உங்கள் கைகளை சரியான முறையில் கழுவுவது எப்படி

கை கழுவுதல் நல்ல சுகாதாரப் பழக்கமாகும் மற்றும் கிருமிகள் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது, ஆனால் அது சரியான முறையில் செய்தால் மட்டுமே அது செயல்படும். உங்கள் கைகளை சரியாகக் கழுவுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த இந்த படிப்படியான வழிகாட்டியைப் பயன்படுத்தவும்!

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

How to Wash Your Hands the Right Way
விளம்பரம்
Nature Protect Floor Cleaner - leaderboard

கை கழுவுதல் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். கிருமிகள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நீங்கள் வழங்கக்கூடிய முதல் மற்றும் எளிய பாதுகாப்பு இது. ஏனென்றால், முன்னணி தேசிய சர்வதேச சுகாதார அமைப்புகளின் கூற்றுப்படி, யாராவது இருமல் அல்லது தும்மும்போது, ​​அவர்கள் வெளியிடும் எச்சில் துளிகள் 3 அடி வரை பயணிக்கும். இவை அருகிலுள்ள மேற்பரப்புகளிலும் படியக்கூடும், இவைகளில் உங்கள் கைகள் நாள் முழுவதும் பட்டுக்கொண்டிருக்கும். நீங்கள் கைகளை கழுவாமல் உங்கள் முகத்தைத் தொட்டால், உங்களுக்கு நோய் தொற்று எளிதாக ஏற்படலாம். அதனால்தான் உங்கள் கைகளை அடிக்கடி முறையாக கழுவவுவது முக்கியம்.

உங்கள் கைகளை எவ்வளவு முறை கழுவ வேண்டும்?

முடிந்தவரை அடிக்கடி உங்கள் கைகளை கழுவுவது நல்லது.

உணவு தயாரித்தல், சாப்பிடுவது, குளியலறையைப் பயன்படுத்துதல், உங்கள் முகத்தை (கண்கள், மூக்கு, வாய்) தொடுவது, இருமல் அல்லது தும்மல், வெளியேறி வீடு திரும்புவது, சுத்தம் செய்தல், இன்னொருவருக்கு உதவுதல் போன்ற சில பணிகளுக்கு முன்னும் பின்னும் உங்கள் கைகளை எப்போதும் கழுவ வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. 

நீங்கள் சோப்பு அல்லது சானிடிசரைப் பயன்படுத்த வேண்டுமா?

சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு உங்கள் கைகளை கழுவுவது மிகவும் பயனுள்ள வழியாகும். நீங்கள் பயணம் செய்கிறீர்கள் அல்லது சோப்பு மற்றும் தண்ணீர் உங்களிடம் இல்லை என்றால், மேற்பரப்பைத் தொட்டபின் அல்லது பணத்தை கையாண்டபின்னும், குளியலறையைப் பயன்படுத்தி அல்லது சக ஊழியர்களுடன் கைகுலுக்கிய பின்னரும் உங்கள் கைகளை சுத்தம் செய்ய விரும்பினால், நீங்கள் சானிடைசரை பயன்படுத்தலாம், இது திறம்பட வேலை செய்யும். இதுபோன்ற சூழ்நிலைகளில் உங்கள் கைகளை சுத்தம் செய்ய லைஃப் பாய் போன்ற ஆல்கஹால் அடிப்படையிலான கை சானிடைசரைப் பயன்படுத்தலாம்.

விளம்பரம்
Nature Protect Floor Cleaner - mpu

உங்கள் கைகளை எவ்வாறு முறையாகவும் முழுமையாகவும் கழுவ முடியும் என்பதை இந்த படிகள் உங்களுக்குக் காட்டுகின்றன.

படி 1: உங்கள் கைகளை நனைத்து சோப்பை தடவவும்

உங்கள் கையின் முழு மேற்பரப்பையும் மறைக்க போதுமான நுரையை உருவாக்குங்கள். கட்டைவிரல் முழுவதும், விரல்களுக்கு இடையில், நகங்களுக்கு அடியில் மற்றும் உங்கள் கைகளின் பின்புறத்தில் சோப்பை தடவ முயற்சிக்கவும். குறைந்தது 20 விநாடிகளுக்கு உங்கள் கைகளை சோப்பு போட்டு முடிந்தவரை தேய்த்தால் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்பதை உறுதிசெய்யும்.

படி 2: உங்கள் உள்ளங்கைகளை கழுவவும்

உங்கள் கைகளை உள்ளங்கையில் மற்றொரு உள்ளங்கையால் அழுத்தி தேய்க்கவும், முதலில் ஒரு கையால் மற்றொன்றுக்கு மேல், பின்னர் கைகளை மாற்றி தேய்க்கவும். 

படி 3: உங்கள் விரல்களை கழுவவும்

உள்ளங்கைகளை இணைத்து உங்கள் விரல்களின் அடிப்பகுதியை சுத்தம் செய்ய உள்ளங் கையை ஒன்றோடு ஒன்றை தேய்க்கவும். பின்னர், உங்கள் விரல்களை கையின் பின்புறத்திலிருந்து ஒன்றிணைக்கவும், அதாவது, உங்கள் வலது கையின் உள்ளங்கையை இடது கையின் பின்புறம் வைத்து, உங்கள் விரல்களின் மேல் தேய்க்கவும். பிறகு கைகளை மாற்றவும்.  

படி 4: உங்கள் கட்டைவிரலைக் கழுவவும்

உங்கள் இடது கையால் உங்கள் வலது கை முஷ்டியை மெதுவாக முன்னும் பின்னுமாக திருப்பவும். மற்ற கட்டைவிரலுக்கு மீண்டும் செய்யவும்.

படி 5: உங்கள் விரல் நகங்களின் கீழ் தேய்க்கவும்

உங்கள் இரு கைகளையும் பயன்படுத்தி அல்லது பிரஷ்ஷை பயன்படுத்தி, உங்கள் விரல் நகங்கள் மற்றும் நகக்கண்களை சுற்றி சுத்தம் செய்யுங்கள். பிறகு அடுத்த கைக்கு மாற்றுங்கள்.

படி 6: உங்கள் கைகளை உலர வைக்கவும்

சுத்தமான துண்டைப் பயன்படுத்தி உங்கள் கைகளை நன்கு உலர வைக்கவும். அவற்றை உலர்த்துவதற்கு உங்கள் கைகளை உங்கள் துணிகளில் தேய்ப்பதைத் தவிர்க்கவும்.  

கைகளை கழுவுவது ஒரு எளிய செயல். ஆனால் நோயை உருவாக்கும் கிருமிகள் பரவாமல் தடுக்க சரியான முறையில் கழுவுவது முக்கியம். சுத்தமாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள்!

முக்கியமான படி: 

உங்களுக்கு குழந்தைகள் இருந்தால், கைகளை கழுவும்போது அவர்கள் பாடக்கூடிய 20 விநாடிகள் பாடலை உருவாக்க முயற்சிக்கவும். உதாரணமாக, அவர்கள் இரண்டு முறை ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ பாடலைப் பாடிக்கொண்டே கைகளைக் கழுவலாம்.

ஆதாரம்:

https://www.who.int/news-room/q-a-detail/q-a-coronaviruses

https://www.cdc.gov/handwashing/show-me-the-science-hand-sanitizer.html

https://www.cdc.gov/handwashing/when-how-handwashing.html

https://www.nhs.uk/video/pages/how-to-wash-hands.aspx

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது