உங்கள் பல் தூரிகை வைக்கும் பிடிப்பச்சட்டத்திற்கும் ஆழமான சுத்தம் தேவை.

நாம் பல் தூரிகையை தினமும் சுத்தம் செய்வதுபோல் அதன் பிடிப்பச்சட்டத்தையும், சுத்தம் செய்ய வேண்டும். அதற்கான சுலபமான வழிமுறைகளை கீழே காணலாம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

விளம்பரம்
Buy Domex
Your Toothbrush Holder Needs Deep-Cleaning Too!

உங்கள் பல் தூரிகையை தினமும் சுத்தப்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றி உங்களுக்கு தெரிந்திருந்தாலும், அதன் பிடிப்பச்சட்டத்தையும் சுத்தமாக வைத்திருப்பது அதே அளவுக்கு முக்கியமானது. இந்த கட்டுரையில் உங்கள் பல் தூரிகை ஹோல்டரை நீங்கள் நன்றாக சுத்தம் செய்வது எப்படி என்பதை நாங்கள் கூறுகிறோம்.

 நாம் பல் தூரிகையை உபயோகப்படுத்திய பின், ஈரப்பதத்துடன் அதை பிடிப்பச்சட்டத்தில் வைத்து விடுகிறோம். அதனால் ,அது பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறி, காலப்போக்கில் மிகவும் அசுத்தமாக்குகிறது.

அடுத்தமுறை, நாம் பல் துலக்கும்போது, இவை நம் உடலில் சென்று தீங்கு விளைவிக்கும். எனவே இந்த  பிடிப்பச்சட்டத்தை எவ்வாறு முழுமையாக சுத்தம் செய்வது என்பதை கீழே காணலாம்.

Step 1: ஊறவைக்கவும்

ஒரு கிண்ணத்தில், வெதுவெதுப்பான நீரை நிரப்பி அதில் பிடிப்பச்சட்டத்தை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

Step 2: சுத்தம் செய்யும் கரைசலை தயாரிக்கவும்

 மற்றுமொரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் இரண்டு முதல் மூன்று சொட்டு பாத்திரம் கழுவும் திரவத்தை சேர்த்து கலக்கவும்.

விளம்பரம்

Step 3: சுத்தம் செய்யவும்

சோப்பு கரைசலில் ஒரு துணியை நனைத்து, பிடிப்பச்சட்டத்தை உள்ளேயும் வெளியேயும் நன்கு துடைக்கவும்.

Step 4: அலசவும்

 பிடிப்பச்சட்டத்தை நன்கு அலச வேண்டும். ஏதேனும் பற்பசை ஒட்டியிருந்தால் நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.

Step 5: சுத்தமாக துடைக்கவும்

 இறுதியாக, உலர்ந்த துணியைக்கொண்டு சுத்தமாக துடைக்க வேண்டும்.

உங்கள் பல்துலக்கி பிடிப்பச்சட்டம், டிஷ் வாஷரில் கழுவக்கூடியது என்றால், அதனை 10 நிமிடங்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற விடவும், இதனால் அடியில் படிந்துள்ள அழுக்கு இளகி விடும். பின்னர் டிஷ் வாஷரில், உங்களின் வழக்கமான பாத்திரங்களுடன் போட்டு கழுவவும். பிடிப்பச்சட்டம் டிஷ் வாஷரில் கழுவக் கூடியது அல்ல என்றாலோ, அல்லது உங்களிடம் டிஷ் வாஷர் இல்லை என்றாலோ, கைகளால் சுத்தம் செய்யவும்.

அவ்வளவுதான்! மேற்கண்ட குறிப்புகளை கொண்டு பல் தூரிகையின் பிடிப்பச்சட்டத்தை சுலபமாக சுத்தம் செய்யலாம். எனவே, இதை மாதத்திற்கு இரண்டு முறையாவது செய்ய பரிந்துரைக்கிறோம்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது