
உங்களுடைய வழிபாட்டு அறை அல்லது பூசை அறை என்பது உங்கள் வீட்டின் நேர்மறைச் சக்தியின் மையப்பகுதியாகும். குறிப்பாக லட்சுமி பூசை போன்ற தருணங்களில். இந்த நேரங்களில்தான் தேவி லட்சுமியை வணங்குவதற்கு உங்களுடைய பூசைக்குரிய பொருள்கள் அனைத்தையும் பயன்படுத்துகிறீர்கள். அப்போது உங்களுடைய பயன்பாட்டு பொருள்கள் யாவும் அப்பழுக்கின்றி பளபளப்பாக ஒளி வீச வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். அதற்காக என்ன செய்வது என்றறியாமல் தவிக்கும் தவிப்பை நாங்கள் நன்கறிவோம். எனவேதான் நாங்கள் உங்களுக்க ு உதவுவதற்காகவே சில குறிப்புகளை இங்கே படைக்கின்றோம்.
இந்த குறிப்புகளைக் கொண்டு சுத்தம் செய்யுங்கள். உங்களுடைய சிலைகள் மற்றும் வெள்ளி. செப்பு, பித்தளை பூசை துணைப்பொருள்கள் புத்தம்புதியது போல் பொலிவுடன் திகழும்.
உங்களுடைய வெள்ளி, செம்பு மற்றும் பித்தளை சாமான்களைக் கழுவிய பிறகு, உடனடியாக ஒரு மெல்லிய துணி கொண்டு சுத்தமாக துடைத்துவிடவும்.
1) வெள்ளி விக்கிரகங்கள் மற்றும் நாணயங்கள்
வெந்நீர்
ஒரு பெரிய எஃகு பாத்திரத்தில், 2 கிண்ணம் தண்ணீர் ஊற்றவும் மற்றும் நடுத்தர வெப்பநிலையில் 2 நிமிடங்களுக்கு சூடாக்கவும். இதற்கிடையில் அலுமினிய தகடை சிறு சிறு துண்டுகளாக்கி அதில் போடவும். இப்போது கவனமாக உங்களுடைய வெள்ளி சிலைகளை பாத்திரத்தில் இடவும் மற்றும் 5 நிமிடங்களுக்கு தண்ணீரை கொதிக்கவிடவும். பின்னர் தீயை அணைத்துவிட்டு தண்ணீர் ஆற காத்திருக்கவும். தண்ணீர் முற்றிலுமாக ஆறிய பிறகு, வெள்ளி பொருள்களை வெளியே எடுத்து ஒரு சுத்தமான துணிகொண்டு துடைத்து சுத்தம் செய்யவும்.

புளி
புளிச்சாற்றையும் உபயோகிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் . உங்களால் முடியும். முயற்சி செய்து பாருங்கள். நீங்களே வியப்படைவீர்கள். ஒரு அரை கிண்ணம் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதில் ஒரு கைப்பிடி அளவு புளி சேர்க்கவும். 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு தேய்க்கும் பேடு கொண்டு இந்த கரைசலில் தோய்த்தெடுத்து வெள்ளி பரப்பை சுத்தம் செய்யவும். பின்னர் 5 நிமிடங்கள் கழித்து சாதாரண தண்ணீர் கொண்டு கழுவவும்.
2) செம்பு துணைப்பொருள்கள்
எலுமிச்சை மற்றும் உப்பு
உங்களுடைய செம்பு பொருள்கள் மீது படிந்துள்ள பச்சை நிற கறைகளை நீக்குவதற்கு, ஒரு எலுமிச்சையை இரண்டு பாதியாக வெட்டிக் கொள்ளவும். மற்றும் ஒரு தட்டில் 2 தேக்கரண்டி உப்பு எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சையை உப்பில் தோய்த்து எடுத்து கறைகள் மீது தேய்க்கவும். ஒரு 5 நிமிடம் தேய்த்து பிறகு சாதாரண தண்ணீரில் கழுவவும். பொருள்கள் யாவும் வாங்கும்போது இருந்த நிலை போன்று பிரகாசிப்பதை கண்டு நீங்கள் மெய்மறந்து போவீர்கள்.
வினிகர்
மற்றொரு மாற்று வினிகர் ஆகும். உங்களுடைய செம்பு பூசைப் பொருள்கள் மீது படிந்துள்ள எந்ததக் கறைகளையும் நீக்க நீங்கள் இதனை உபயோகிக்கலாம். ஒரு கிண்ணத்தில் 1 கப் வினிகர் எடுத்துக் கொள்ளவும் மற்றும் 4 தேக்கரண்டி உப்பு சேர்க்கவும். ஒரு தேய்க்கும் பேடு கொண்டு இந்த பசையை உபயோகித்து மொத்த பரப்பை தேய்த்து சுத்தம் செய்யவும். பின்னர் ஒரு நிமிடங்கள் கழித்து சாதாரண தண்ணீர் கொண்டு கழுவவும் மற்றும் ஒரு சுத்தமான துணி கொண்டு துடைத்து உலரவிடவும்.
3) பித்தளை பொருள்கள்
தட்டுகள், விளக்குகள், கண்ணாடிகள் போன்ற உங்களுடைய பித்தளை பொருள்கள் மீது படிந்துள்ள கறைகளை நீக்க, ஒரு கிண்ணத்தில் ஃப்ரஷ் டொமேட்டோ கெச்அப் கொஞ்சம் எடுத்துக்கொள்ளவும். ஒரு மென்மையான ப்ரிஸ்டில்கள் கொண்ட ஒரு பிரஷ் கொண்டு பித்தளை சாமான்கள் மீது தடவி தேய்க்கவும். பின்னர் பத்து நிமிடங்கள் கழித்து சாதாரண தண்ணீர் கொண்டு கழுவவும் மற்றும் ஒரு சுத்தமான மெல்லிய துணி கொண்டு துடைத்து உலரவிடவும்.
உங்களுடைய பூசை அறை வழிபாடு செய்வதற்காக சுத்தமாக ஆகிவிட்டது, ஒவ்வொரு பொருளும் பளபளப்புடன் தீபாவளியை வரவேற்க தயாராகிவிட்டன. நீங்கள் உங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுங்கள்.