வீட்டிலிருந்து வேலை செய்யும் போது அதிக உற்பத்தி செய்வது எப்படி

நீங்கள் வேலைக்கு செல்லும் தாயாக இருந்தாலோ அல்லது ஒரு குடும்பத்தை கவனித்துக்கொள்ளும் பொறுப்பில் இருப்பவராக இருந்தாலோ, உங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வது சில சமயம் பெரிய பாரமாக அமைந்து விடும். கவலை வேண்டாம் உங்களுக்காக சில அற்புதமான உதவிக் குறிப்புகளை அளித்துள்ளோம், இதை முயற்சித்து உங்கள் நேரத்தை சிறந்த முறையில் செலவு செய்து, உங்கள் வேலைத்திறனை பல மடங்கு பெருக்கவும்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Are You Working from Home? Here’s How to be Productive and Make the Most of Your Time
விளம்பரம்
Nature Protect Floor Cleaner - leaderboard

வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் அதன் நன்மைகளையும் குறைபாடுகளையும் நன்கு அறிவார்கள். ஒருபுறம் பயணநேரம் குறையும்,  நாம் அதிக நேரம் நம் குடும்பத்தோடு செலவிடலாம்,  ஆனால் மறுபுறம் வீட்டு வேலைகள் அதிகமாக இருக்கும். பணிக்கு இடையே வீட்டு வேலைகளையும் கவனித்து கொள்வது சிரமமான ஒன்றாகும். எனவே நீங்கள் வீட்டில் இருந்து வேலை செய்கிறீர்கள் என்றால் இவை இரண்டிற்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து, திறம்பட உங்கள் வேலைகளை செய்து முடிக்க வேண்டும்.

இந்த கட்டுரையில் நீங்கள் இதை திறம்பட எவ்வாறு செய்யலாம் என்பதற்கான உதவிக் குறிப்புகளை வழங்கியுள்ளோம்.

1) வேலை செய்வதற்கென்று ஒரு தனி இடத்தை ஒதுக்கவும்

நீங்கள் சிறிது காலத்திற்கு வீட்டிலிருந்தே வேலை செய்யவேண்டிய நிலைமை இருந்தால், உங்களுக்காக ஒரு தனி இடத்தை ஒதுக்கி கொள்வதே நல்லது. உங்கள் படுக்கை அறையிலோ அல்லது பொதுவான சோஃபாவிலோ அமர்ந்து வேலை செய்வதை தவிர்க்கவும். உங்களுக்கான ஒரு தனிப்பட்ட பணியிடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும், அந்த இடம் அமைதியானதாகவும், பிளக் பாயிண்ட் கொண்டதாகவும் இருப்பது நல்லது. முடிந்த அளவு, அவ்விடத்தின் கதவை மூடியே வைக்கவும், இது உங்கள் கவனம் சிதறாமல் இருக்க உதவும்.

2) தொழில் நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தவும்

வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு இணையதள இணைப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும். பல நேரங்களில், அவை பெரும் சிக்கல்களை உண்டாக்கிவிடும். எனவே நீங்கள், உங்களிடம் நல்ல இணையதளம் மற்றும் வைஃபை இணைப்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் உங்கள் முதலாளியிடமோ அல்லது வாடிக்கையாளரிடமோ முன்கூட்டியே ரிமோட் சர்வரை பெற்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆப்களை அப்டேட் செய்து கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி உங்களிடம் ஹெட்போன்கள், சார்ஜர்கள் பென்டிரைவ்கள் மற்றும் ஹார்ட் வேர்கள் தயாராக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

விளம்பரம்
Nature Protect Floor Cleaner - mpu

பணிக்காக உபயோகித்துக் கொள்ள  , தனியாக ஒரு தொலைபேசி எண்ணை வைத்துக் கொள்ளவும். ஏனென்றால் வேலை நேரத்தில் உங்கள் தனிப்பட்ட தொலைபேசி எண்ணை தேவைப்படும்போது ம்யூடில் வைத்துக்கொள்ளலாம்.

3) நிலையான வேலை நேரத்தை கடைபிடிக்கவும்

நீங்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதால் , உங்கள் குடும்பத்தை கவனிக்கவும், வீட்டு வேலைகளைச் செய்யவும் வேண்டியுள்ளது. முடிந்தவரை அலுவலகப் பணியை மேற்கொள்ளும் பொழுது, அதிகமான வீட்டு வேலைகள் செய்வதை தவிர்க்கவும். உங்கள் அலுவலகப் பணியை செய்வதற்கென்று அழகாக திட்டமிட்டு நேரத்தை ஒதுக்கி கொள்ளவும். மேலும் பணியின் தொடக்க நேரத்தையும் முடிக்கும் நேரத்தையும் திட்டமிட்டு வைத்துக் கொள்ளவும்.

அதிகாலை நேரங்களையும் பின்னிரவு நேரங்களையும் உங்கள் பணி செய்வதற்கு உபயோகித்துக் கொள்ளலாம், ஏனென்றால் அந்த நேரங்களில் வீடு மிகவும் அமைதியாக இருக்கும். நீங்கள் அதிகமாக வேலை பார்க்கக் கூடிய நேரமும் காலமும் அமைந்தால் அதை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும். உங்கள் பணியிடத்தில் செய்வது போலவே, சரியான நேரங்களில் மதிய உணவு , காபி போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும்.

சாயங்கால நேரங்களை, உங்கள் குடும்பத்திற்காகவும் , சமைப்பதற்கும்,  வீட்டு வேலைகளை செய்வதற்கும் வைத்துக் கொள்ளுங்கள்.வீட்டு வேலைகளை செய்வதற்கு முன்னும் பின்னும் உங்கள் கைகளை கழுவ மறக்காதீர்கள்.

4) ஒரே வழக்கத்தை கடைபிடிக்கவும்

உங்கள் நாளை, வழக்கமான வேலை நாளை போல் தொடங்கவும். குளித்து, சிற்றுண்டி முடித்து, பணியை மேற்கொள்ள அமரவும். தேவைப்பட்டால் நீங்கள் உங்கள் வேலைக்கு உடுத்தும் உடைகளை அணிந்து கொள்ளலாம். இவ்வாறு  செய்து, உங்களை நீங்கள் பணிக்கு ஆயத்தப் படுத்திக் கொள்ளலாம். மேலும் நீங்கள் கான்ஃபரன்ஸ் காலிலோ வீடியோ காலிலோ பேசுவதற்கு இது வசதியாக இருக்கும்.

உங்கள் வேலை நேரம் முடிந்ததும் வீடு உடைகளுக்கு மாறிக்கொள்ளலாம். இந்த வழக்கமானது, உங்கள் பணி நேரத்தை வீட்டு நேரத்திலிருந்து வேறு படுத்த உதவும். உங்களுக்கு சிறிய குழந்தை இருந்தால் அக்குழந்தை உங்களுடைய இந்த வேறுபாட்டை கண்டு நீங்கள் பணி நேரத்தில் இருப்பதை அறிந்து கொள்ளும்.

5) உங்கள் குடும்பத்தினருக்கு எடுத்துக்கூறுங்கள்

உங்கள் வீட்டில் குழந்தைகளோ அல்லது பெரியவர்களோ  இருந்தால் அவர்களுக்கு உங்கள் வேலையின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்துங்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், அவர்களுடன் நேரத்தை செலவு செய்யவும், உங்கள் பணிகளுக்கு இடையே சில நேரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள். உங்கள் கணவரோ மனைவியோ வீட்டிலிருந்து வேலை செய்பவராக இருந்தால், வீட்டு வேலைகளை எவ்வாறு பிரித்துக் கொள்வது என்பதனை இருவரும் பேசி பகிர்ந்து கொள்ளுங்கள். வீட்டில் இருப்பவர்களின் புரிந்துக் கொள்ளுதல் மற்றும் ஒத்துழைப்பு இருந்தால் நீங்கள் உங்கள் பணியை முழுமனதோடு சிறந்த முறையில் செய்து முடிக்க முடியும்.

இந்த அருமையான உதவிக்குறிப்புகள் , நீங்கள் வீட்டிலிருந்து வேலை  செய்யும் அனுபவத்தை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும்,உபயோகமுள்ளதாகவும்  மாற்றும்  என நம்புகிறோம்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது