
குழந்தை சுவற்றில் கிறுக்குவதை நீக்குவது ஒவ்வொரு பெற்றோருக்கும் பெரிய சவால். உங்கள் குழந்தையின் வரைகலையை நீங்கள் பாராட்டினாலும். அதை நீக்குவது பெரிய கஷ்டம். கவலை வேண்டாம். அவற்றை சுவற்றிலிருந்து சுலபமாக நீக்குவதற்கு ஒரு எளிய வழி.
உட்புறச் சுவர்களுக்காக பல வகையான பெயிண்டுகள் இருக்கின்ரன. மேட், சாட்டின், செமி க்ளோஸ் மற்றும் க்ளோஸ். இவை எல்லாம் உங்கள் குழந்தைக்கு ஒரு கலைப் பட்டறையாக இருக்கிறது. குழந்தைகள் தங்களது படைப்புத்திறனை வளர்க்க ஊக்குவிக்க வேண்டும் எ ன்றாலும், அவர்கள் சுவற்றில் தமது கைவண்ணத்தைக் காட்டும்போது சுவர்கள் அழகை இழந்துவிடும், அல்லவா?இந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் சுவற்றை மீண்டும் பழைய வண்ணத்திற்கு கொண்டு வாருங்கள்.
1) க்ளீனிங் சொல்யூஷன் பயன்படுத்தவும்
ஒரு வாளியில் வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் டிஷ்வாஷ் லிக்விடை விடவும். ஒரு சுத்தமான துணியை எடுத்து அந்தக் கரைசலில் நனைத்து அதிகப்படியான தண்ணீரைப் பிழியவும். பிறகு அந்த துணியால் சுவற்றில் இருக்கும் கிரேயான் நிறங்களை சுலபமாக துடைத்து நீக்கவும்.
2) கிளாஸ் க்ளீனர் பயன்படுத்தவும்
சுவற்றில் கறை இருக்கும் பகுதியில் கிளாஸ் க்ளீனரை ஸ்ப்ரே செய்யவும். அதை 20 நிமிடங்கள் அப்படியே விட்டு வைக்கவும். இந்த கிளாஸ் க்ளீனர் சுவற்றில் இருக்கும் கிரேயான் அடையாளங்களை தளர்த்தும். பிறகு துடைக்கும் துணி மூலம் சுவற்றிலுள்ள கறையை துடைத்து நீக்கவும்.

3) வீட்டில் தயாரித்த க்ளீனிங் பேஸ்ட் பயன்படுத்தவும்
1கப் பேக்கிங் சோடா மற்றும் 1கப் தண்ணீர் சேர்த்த பசையை தயாரிக்கவும். இந்தக் கலவையில் ஸ்பாஞ்சை நனைத்து சுவற்றில் கிரேயான் அடையாளங்கள் உள்ள கறையின் மீது பூசி நீக்கவும். இந்த பசை சுவற்றில் படியும். ஆனால் இதை சோப்புத் தண்ணீர் பயன்படுத்தி சுத்தம் செய்து விடலாம்.
இந்த குறிப்பு பெரும்பாலான பெயிண்ட்டுகள் மீது செயல்படும். இருந்தாலும் சுவற்ற ில் ஒரு சிறு பகுதியில் போட்டு பரிசோதிக்கவும். குறிப்பாக மறைந்திருக்கும் ஓரங்களில். இதன் மூலம் மோசமான விளைவுகளைத் தவிர்க்கலாம்.
குழந்தைகள் குழந்தைகளாகத் தான் இருப்பார்கள். அவர்கள் கிறுக்குவது சகஜம்தான். ஆனால் இந்த குறிப்புகளைப் பயன்படுத்தினால் உங்கள் சுவர்களை சுலபமாக சுத்தம் செய்து விடலாம்.