
சுத்தமும், நல்ல நறுமணமும் கொண்ட பளபளப்பான ஒரு கழிவறையை உபயோகப்படுத்தும் பொழுது, அது நம் மனதைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. இருப்பினும், பல நேரங்களில் கழிவறையிலிருந்து மோசமான துர்நாற்றம் வருவதால், கழிவறையைச் சுத்தம் செய்ய நமக்கு ஒரு வித தயக்கம் ஏற்படுகிறது. மேலும், சில நேரங்களில் கழிவறையில் படிந்துள்ள சுண்ணாம்புத் திட்டுகளையும் மற்றும் பிற கறைகளையும் துடைத்து நீக்குவதற்கு அதிக நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. கழிவறையின் இருக்கையானது நாம் அதிகம் பயன்படுத்தும் மற்றும் அடிக்கடி தொடக்கூடிய இடமாக இருப்பதால், அங்கு இருக்கக் கூடிய கிருமிகள், வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் தான் நமக்கு ஏற்படக்கூடிய தொற்றுக்களுக்கும், உடல்நலக்குறைவிற்கும் காரணம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மேலும், இதைத் தவிர்க்க கழிவறையை சரியான முறையில் நாம் சுத்தம் செய்தாலும் கூட, கிருமிகளை முழுமையாக நீக்குவதற்கு அதற்கேற்ற சரியான பொருட்கள் தேவைப்படுகிறது. உங்கள் கழிவறையை இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை சுத்தமாகவும் மற்றும் இனிமையான நறுமணம் கொண்டதாகவும் வைத்திருக்க உதவக்கூடிய, மற்றும் பின்பற்றுவதற்கு எளிதாக உள்ள சில குறிப்புகளை கீழே கொடுத்திருக்கிறோம்.
1. கழிவறையைச் சுத்தம் செய்ய சரியான பொருட்களைத் தேர்ந்தெடுத்தல்
எங்கள் கழிவறையை எப்போதும் நறுமணம் மிக்கதாக வைத்திருக்க, நாங்கள் பல்வேறு விதமான தயாரிப்புகளை முயற்சி செய்து பார்த்தோம், ஆனால், சுத்தம் செய்த இரண்டு மணி நேரத்திலேயே மீண்டும் துர்நாற்றம் வீசத் தொடங்கியதைப் பார்த்து ஏமாற்றமடைந்தோம். ஆனால், டொமெக்ஸ் ஃப்ரெஷ் கார்டு டிஸ்இன்பெக்டன்ட் டாய்லெட் கிளீனரைக் கொண்டு எங்கள் கழிவறையைச் சுத்தம் செய்த போது, அதிலிருந்து கிடைத்த இனிமையான நறுமணமும், பளபளப்பும் மூன்று நாட்கள் வரை நீடித்திருந்ததைக் கண்டு நாங்கள் ஆச்சரியமடைந்தோம். மேலும் அந்த டாய்லெட் கிளீனர், கழிவறையின் விளிம்பிற்கு கீழ் இருக்கும் ஆழமான மூலைப்பகுதிகளில் சென்று சுத்தம் செய்வதற்கு ஏற்றவாறு வளைவான கழுத்துப் பகுதியைக் கொண்டிருப்பதால், அதனைப் பயன்படுத்த மிகவும் வசதியாக இருப்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். அதனுடைய அடர்த்தியான நிலைத்தன்மை, கழிவறைக் கிண்ணத்தின் விளிம்பிலிருந்து சரிசமமாக, முழுவதுமாக பரவுவதற்கு உதவுகிறது.
2. ஃப்ளஷ் டேங்கில் டாய்லெட் கிளீனரின் பயன்பாடு
இது நாங்கள் முயற்சி செய்த மற்றும் விரும்பிய ஒரு குறிப்பாகும். இது மிகவும் எளிமையானது மற்றும் உங்கள் கழிவறைக் கிண்ணத்தை சுலபமாக பராமரிக்கவும் இது உதவுகிறது. வழக்கம் போல் உங்கள் கழிவறையைச் சுத்தம் செய்த பிறகு, டாய்லெட் கிளீனரின் வெறும் ஓரிரு சொட்டுகளை ஃப்ளஷ் டேங்கில் விடுங்கள். இதனால்,அந்த டாய்லெட் கிளீனரானது நீங்கள் ஒவ்வொரு முறையும் ஃப்ளஷ் செய்யும் போது, அதன் வழியாகக் கழிவறைக் கிண்ணத்திற்குச் சென்று, அங்கு எஞ்சியிருக்கும் கழிவுகளை நீக்குகிறது. இதனைத் தொடர்ந்து செய்வதனால், கழிவறையில் தங்கியுள்ள தாது மற்றும் சுண்ணாம்புக்’ கட்டிகளை எளிதில் உடைத்திட உதவுகிறது, மேலும் கழிவறையில் படிந்துள்ள கறைகளைத் துடைத்து நீக்குவதற்கும் அதிக நேரம் செலவிட வேண்டியதில்லை. டொமெக்ஸ் ஃப்ரெஷ் கார்டு டிஸ்இன்பெக்டன்ட் டாய்லெட் கிளீனரைப் பயன்படுத்தியதற்கான முக்கிய நோக்கம், இது கழிவறைக்கு இனிமையான நறுமணத்தை மட்டும் கொடுக்காமல், கழிவறையைச் சுத்தமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. அதன் லேபிளைச் சரி பார்த்ததில், கிருமிகளை அழிக்கக்கூடிய ஒரு அமிலம் அதில் முக்கிய மூலப்பொருளாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டோம், இதுவே எங்களை மிகவும் கவர்ந்தது.

3. கழிவறையின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்ய மறக்காதீர்கள்
வழக்கமாக நாம் கழிவறைக் கிண்ணத்தைத் துடைத்து சுத்தம் செய்யும் போது, கழிவறையின் வெளிப்புறத்தை குறிப்பாக, கழிவறையின் இருக்கையைச் சுத்தம் செய்யாமல் விட்டிருப்போம். நாம் கழிவறையைச் சுத்தம் செய்யும் போது, அதே சுத்திகரிக்கும் தயாரிப்பைக் கொண்டு கழிவறையின் மொத்த பீங்கான் பகுதியும் சுத்தம் செய்து துடைக்கப்படுகிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், தொற்றுநோய்கள் அதிகமாகப் பரவியுள்ள இ ந்த காலகட்டத்தில், கிருமிகள் மற்றும் வைரஸ்கள் அதிகமாகப் பரவுவதைத் தடுக்க, கழிவறையின் இருக்கை மற்றும் ஃப்ளஷ் டேக்கிங் கைப்பிடியில் கிருமிநாசினியைத் தொடர்ந்து தெளிக்குமாறும் நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
4. 2-3 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்தல்
கழிவறையைச் சுத்தமாக வைத்திருப்பதற்கான சிறந்த வழி, அதனை அடிக்கடி சுத்தம் செய்வதே என்பதை நாங்கள் கண்டறிந்தோம். சுத்தம் செய்வதை நாம் அடிக்கடி தள்ளிப் போட்டால், கழிவறை அதிகமாய் அழுக்காகிறது மேலும், அதிலிருந்து அதிக துர்நாற்றம் வீசுகிறது.
கழிவறையை எப்பொழுதும் சுத்தமாகவும் மற்றும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டுமானால், மூன்று நாட்களுக்கு ஒரு முறை டொமெக்ஸ் ஃப்ரெஷ் கார்டு டிஸ்இன்பெக்டன்ட் டாய்லெட் கிளீனர் போன்ற சிறந்த டாய்லெட் கிளீனரைப் பயன்படுத்திக் கழிவறைக் கிண்ணத்தைத் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். மேலும் அதனைத் தொடர்ந்து பின்பற்றுவதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், இந்த தயாரிப்பானது கழிவறையை மூன்று நாட்கள் வரை, மிகவும் சுத்தமாகவும் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் இனிமையான நறுமணம் கொண்டதாகவும் வைத்திருப்பதை நாங்கள் உணர்ந்தோம்.
5. உங்கள் கழிவறை சுத்தப்படுத்தும் பிரஷ்ஷை கிருமி நீக்கம் செய்யுங்கள்
உங்கள் கழிவறையை, அழுக்கான பிரஷ்ஷைக் கொண்டு, நீங்கள் எத்தனை முறை தேய்த்து சுத்தம் செய்தாலும் அவை ஒரு போதும் பலனளிக்காது. நீங்கள் ஒவ்வொரு முறையும் நீங்கள் பிரஷ்ஷைப் பயன்படுத்திய பின்னர், அதனை வினிகரும் தண்ணீரும் சரி விகிதத்தில் கலந்திருக்கும் கரைசலில் ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள், கைகளுக்கு இரப்பர் கையுறைகளைப் பயன்படுத்தி ஊற வைத்த பிரஷ்ஷை வெளியே எடுக்க வேண்டும். அதனை முழுமையாக சுத்தம் செய்ய, பிரஷ்ஷின் மேற்பரப்பு முழுவதும் சிறிதளவு பேக்கிங் சோடாவை தூவி விட்டு, வேறொரு பிரஷ்ஷைப் பயன்படுத்தி, அதன் முட்களுக்கு இடையேயான பகுதிகளை நன்கு தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். மேலும், அந்த பிரஷ்ஷை சூடான தண்ணீரில் அலசிய பின்பு, அதிலிருக்கும் தண்ணீர் முழுவதும் வடியுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.அத்தகைய பிரஷ்ஷை மீண்டும் அதன் இடத்தில் வைப்பதற்கு முன்பு, அதனைக் காற்றில் நன்றாக உலர்த்துவதும் மிகச் சிறந்தது என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்.
உங்கள் கழிவறையை, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சுத்தமாகவும் மற்றும் இனிமையான நறுமணம் கொண்டதாகவும் வைத்திருக்க, இந்த உதவிக் குறிப்புகள் நிச்சயமாக உங்களுக்கு உதவும்.