
உங்கள் பாத்ரூமில் அடைத்துக் கொண்டுள்ள கழிவுநீர் குழாய்கள், ஒழுகும் தண்ணீர் குழாய்கள் மற்றும் துருப்பிடித்த குழாய்கள் பற்றி உங்களுக்கு கவலையா? எந்த நேரத்திலும் உங்கள் வீட்டில் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படலாம். கவலைப்படாதீர்கள், உங்களுக்கு நாங்கள் உதவுகிறோம். இந்த பிரச்சினைகளை தீர்க்க ஒரு சில சுலபமான குறிப்புகளை கீழே பாருங்கள்.
1) அடைபட்டுள்ள கழிவுநீர் குழாய்கள்
1/2 கிண்ணம் வினிகர் மற்றும் 1/2 கிண்ணம் வெந்நீர் எடுத்து கலவை ஆக்கிக் கொள்ளுங்க ள். இந்த கலவையை கழிவு நீர்க் குழாயில் ஊற்றி மூடி விடுங்கள். 10 நிமிடங்கள் காத்திருங்கள். இந்தக் கலவை அதன் வேலையைச் செய்யட்டும். 10 நிமிடங்களுக்கு பின்பு மீண்டும் ஒரு கிண்ணம் வெந்நீர் போல ஒரு முறை ஊற்றுங்கள். இப்போது அடைப்புக்கள் ஒரு மேஜிக் போல நீங்கி இருப்பதை பார்க்கலாம்.
2) துருப்பிடித்த குழாய்கள்
ஒரு எலுமிச்சையை 2 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒன்றை எடுத்து துருப்பிடித்த குழாய் மேல் தேயுங்கள். சிறிது நேரம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின் அதன் மீது சிறிதளவு உப்பைத் தூவி, சிறிது எலுமிச்சை சாறு தடவி மேல் 2-3 மணி நேரம் விட்டு விடுங்கள். இப்போது குழாயில் துருவை நீக்கிட எலுமிச்சையின் தோலால் நன்கு தேயுங்கள்.

3) ஒழுகும் தண்ணீர் குழாய்கள்
தயாரிப்பாளரின் கையேட்டைப் படித்து குழாயின் இணைப்பைத் துண்டியுங்கள் அதன் பின் தலா 1 கப் வெந்நீர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையில் அதை 15 நிமிடங்கள் வரை முக்கி வையுங்கள். பின்பு ஒரு சுத்தமான துணியால் துடைத்து மீண்டும் குழாயை பொருத்துங்கள். தேவையெனில் ஒரு நல்ல பணியாளரின் உதவியை பெற்றுக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான்! உங்கள் குளியல் அறை பிரச்சினைகளை தீர்த்திட இவை எளிய மற்றும் ஆற்றல்மிக்க குறிப்புகள்.
பாத்ரூமில் கழிவுநீர் குழாயில் அடைப்பு என்பது எரிச்சலானது மட்டுமல்ல உங்கள் குழாய்களில் சேதம் ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரித்து பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். இந்த எளிய குறிப்புகளை பயன்படுத்தும்போது அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும். இனி மகிழ்ச்சிதான்.