இந்த வழி முறை உங்கள் பாத்ரூம் தரையை சுத்தம் செய்து உங்களை பிரமிப்பில் ஆழ்த்தும்

உங்கள் அழுக்கான பாத்ரூம் தரைக்கு குட்பை சொல்லுங்கள். தரை பளிச்சென்று தோன்ற இந்த முறையைப் பயன்படுத்துங்கள்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

This Method to Clean Your Bathroom Flooring Will Leave You Floored
விளம்பரம்
Domex Fresh Guard Disinfectant Toilet Cleaner

சுகாதாரம் மற்றும் கண்கவரும் தோற்றத்தை பராமரிக்க மிகவும் முக்கியமானது உங்கள் பாத்ரூமின் சுத்தம்தான். பொதுவாக இது திகைப்பான வேலையாக தோன்றலாம். ஏனெனில் சுத்தப்படுத்த அதிக முயற்சியும், நேரமும் ஆகும். கவலைப் படாதீர்கள், நாங்கள் உதவுகிறோம். இந்தக் கட்டுரையில் நீங்கள் எவ்வாறு ஒரு சில வீட்டுஉபயோக பகுதிப் பொருட்களை பயன்படுத்தி மற்றும் ஒரு விவேகமான முறை மூலம் இந்த வேலையை விரைவாக செய்வது எப்படி என்று பார்ப்போம்.

இப்போது நாம் இதை தெரிந்து கொள்ள ஆரம்பிப்போம்.

உங்கள் டாய்லெட்டில் தரைப்பரப்புகளை சுத்தம் செய்ய ஸ்பாஞ்ச்களை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அவை ஈரப்பதத்தை விட்டு செல்வதால் பாக்டீரியாக்கள் பெருகும் ஒரு சூழலை அது உருவாக்கி விடும்.

செயல் 1:

ஒரு சுத்தமான ஸ்பிரே பாட்டிலில் 2 கப்கள் வினிகர் மற்றும் 2 கப்கள் தண்ணீர் ஊற்றுங்கள். இதை நன்கு கலக்கிக் கொள்ளுங்கள். இப்போது 2 மேஜைக் கரண்டி பேக்கிங் சோடா போட்டு நன்கு கலக்குங்கள்

விளம்பரம்
Domex Fresh Guard Disinfectant Toilet Cleaner

செயல் 2:

ஒரு சுத்தமான கிண்ணம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு முழு எலுமிச்சையை பிழிந்து இந்த எலுமிச்சை கரைசலை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி விடுங்கள். இதன் பின் உங்களுக்கு மிகவும் பிடித்த எசன்ஸ் ஆயிலின் 3-4 சொட்டுக்களை அதில் விடுங்கள்.

செயல் 3:

ஒரு பாத்திரத்தில் பாத்திங் சோப்பில் 1/4 பகுதி அளவுக்கும் குறைவாக நறுக்கி அந்த துண்டையும் இந்த ஸ்பிரே பாட்டிலில் போட்டு விடுங்கள்.

செயல் 4:

மூடியால் மூடி விட்டு, மீண்டும் நன்றாக குலுக்குங்கள்.

செயல் 5:

இப்போது நீங்கள் சுத்தப்படுத்தும் வேலையைத் தொடங்கும் முன்பு அனைத்து தயாரிப்புகள் மற்றும் பொருட்களை அகற்றி விடுங்கள். இதனால் அழுக்குச் சிதறல்களை மற்றும் வேலை முடிந்த பின் சுத்தப்படுத்தும் பிரச்சனை போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

செயல் 6:

உங்கள் குளியல் அறை முழுவதும் இந்தக் கரைசலை ஸ்பிரே செய்யுங்கள்.

செயல் 7:

நீங்கள் வழக்கமாக செய்வதுபோல் தரையை முழுவதுமாக மாப்-ஆல் சுத்தப்படுத்துங்கள்.

என்ன ஆச்சரியம், இப்போது நாம் காண்பது பளிச்சென்ற, சுத்தமான குளியல் அறை தரை.

உங்கள் டாய்லெட்டை சுத்தம் செய்வது ஒரு பிரச்சினைமிக்க வேலையாகத் தோன்றலாம். எனினும் சரியான முறை மூலம் நீங்கள் இதை சுலபமாக மற்றும் ஆற்றல்மிக்க முறையில் செய்யலாம்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது