நேரடி சூரிய வெளிச்சத்தில் காயவைக்க வேண்டாம். அது துணிகளில் உள்ள நறுமணத்தை நீக்கிவிடும். நிழலான இடத்தில் துணிகளை இயற்கையாக காயவைக்கவும். அல்லது ட்ரையர் உபயோகித்து காயவைக்கலாம்.
பேப்ரிக் சாஃப்ட்னர்
பேப்ரிக் சாஃப்ட்னர் உபயோகித்து துணிகள் நறுமணமாக இருக்க சிறந்த வழிகளில் ஒன்று நீங்கள் வாஷிங்மெஷினில் துணிதுவைக்கும் போது ஒரு டேபிள் ஸ்பூன் பேப்ரிக் சாஃப்ட்னரை அலசும் நிலையின் பொழுது ஊற்றவும். துணிகளை கைகளால் துவைப்பதாக இருந்தால் அவற்றை நன்றாக அலசிய பின் ஒரு பக்கெட் தண்ணீரில் அரை டேபிள்ஸ்பூன் பேப்ரிக் சாஃப்ட்னரை ஊற்றி அதில் துணிகளை போட்டு அரை மணிநேரம் ஊறவைத்து பின்னர் பிழிந்து காயவைக்கவும்.
நறுமணம் கொண்ட டிடெர்ஜென்ட் தூள்
பலவிதமான நறுமணம் கொண்ட டிடெர்ஜென் ட்தூள்கள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றில் உங்களுக்கு பிடித்ததை தீர்வு செய்து துணி துவைக்கும் முன் ஒரு பக்கெட் தண்ணீரில் அரை கப் டெர்ஜென்ட் தூளை கலக்கி துணிகளை அதில் ஊறவைக்கவும். சிறிது நேரம் கழித்து வழக்கம்போல துவைக்கவும். உங்கள் துணிகள் சிறப்பாக வாசனையுடன் மிளிரும்!

வினிகர்
இயற்கை முறையில் உங்கள் துணிமணிகளை நறுமணத்துடன் இர ுக்க வினிகர் சரியான தேர்வு. துணிகளை துவைக்கும் முன் ஒரு பக்கெட் மிதமான சூட்டுடன் தண்ணீரை எடுத்து அதில் அரை கப் வினிகர் போட்டு கலக்கி அதில் உங்கள் ஆடைகளை அரைமணிநேரம் ஊறவைத்த பின்னர் துவைக்கவும். உங்கள் ஆடைகள் பளிச்சென்று பிரகாசிப்பதுடன் இயற்கையான நறுமணத்துடன் இருக்கும்.
லேவெண்டர் திரவம்
லேவெண்டர் திரவம் உங்கள் ஆடைகளை நறுமணத்துடன் இருக்க செய்யும் ஒரு சிறந்த கலவை அது மிக எளிதாக கடைகளில் கிடைக்கும். நீங்கள் வாஷிங்மெஷினில் துணி துவைக்கும் போது ஒரு டேபிள்ஸ்பூன் லேவெண்டர் திரவத்தை அலசும் நிலையின் பொழுது ஊற்றவும். துணிகளை கைகளால் துவைப்பதாக இருந்தால் அவற்றை நன்றாக அலசியப்பின் ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு டேபிள்ஸ்பூன் லேவெண்டர் திரவத்தை ஊற்றி அதில் துணிகளை போட்டு பதினைந்து நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் பிழிந்து காயவைக்கவும். உங்கள் ஆடைகளில் நறுமணம் நீண்ட நேரம் நீடித்திருக்க லேவண்டர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வெனிலா எஸ்ஸென்ஸ் சேர்க்கவும்.
மேற்கொண்ட தகவல்களை நீங்கள் முயற்சி செய்து உங்கள் விலையுயர்ந்த அழகான ஆடைகளை நிதமும் நீண்ட நேரம் சிறப்பான நறுமணத்துடன் வைத்திருக்கலாம்.