
ஒரு சிறு துளி கிரேவி கூட உங்கள் அழகான சேலையை பாழாக்கி விடும். ஆனால், கவலைப்படாதீர்கள், அப்படி பட்டுவிட்டால் நீங்கள் சேலையை தூக்கி எறிய வேண்டியதில்லை. நாங்கள் மிக எளிய விதத்தில் அந்த உணவு கறைகளை போக்குவதற்கு உங்களுக்கு உதவுகிறோம்.
உங்கள் சேலையிலிருந்து உணவு கறைகளை நீக்கிட, எளிதான கையால் சலவை செய்யும் இந்த முறையைப் பயன்படுத்துங்கள்.
செயல் 1:
கறை பட்ட இடத்தில் ஒரு மேஜைக்கரண்டி பேக்கிங் சோடா அல்லது 2 மேஜைக்கரண்டி கார்ன்ஸ்டார்ச் தூவி அதன் பின் 10 முதல் 15 நிமிடங்கள் காத்திருங்கள்.
செயல் 2:

அடுத்து ஒரு கப் தண்ணீரில் 1 மேஜைக் கரண்டி டிடர்ஜென்டை கலந்து கொள்ளுங்கள். இதில் ஒரு சுத்தமான துணியை முக்கி எடுத்து வட்டமாக அந்தக் கறை மீது அழுத்தி தேயுங்கள். இப்போது உங்கள் சேலையிலிருந்து அந்த உணவு கறை போய் விடும் என்பது நிச்சயம்.
ஒரு வேளை அந்த உணவு கறை போகாவிட்டால் இதோ மற்றொரு முறையைப் பயன்படுத்திப் பாருங்கள்.
செயல் 1:
2 கப்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு மேஜைக்கரண்டி டிஷ் வாஷிங் ஜெல் மற்றும் ஓரு மேஜைக்கரண்டி வினிகரை கலந்து கலவையாக்கிக் கொள்ளுங்கள். நன்கு கலந்து கொள்வதை உறுதி செய்யுங்கள்.
செயல் 2:
ஒரு சுத்தமான துணியை இந்த கரைசலில் முக்கி கறையை துடையுங்கள். ஆடை இந்த திரவத்தை உறிஞ்சும் வரை துடைக்க வேண் டும்.
செயல் 3:
இப்போது மற்றொரு சுத்தமான துணியை எடுத்துக் கொண்டு குளிர்ந்த தண்ணீரில் முக்கி கறை பாதித்த இடத்தை இந்த சுத்தப்படுத்தும் கரைசலால் துடைத்து விடுங்கள்.
இப்போது கறை போய் விடும். இவ்வாறு போன பின்பு உங்கள் சேலையை வழக்கம் போல வாஷ் செய்யுங்கள் ஆனால் நினைவிருக்கட்டும், குளிர்ந்த தண்ணீரால் மட்டுமே சலவை செய்ய வேண்டும். இதனால் உங்கள் சேலை நிறம் அப்படியே நீடிக்க உதவும்.
இந்த செயல்கள் கறையை சுலபமாக அகற்ற உங்களுக்கு உதவுவதோடு உங்கள் சேலை மீண்டும் புத்தம் புதிதாக தோன்ற வைக்கும்!
கறையின் மீது மிக அழுத்தமாக தேய்க்காதீர்கள். இதனால் உங்கள் சேலையின் பளபளப்பு மற்றும் அழகு பாதிக்கப்படலாம்.