
தினமும் பாத்ரூமை சுத்தம் செய்யும்போது பல பிரச்சினைகளை நீங்கள் சந்திக்கிறீர்கள். இதற்கு நங்கள் ஒரு தீர்வைத் தருகிறோம் - அதுதான் டிஸ்டில்டு வினிகர்! ஆம், பல பிரச்சினைகளைத் தீர்க்க வினிகரைப் பயன்படுத்தலாம்.
பின் வரும் வகையில் வினிகரைப் பயன்படுத்தி பாத்ரூமின் பிரச்சினைகளைத் தீருங்கள்!
பாத்ரூம் டைல்களை சுத்தம் செய்தல்
வினிகர் மற்றும் தண்ணீரை தலா அரை கப் வீதம் எடுத்துக் கலக்கிக் கொள்ளவும். ஒரு மைக்ரோ ஃபைபர் துணியை இந்த கரைசலி ல் நனைத்து பாத்ரூம் டைல்களை சுத்தம் செய்யவும்
சமையல் மேடை, கேபினெட்டுகளை சுத்தம் செய்யவும் இந்த கரைசலை பயன்படுத்தலாம். நீங்கள் சுத்தம் செய்ய வினிகரை முதல் முறையாக பயன்படுத்தினால், இது எளிதானது மற்றும் பயன்படுத்துவதற்கு ஆற்றல் கொண்டது.
பாத்ரூமின் துர்நாற்றத்தைப் போக்குங்கள்
பாத்ரூமில் ஒரு சில துர்நாற்றத்தை போக்குவது கடினம். ஒரு கிண்ணத்தில் டிஸ்டில் செய்யாத வினிகரை பாத்ரூமில் இரவு முழுவதும் வைத்திருக்கவும். இது துர்நாற்றத்தை ஆற்றலுடன் நீக்கிவிடும்.

பாத்ரூமிற்கான க்ளீனரை நீங்களே தயாரியுங்கள்
இந்த முறையை நீங்கள் நான்-வேக்ஸ்டு பாத்ரூம் தரைக்கு மட்டும் பயன்படுத்தலாம். அரை கப் வினிகருடன் 1 கப் தண்ணீ சேர்த்து கலக்கி அதில் ஸ்க்ரப் பேடை நனைத்து பாத்ரூம் தரை மற்றும் வடிகால் குழாயை சுற்றி சுத்தம் செய்யவும்
நீங்கள் தரையை துடைக்கும் நேரமே இதையும் செய்வதற்கு சரியான நேரமாகும்.
ஃபினிஷிங் டச்சிற்காக
1 டீஸ்பூன் உப்பை 4 டீஸ்பூன் வினிகருடன் சேர்த்து கரைக்கவும். இதை பயன்பட ுத்தி விடாப்பிடியான பகுதிகளில் ஒரு சுத்தமான கிழிந்த துணியால்) தேய்த்து அழுக்கை நீக்கவும். குழாய்கள் போன்ற இடங்களைச் சுற்றியுள்ள சோப்பு பிசுக்கு மற்றும் லைம்ஸ்கேல் கறைகளை வினிகர் பயன்படுத்தி தேய்த்து நீக்கலாம்.
வினிகரை ஒரு போதும் ப்ளீச்சுடன் சேர்க்க கூடாது:
சுத்தம் செய்வதற்கு இந்த முறையை கையாளவே கூடாது. மேற்புறங்கள் மற்றும் ஃபிக்சர்களை சுத்தம் செய்ய பல நிலைமைகளில் வினிகர் உதவினாலும், இது போன்ற ஆசிடை ப்ளீச்சிங் பவுடருடன் சேர்ப்பதால் குளோரின் வாயு வெளி வரும். இது நச்சுத் தன்மை கொண்டது. ப்ளீச்சை வினிகரிலிருந்து விலக்கி வைக்கவும்.
சுத்தம் செய்வதற்கு வினிகர் இயற்கையான கரைசல் என்றாலும், இதை பயன்படுத்தும்போது நீங்கள் ரப்பர் கையுறை அணிய வேண்டும், அறையையும் காற்றோட்டமாக வைக்க வேண்டும். ஏனென்றால் இதில் மிக கடுமையான நெடி இருக்கிறது.
இந்த முறைகளைப் பயன்படுத்தி உங்கள் பாத்ரூமை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் சுத்தம் செய்யுங்கள்.