உங்கள் ஆடைகளை சரியான வழியில் துவைத்து சுத்தப்படுத்துவது எப்படி

உங்கள் துணிகளில் கிருமிகள் பரவி மாசுபடுத்துகிறதா? கவலை வேண்டாம். இதோ உங்கள் துணியை சிறந்த முறையில் துவைக்கவும், தூய்மைப்படுத்தவும் இந்த சலவை குறிப்புகளை பின்பற்றவும்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

How to Wash and Sanitise Your Clothes the Right Way
விளம்பரம்
Nature Protect Floor Cleaner - leaderboard

கிருமிகளிடமிருந்தும், நோய்தொற்றுகளிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளும் சிறந்த வழி, கைகளை நன்றாக கழுவுவதே என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒருவர் இருமினாலோ அல்லது தும்மினாலோ அதிலுள்ள கிருமிகள், 3 அடி தூரம் வரை பரவக்கூடும். அதுமட்டுமின்றி அவை மேற்பரப்புகள் மீதும் துணிகள் மீதும் படிய கூடும். எனவே துணிகள் மூலமாகவும் மறைமுகமாக கிருமிகள் பரவலாம். ஆகவே துணிகளை நன்றாக துவைத்து தூய்மைப்படுத்தும் வழிகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள உதவுகிறது.

இருமல், தும்மல் மற்றும் உமிழ் நீர் போன்ற உடல் திரவங்கள் மூலம் எளிதாக துணிகளில் கிருமிகள் தொற்று ஏற்படலாம். அவை தொடுவதன் மூலமும் ஏற்படலாம். அதாவது ஒருவர் அவரின் கைகளில் தும்மி விட்டு அந்த கைகளை உங்கள் ஆடையின் மேல் வைத்தால், உங்கள் ஆடையில் கிருமிகள் தொற்றிக்கொள்ளும். அல்லது ஒருவர் இருமின இருக்கையில் மற்றொருவர் அமர்ந்தால் அந்த வகையிலும் கிருமிகள் துணிகளில் தொற்றிக்கொள்ளும். அதுமட்டுமின்றி உடல்நிலை சரியில்லாதவர்கள் அணிந்துள்ள ஆடைகளிலும், அவர்களை பராமரிப்பவர்கள் அணிந்துள்ள ஆடைகளிலும் கிருமிகள் தொற்று ஏற்படலாம். துணிகளின் மூலம் எவ்வாறு கிருமிகள் பரவுகின்றன என்பதனை வல்லுநர்கள் ஆராய்ந்து வருகிறார்கள், எனினும், நம்மால் முடிந்தவரை நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக துணிகளை தினமும் துவைத்து தூய்மைப்படுத்த வேண்டும். அதிக ஆபத்துள்ள துணிகளை தனியாக பிரித்து தனியாக தூய்மைப்படுத்த வேண்டும்.

உங்கள் துணிகள் மீது கிருமிகள் பரவாமல் இருக்க முதலில் உடல்நிலை சரியில்லாதவர்களின் அருகில் செல்வதை தவிர்க்கவும். எந்தவித நோய் அறிகுறி இல்லை என்றாலும் முடிந்தவரை அனைவரிடமிருந்தும் இரண்டு அடி தள்ளி இருக்கவும். அவ்வாறு செய்ய முடியாத பட்சத்தில் உங்கள் துணிகளை தினமும் துவைத்து தூய்மைப்படுத்த வேண்டும்.

உங்கள் துணிகளை சுத்தப்படுத்த சில எளிதான குறிப்புகள் இங்கே:

நோய்வாய்ப்பட்டவர்களின் துணிகளை துவைக்கும் போதும், சுகாதார ஊழியர்களின் துணிகளை துவைக்கும் போதும், டிஸ்போசபிள் கையுறைகளை அணிந்து கொள்வது நல்லது. உபயோகப்படுத்திய பின் அந்த கையுறைகளை அப்புறப்படுத்த வேண்டும், பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவ வேண்டும். உங்கள் கைகளை சோப்பு பயன்படுத்தியும் கழுவலாம், அல்லது ஆல்கஹால் கொண்ட சானிடைஸரை பயன்படுத்தியும் சுத்தம் செய்யலாம். இதற்கு நீங்கள் லைஃப் பாய் சானிடைஸரை உபயோகப்படுத்தலாம்.

விளம்பரம்
Nature Protect Floor Cleaner - mpu

1) துணிகளை துவைப்பது எப்படி

சாதாரணமான சலவை துணிகளை (அதிக ஆபத்தற்றவை) வழக்கம்போல் சாதாரண சலவை சுழற்சியில் ஒரு நல்ல சோப்பு தூளைக் கொண்டு துவைக்கவும். இதற்கு நீங்கள் ஸர்ஃப் எக்ஸல் மேடிக் லிக்விட் போன்ற சோப்பு தூளை பயன்படுத்தலாம். ஏனென்றால் இவை மெஷின்களுக்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது. திரவமாக இருப்பதினால் இது நன்றாக தண்ணீரில் கரைந்து, மற்ற சோப்பு தூள் போலல்லாமல், எந்த ஒரு (பொடி போன்ற) மிச்சத்தையும் துணிகளின் மீது படிய விடாது.

அதிக ஆபத்தான துணிகளை சுடுதண்ணியில் துவைப்பது நல்லது. இவை சுகாதாரத்தை மேம்படுத்த உதவும். ஏதேனும் கறைகள் இருந்தால், முதலில் சாதாரண நீரில் அலசி கறைகளை நீக்கிக் கொள்ளலாம். அதிக ஆபத்தான துணிகள் என்பது என்னவென்றால், நோய் தொற்று இருப்பவரிடம் அருகில் இருந்தாலோ (குறிப்பாக நம்முடன் இருப்பவர்கள்) அல்லது (ரத்தம், சிறுநீர், கழிவு, வாந்தி, போன்றவை) துணிகளில் பட்டிருந்தாலோ அவை ஆபத்தான துணிகள் எனப்படும். துணிகளை மட்டுமின்றி அலமாரியும் நன்றாக சுத்தம் செய்து ஒழுங்குபடுத்த வேண்டும். அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது இங்கே உள்ளது.

அதிக ஆபத்துள்ள பொருட்கள் இதோ:

  • துண்டுகள் மற்றும் படுக்கை விரிப்புகள்

  • மருத்துவ சீருடைகள்

  • நோய்த்தொற்று ஏற்பட்டவரின் ஆடை

இந்த துணிகளை மற்ற துணிகளுடன் சேர்க்காமல் தனியாக துவைப்பது நல்லது. இவற்றை துவைத்த பின் சானிடைஸரை கொண்டு சுத்தப்படுத்தலாம். இதற்கு நீங்கள் லைஃப் பாய் லாண்டரி சானிடைஸரை உபயோகிக்கலாம். இதை சோப்பு தூளுடன் சேர்க்கக்கூடாது. மேலும் தெரிந்து கொள்ள அட்டையின் மேல் இருக்கும் குறிப்புகளை படித்து பின்பற்றவும்.

உங்கள் துண்டுகளையும் படுக்கை விரிப்புகளையும் வாஷிங் மெஷின்களில் துவைக்க எண்ணினால், கூடுதலாக அலசக் கூடிய அதிக நேரம் துவைக்க கூடிய அமைப்பை தேர்வுசெய்யவும். சிறந்த முறையில் சுத்தம் செய்வதற்கு, உங்கள் மெஷினில் அதிக துணிகளை கொண்டு அடைக்க வேண்டாம். கம்மியான அளவு துணிகளை போட்டு அதன் எளிதான சுழற்சிக்கு வழிவகுக்கவும்.

2) துணிகளை உலர்த்துவது எப்படி

நீங்கள் துணிகளை மடித்து வைக்கும் பொழுது அதில் கொஞ்சம் கூட ஈரப்பதம் இருக்கக் கூடாது, அப்படி இருந்தால் கிருமிகள் எளிதில் பரவிவிடும். துணிகளை நன்றாக சூரிய ஒளியில் உலர்த்தவும். அப்படி செய்ய முடியாத பட்சத்தில், வீட்டின் உள்ளே உலர்த்துவதுதான் ஒரே வழி என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றவும்:

  • உலர்த்தும் ராக்கில் துணிகளை தொங்கவிட்டு நேரடி சூரிய ஒளியின் கீழ் வைக்கவும்.

  • அதிக காற்றோட்டம் கிடைப்பதற்கு ஜன்னல்களை திறந்து வைக்கவும்.

  • எளிதாக உலர்த்துவதற்கு கோட் ஹேங்கர்களில் துணிகளை தொங்கவிடலாம்

  • நீங்கள் அதிகமாக புழங்கக்கூடிய இடங்களில் துணிகளை காய வைக்கவும் அப்பொழுதுதான் துணிகள் மீது கிருமிகள் பரவாமல் இருக்கும். வீட்டின் முகப்பு பகுதியையும் படுக்கை அறையையும் பயன்படுத்த வேண்டாம்.

உங்களிடம் டம்பில் ட்ரையர் இருந்தால், அதில் அதிகபட்ச உலர்த்தும் சுழற்சியை தேர்வு செய்யவும். அப்பொழுதுதான் துணிகள் நன்றாக உலர்ந்து கிருமிகள் இல்லாமல் இருக்கும். மேலும் நீங்கள் புதிய பெற்றோராக இருப்பின், குழந்தைகளின் ஆடைகளை கிருமிகள் இல்லாமல் வைத்திருக்க உங்களுக்கு தேவையான குறிப்புகள் இங்கே உள்ளன.

3) உங்கள் ஆடைகளை எப்போது துவைக்க வேண்டும்

நீங்கள் ஒரு நோய் தொற்று உள்ளவரின் அருகில் சென்று இருந்தாலோ (அதிக கூட்டமான பகுதிகளில் சென்றிருந்தாலோ) அல்லது அதிக ஆபத்து உடைய இடமான மருத்துவமனை போன்றவற்றிற்கு சென்றிருந்தாலோ நீங்கள் வீடு திரும்பியவுடன் துணிகளை துவைப்பது மிகவும் முக்கியமாகும். அழுக்குத் துணி கூடையில் துணிகளை போடுவதை தவிர்க்கவும். ஏனென்றால் கிருமிகள் பரவக் கூடும்.

பொதுவாக வெளியே உடுத்தி சென்ற உடைகளை மற்றொருமுறை, துவைப்பதற்கு முன் அணியக்கூடாது. அதேபோன்று வீட்டில் உடுத்தும் உடைகளை அடிக்கடி துவைத்து சுத்தம் செய்ய வேண்டும். உங்கள் வீட்டின் திரைச்சீலை அழுக்கு படிந்துள்ளதா, இதோ அதை சுத்தம் செய்ய எளிய கையேடு.

4) உங்கள் வாஷிங்மெஷினை எவ்வாறு சுத்தம் செய்வது

நீங்கள் உங்கள் துணிகளை வாஷிங் மெஷினில் சலவை செய்தால், உங்கள் வாஷிங்மெஷினை சுத்தம் செய்ய மறக்க வேண்டாம். உங்கள் வாஷிங்மெஷின் அசுத்தமாக இருந்தாலோ கிருமிகளை கொண்டிருந்தாலோ அது மற்ற ஆடைகளிலும் பரவிவிடும். உங்கள் வாஷிங்மெஷினை சுத்தமாக வைத்துக்கொள்ள இந்த குறிப்புகளை பின்பற்றவும். வாஷிங்மெஷினில் துவைத்த பின் அதன் மேல் மூடியை அரை மணி நேரமாவது திறந்து வைக்க வேண்டும், அப்பொழுதுதான் அதில் காற்றோட்டம் கிடைக்கும். மேலும் உங்களுக்கு படிப்படியான வீடு சுத்தம் செய்யும் அட்டவணை மற்றும் சரிபார்க்கும் பட்டியல் தேவைப்பட்டால் இந்த கையேட்டை பின்பற்றவும்.

முக்கிய குறிப்புகள்

  • துவைப்பதற்கு முன் எந்த காரணத்தைக் கொண்டும் துணிகளை முகர்ந்து விடாதீர்கள். அதிலுள்ள கிருமிகள் உங்களை தாக்கக்கூடும். துவைக்கும் வரை துணிகளை தூரமாகவே வைத்திருங்கள் அருகில் நெருங்கி செல்ல வேண்டாம்.

  • உங்கள் வீட்டில் யாரேனும் நோய்வாய் பட்டிருந்தால் அவர்களிடம் துண்டுகளையும், நாப்கின் களையும் முகம் துடைக்கும் துணிகளையும் பகிர வேண்டாம்.

  • அழுக்கு துணிகளை தொட்டுவிட்டால் உடனடியாக கைகளை கழுவ வேண்டும் முகத்தில் எந்த காரணத்தைக் கொண்டும் கையை வைத்து விடாதீர்கள்

  • சலவை துணிகள் அனைத்தும் நன்றாக உலர்ந்து விட்டதா என்பதனை உறுதி படுத்திக் கொள்ளுங்கள் ( ஈரப்பதம் அதிகமுள்ள துணிகளில் கிருமிகள் எளிதாக பரவக்கூடும்)

இந்த எளிதான குறிப்புகளை பின்பற்றி உங்கள் சலவை துணிகளை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தை கிருமிகளிடமிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஆதாரங்கள்:

https://www.cdc.gov/coronavirus/2019-ncov/faq.html#Healthcare-Professionals-and-Health-Departments

https://www.cdc.gov/coronavirus/2019-ncov/prevent-getting-sick/disinfecting-your-home.html

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது