
நாம் அனைவரும் நமது வீட்டை பளபளப்பாகவும் கறையில்லாமலும் வைத்துக் கொள்ள விரும்புகிறோம் சில நேரங்களில் உப்புத் தண்ணீர் கறை நமது வேலையை கஷ்டமாக்குகிறது. ஏனென்றால் வீட்டுக் குழாய்களின் மீதுள்ள உப்புத் தண்ணீர்க் கறை மிகக் கடினமாக இருக்கும்.
தண்ணீர் ஆவியாகும்போது, குழாய்களின் மீது சுண்ணாம்பு கல் வெள்ளையாக படியும். இந்த கடினமான பொருள் உங்கள் குழாய் மீது சேர்ந்து அசிங்கமாக இருக்கும். சுண்ணாம்பு படிவது ஆபத்து இல்லை என்றாலும். அது குழாய்களில் அடைத்து கொண்டு தண்ணீர் வரத்தைகுறைக்கும். அமைதியாக இருங்கள், இதற்கு கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இந்த உப்புத் தண்ணீர் கறைகளை சுலபமான 3 வழிகளில் நன்றாக நீக்கிவிடலாம்.
வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு அதிக அமிலத் தன்மை கொண்டவை. எனவே அவற்றை விடாப்பிடி கறைகள் மீது பயன்படுத்தலாம். ஆனால் வினிகர் பயன்படுத்தும்போது கையுறை அணிய மறக்காதீர்கள்.
ஸ்டெப் 1:
பழைய டூத் பிரஷ்ஷை, ஆனால் சுத்தமான பிரஷ்ஷை பயன்படுத்தி வினிகரை கரக்காமல் அப்படியே பாத்ரூம் குழாய் மீது லோடவும். சுலபமாக போடுவதற்கு வினிகரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஸ்ப்ரே செய்யலாம். இதற்கு மாறாக 1/2 கப் எலுமிச்சை சாற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம் . வினிகரை சுத்தம் செய்ய பயன்படுத்தும்போது ரப்பர் கையுறை அணிய மறக்காதீர்கள்.

ஸ்டெப் 2:
இதை கறையின் விடாப்பிடித் தன்மைக்கு ஏற்ப கறை மீது அப்படியே 15-30 நிடங்கள் வைத்திருங்கள். மிகவும் விடாப்பிடியான கறைகள் இருந்தால் ஒரு மணி நேரம் காத்திருக்கவும்.
ஸ்டெப் 3:
பழைய டூத் பிரஷ்ஷை, ஆனால் சுத்தமான பிரஷ்ஷை பயன்படுத்தி அந்த பகுதியை நன்கு தேய்க்கவும். மிகவும் அழுத்தி தேய்த்தால் அது பாத்ரூம் குழாயின் மேற்பகுதியை சேதமாக்கிவிடலாம்.
ஸ்டெப் 4:
உப்புத் தண்ணீர் கறைகள் நீங்கியதும், ஒரு துடைக ்கும் துணியை எடுத்து அதிகப்படியான தண்ணீரை நீக்கிவிடவும்.
அது சுலபமாக போய்விடும். உப்புத் தண்ணீர் கறைகள் விடாப்பிடியானவை. ஆனால் அவற்றை எப்படி எதிர்த்து நீக்க வேண்டும் என்று தெரிந்தால் அவற்றை நீக்குவதில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
இது எளிமையானது, விரைவானது.