துவைத்த பிறகு பருத்தி சட்டை சுருங்குகிறதா?

பருத்தி துணிகளை துவைக்கும்போது நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் அவை சுருங்கக்கூடும். உங்கள் பருத்தி சட்டைகளை துவைக்க சரியான வழியை இந்த கட்டுரை உங்களுக்கு சொல்கிறது.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Worried your cotton shirt will shrink after wash? Here’s what you can do
விளம்பரம்
Comfort core

பருத்தி சட்டைகள் கோடைகாலத்தில் உபயோகப்படுத்தும் ஒரு பிடித்தமான உடையாகும். அவை குறைந்த எடை கொண்டது, காற்றோட்டம் உடையது மற்றும் சுமக்க எளிதானது. ஆனால் அவற்றை கவனமாக கையாள வேண்டும். பெரும்பாலான நேரங்களில், சுருங்கி விடுமோ என்ற பயம் காரணமாக அவற்றை துவைக்கும் சுழற்சியை நீங்கள் ஒத்தி வைக்கக் கூடும். பருத்தி ஆடைகளை பொறுத்தவரை, அவை சுருங்குவதைத் தடுக்க நீங்கள் ஒரு முறையான சலவை முறையைப் பின்பற்ற வேண்டும்.

உங்கள் பருத்தி ஆடைகள் சுருங்காமல் இருக்க உதவும் அற்புதமான உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம்.

1) சாதாரண நீரை பயன்படுத்துங்கள்

உங்கள் பருத்தி ஆடைகளை கைகளால் துவைக்கும் பொழுது, சாதாரண நீரைப் பயன்படுத்துங்கள். சூடான நீர் உபயோகப்படுத்தினால், துணி சுருங்கி நிறம் மங்கக்கூடும். சாதாரண நீரைப் பயன்படுத்துவது, வண்ணங்களை அப்படியே வைத்திருக்கும், மேலும் ஒவ்வொரு முறையும் துவைத்த பின் சட்டை புதியது போல் காட்சியளிக்கும்.

2) பராமரிப்பு லேபிளை படிக்கவும்

சலவை செயல்முறைக்கு முன், துவைக்கும் பராமரிப்பு வழிமுறைகளைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றை கவனமாகப் பின்பற்றுவதற்கும் நீங்கள் பராமரிப்பு லேபிளைப் படித்திருப்பதை உறுதிசெய்க.

விளம்பரம்
Comfort core

3) உலர்த்தும் முறை

துவைத்த பின், உங்கள் பருத்தி சட்டையை மிதமான நிழலில் காய வைக்கவும். நேரடி சூரிய ஒளியில் உலர்த்த வேண்டாம், ஏனெனில் அது நிறம் மங்கி, துணி சுருங்கக்கூடும்.

4) லேசான சோப்புத் தூள்

உங்கள் பருத்தி ஆடைகளை துவைக்கும் பொழுது, லேசான சோப்பு மற்றும் சாதாரண நீரைப் பயன்படுத்துங்கள். நீங்கள் சோப்பை நன்கு தண்ணீரில் கலக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். துணியைத் தேய்க்கும் போதும் அலசும் போதும் மென்மையான கை அசைவுகளைப் பின்பற்றுங்கள். துவைத்த பின், அதிகப்படியான தண்ணீரை மெதுவாக பிழிந்து விடுங்கள். இது சுருக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவற்றை கடினமாக முறுக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் பருத்தி சட்டைகளை கைகளால் துவைக்க, நீங்கள் சர்ப் எக்செல் ஈஸி வாஷை முயற்சி செய்யலாம்.

இந்த உதவிக்குறிப்புகள் மூலம், உங்கள் பருத்தி ஆடைகள் சுருங்குவதைத் தடுக்கலாம்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது