உங்களுடைய வெந்நீர் கொதிகலன் நீடித்து உழைக்க கீழ்க்கண்ட எளிய குறிப்புகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்
வெந்நீர் கொதிகலனானது, அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் மிகவும் குறைத்து மதிப்பிடக்கூடிய வீட்டு உபயோக பொருட்களில் ஒன்றாகும்.
கட்டுரை புதுப்பிக்கப்பட்டது


வெந்நீர் கொதிகலனானது, மிதமான சூட்டில் இனிமையான தண்ணீர் கொண்ட மழைத்தூறலை நமக்கு தரக்கூடியது. அழகான இந்த சாதனம், அநேகமாக அனைத்து வீடுகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்றாகும். குளிர்காலங்களில் இது பலமுறை பயன்படுத்தப்படுகிறது. கீழ்க்காணும் சில குறிப்புகளை நினைவில் கொள்வதன் மூலம், உங்களின் வெந்நீர் கொதிகலனின் ஆயுளை அதிகரிக்கலாம்.
வெந்நீர் கொதிகலனின் வெப்ப அலகில் ஏதாவது கோளாறுகள் ஏற்படும் பட்சத்தில், அவற்றை சரிசெய்ய தேர்ந்த தொழில்முறை மெக்கானிக்களை அழைப்பதே நல்லதாகும்.
1) பிளக்கை சரிபார்க்கவும்
அடிக்கடி உயர் மற்றும் குறைவான மின் அழுத்தம் என மாறி மாறி வருவதால், வெந்நீர் கொதிகலனில் ஷார்ட் சர்க்கியூட்கள் பாதிக்கப்படலாம். எனவே, வழக்கமான ஸ்விட்ச்களுக்கு பதிலாக MCB ஸ்விட்ச்களை பயன்படுத்துங்கள்.
2) வால்வுகளை சரிபார்க்கவும்
விளம்பரம்

வருடத்திற்கு ஒருமுறை, வெப்பநிலை மற்றும் அழுத்தத்தை வெளியிடும் வால்வுகளை (அவை கொதிகலனின் கீழே இருப்பவை) சரிபார்க்கவும். அவற்றில் நீர் கசிவு தென்பட்டால், அவற்றை மாற்றவும்.
3) பணத்தை சேமிக்கவும்
ஹீட்டரின் வெப்பநிலையை குறைத்து வைப்பதன் மூலம், தண்ணீர் வெகு விரைவாக மிதமான சூட்டை எட்டிவிடும். இது உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவதோடு, கொதிகலன் தற்செயலாக தீப்பிடிக்கும் விபத்தையும் தடுக்கக் கூடியது.
4) தவிர்க்கவும்
அதிக நேரத்திற்கு கொதிகலனை பயன்பாட்டில் வைத்திருப்பதும், அதன் இயந்திரத்தின் ஆயுளை குறைத்து விடச் செய்யும். எனவே, உங்களுக்கு தேவைப்படும் சமயத்தில், 5 நிமிடங்களுக்கு முன்பாக அதை ஸ்விட்ச் ஆன் செய்யவும்.
கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது