கழிவறையின் துர்நாற்றத்தைப் போக்கும் குறிப்புகள்

உங்கள் கழிவறையில் மனம் விரும்பாத வாசனை வீசுவதற்கும், சில சமயங்களில் மிகவும் மோசமான துர்நாற்றம் வீசுவதற்கும் என்ன காரணம் என்று யோசிக்கிறீர்களா? அதனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், அதனை சரி செய்வதற்குத் தேவையான உதவிக்குறிப்புகளையும் தெரிந்து கொள்ளவும் தொடர்ந்து படியுங்கள்!

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

கழிவறையின் துர்நாற்றத்தைப் போக்கும் குறிப்புகள்
விளம்பரம்
Domex Fresh Guard Disinfectant Toilet Cleaner

மிகவும் அழகாகக் காட்சியளிக்கும் குளியறையில் துர்நாற்றம் வீசினால் அது எவ்வளவு ஒரு விரும்பத்தகாத சூழ்நிலையை உருவாக்கும்!! அதுவும்  வீட்டிற்கு விருந்தினர்கள் வரும் போது குளியறையில் துர்நாற்றம் வீசுவது,  வீட்டினருக்கு மிகப் பெரிய சங்கடத்தைத் தருகிறது என்பது உண்மை தானே? சரி, ஒரு வேளை, இது போன்ற மோசமான  துர்நாற்றத்தால் நீங்களும்  பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றால், உங்களது குளியலறையில் அவ்வப்போது ஏற்படக்கூடிய பல்வேறு விதமான துர்நாற்றத்திற்கான அடிப்படைக் காரணங்களைப் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் துர்நாற்றம் வீசுவதால், உங்களது குளியலறையிலும், கழிவறையிலும் ஏற்கனவே இருக்கக்கூடிய கிருமிகளைப் பற்றி கூடுதல் கவனம் செலுத்துவதும் அவசியமாகிறது. குறிப்பாக, தொற்று நோய்களின் பரவல் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில் , பல்வேறு வகையான நோய்களுக்குக் காரணமாக இருக்கும்  கிருமிகளை  முற்றிலுமாக அழித்திடவே நாம்  விரும்புகிறோம். குறிப்பாக, பச்சிளங் குழந்தைகள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இருக்கும்  வீடுகளில் கிருமிகளை முற்றிலுமாக அழிப்பதில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உங்கள் வீட்டின் கழிவறையில் வீசக்கூடிய துர்நாற்றத்திற்கான பின்னணிக்  காரணங்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும் மேலும் அதனைக் கண்டறிந்து சரி செய்வதற்கும் உதவக்கூடிய, சில உதவிக்குறிப்புகள் இதோ.

1. அடைபட்டிருக்கும் வடிகால்/ கண்ணி

சில நேரங்களில் வடிகாலில் அல்லது கண்ணியில் அடைப்பு ஏற்படும், அதாவது கழிவறைக் கிண்ணத்தின் வளைந்திருக்கும் ஒரு பகுதியானது வடிகால் போல செயல்படும். அத்தகைய வடிகாலில் ஏற்படக்கூடிய அடைப்பு கூட கழிவறையில் வீசக்கூடிய துர்நாற்றத்திற்கான காரணமாக இருக்கலாம். அடைப்பின் காரணமாக, உங்களின் கழிவறை வடிகால் வடிகட்டுவதற்கும், நிரப்பப்படுவதற்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், இது நீர் மட்டங்களில் வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும், உங்கள் கழிவறைத் தொட்டி மீண்டும் நிரம்ப அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் போதும் அல்லது நிரப்பப்படாமல் இருக்கும் போதும், அவை விரும்பத்தகாத கழிவுநீர் வாயுக்களை வெளியேற்ற  வழிவகுக்கும்.  இதுவே  நீங்கள்  ஃப்ளஷ் செய்து சுத்தமாக வைத்திருந்தாலும், உங்கள் கழிவறையில் பயங்கரமான துர்நாற்றம் வீசுவதற்கான காரணமாக இருக்கலாம். அதனை சரி செய்ய, பிளங்கர் எனப்படும் உலக்கையைக் கொண்டு அடைப்பை நீக்க, நீங்கள் முயற்சி செய்யலாம். இருப்பினும், அதனை முறையாகச் சரி செய்வதற்கு, பிளம்பரை அழைக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

2. தவறான பொருளை சுத்தம் செய்ய பயன்படுத்துதல்

உங்கள் கழிவறையில் துர்நாற்றம் வீசுவதற்கான மிகத் தெளிவான மற்றும் பொதுவான காரணம் என்னவெனில், தவறான பொருளைக் கொண்டு ஒழுங்கற்ற முறையில் சுத்தம் செய்வதே ஆகும். உங்களின் கழிவறைக் கிண்ணத்திலும், இருக்கையிலும் அதிக அளவு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பூஞ்சைகள், கிருமிகள் மற்றும் ஈஸ்ட் ஆகியவை  இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் கழிவறையை, எப்பொழுதும் வழக்கமாகப் பயன்படுத்தும் தயாரிப்புகளைப் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்வதோ அல்லது துடைப்பதோ  போதுமானதாகத் தோன்றினாலும், கழிவறைக் கிருமிகளை முற்றிலும் அழிப்பதற்கு, உங்களுக்கு சரியான கழிவறை சுத்திகரிப்பான் ஒன்று அவசியமாகத் தேவைப்படுகிறது. அதற்காக நாங்கள் டொமெக்ஸ் ஃப்ரெஷ் கார்டு டிஸ்இன்பெக்டென்ட் டாய்லெட் கிளீனரை முயற்சி செய்து பார்த்தோம், அதனைப் பயன்படுத்திப் பார்த்த பொழுது, அது கழிவறையை முழுமையாகச்  சுத்தம் செய்வதில் சிறந்ததாக இருக்கிறது. மேலும், அவை கழிவறையில் தீங்கு விளைவிக்கக்கூடிய அனைத்துக் கிருமிகளையும் நீக்குவதோடு மட்டுமல்லாமல், இனிமையான நறுமணத்தையும் தருவது எங்களுக்குப் பிடித்திருந்தது. மேலும், அந்த தயாரிப்பின் மீதுள்ள லேபிளின் விளக்கத்தைப் படித்துப் பார்த்ததில், அதில் கழிவறைக் கிருமிகளையும், பாக்டீரியாவையும் அழிக்கக்கூடிய முக்கிய மூலப் பொருளாக ஒரு அமிலம் இருப்பதைப் பற்றி நாங்கள் கண்டறிந்தோம். எங்களின் கழிவறைக் கிண்ணத்திற்கு அதனைப் பயன்படுத்திய பிறகு, அவை அதிலுள்ள அனைத்துக் கிருமிகளையும் அதனுடன் துர்நாற்றத்தையும் முழுமையாக அகற்றுவதை நாங்கள் அறிந்து கொண்டோம். மேலும், டொமெக்ஸ் ஃப்ரெஷ் கார்டு டிஸ்இன்பெக்டென்ட் டாய்லெட் கிளீனர் எங்களின்  கழிவறைக் கிண்ணத்தை மூன்று நாட்கள் வரை சுத்தமாக வைத்திருக்கிறது என்பதையும் நாங்கள் கவனித்தோம். இதனைப் பயன்படுத்திய பின்னர், அவை கழிவறையில் இருக்கும் துர்நாற்றத்தை மட்டுமல்லாமல், அங்கு படிந்திருக்கும் மஞ்சள் மற்றும் சுண்ணாம்புத் திட்டுகளையும் சரி செய்கிறது என்பதைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.

விளம்பரம்
Domex Fresh Guard Disinfectant Toilet Cleaner

3. மோசமான காற்றோட்டம்

ஒரு சுத்தமான கழிவறைக்கு நல்ல காற்றோட்டம் என்பது மிகவும் முக்கியமானது. ஒருவேளை உங்களால், உங்கள் கழிவறையைச் சுற்றிலும் சுத்தமான காற்றைப் பெற முடிந்தால், அது உள்ளே வீசும் வாசனையில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். உங்களது குளியலறையில் நல்ல காற்றோட்டத்தைப் பராமரிப்பதற்கு, இரண்டு முக்கியமான காரணிகள் இருக்கின்றன. முதலாவதாக, நல்ல முறையில் செயல்படும் வென்ட் மின்விசிறியை  நீங்கள் பயன்படுத்த வேண்டும் மற்றும் இரண்டாவதாக, நீங்கள் கழிவறையைப் பயன்படுத்தாத நேரங்களில் அதன் கதவுகளைத் திறந்து வைத்திருக்க வேண்டும்.  இந்த இரண்டு காரணிகளும், குளிக்கும் போது உருவாகும் ஈரப்பதத்தையும் அதனோடு வரும் துர்நாற்றத்தையும் நீக்குவதற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கின்றன.

4. கழிவறையை அடிக்கடி பயன்படுத்தாமல் இருத்தல்

ஒரு வேளை உங்களது கழிவறை, விருந்தினர் மட்டும் பயன்படுத்தும் கழிவறையாக இருந்து, அதனை முறையாக சுத்தப்படுத்தப்படுத்தாமல் இருந்தால், கழிவறை கிண்ணத்தின் நீர்  ஆவியாகிவிடும். இதன் விளைவாக, கழிவறையின் குழாயிலிருந்து துர்நாற்றமான வாயுக்கள் வெளியேறத் தொடங்கும். கழிவறைக் கிண்ணத்தில் நீர் நிரப்புவதற்காக அதனை அடிக்கடி, ஃப்ளஷ் செய்து சுத்தப்படுத்துதலே இதற்கான எளிய தீர்வு.

உங்கள் கழிவறையில் வீசக்கூடிய துர்நாற்றத்திற்கான பல்வேறு காரணங்களைப் பற்றி இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும். மேலே குறிப்பிட்டிருக்கும் உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தி துர்நாற்றத்தினை சரி செய்திடுங்கள்!!

சிறப்பு உதவிக்குறிப்பு: உங்களது கழிவறையை மிகவும் சுகாதாரமாக, சுத்தமாக, இனிமையான நறுமணம் கொண்டதாகப் பராமரிக்க வேண்டுமானால், மூன்று நாட்களுக்கு ஒரு முறை உங்களது கழிவறையைச் சுத்தம் செய்திடுங்கள்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது