உங்கள் பருத்தி துணிகள் மங்கலாகாமல் பாதுகாத்திடுங்கள்! இதோ அதற்கான ஆற்றல் மிக்க குறிப்புகள்.

நீங்கள் அடுத்த முறை உங்கள் பருத்தி துணிகளை வாஷ் செய்யும் போது இந்த எளிய குறிப்புகளை பயன்படுத்துங்கள். உங்கள் பருத்தி துணிகளின் நிறம் மறுபடியும் ஒரு போதும் மங்காது.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Save Your Cotton Clothes from Fading! Try These Super Effective Tips
விளம்பரம்
Comfort core

இந்தியா போன்ற வெப்ப மண்டல மற்றும் ஈரப்பத நாட்டில் பருத்தி ஆடைகள் தான் நமக்கு வசதியாக இருப்பவை. அவை லேசாக இருப்பதோடு காற்று உட்புகும் தன்மை கொண்டவை. எனினும், தொடர்ந்து பயன்படுத்தும் போது அவை மங்கலாவது போல் தோன்றுகிறது. கவலைப்படாதீர்கள்  சில எளிய பராமரிப்பு வழிகள் மற்றும் சில விவேகமான குறிப்புகள் உதவியால் நீங்கள் அவற்றின் பிரகாசமான  நிறத்தை நீண்ட காலம் மாறாமல் வைக்கலாம். 

இதோ எப்படி என்று பார்ப்போம்!

1) வெந்நீர் கூடவே கூடாது

இந்த ஆடைகளை வெந்நீரில் வாஷ் செய்யாதீர்கள். இதனால் நூல் இழைகளுக்கு சேதம் ஏற்படுவதோடு ஆடையின் நிறம் வெளிறி விடும். பெரும்பாலான நேரங்களில் வெந்நீரால் துணி சுருங்கவும் கூட செய்யும். நினைவிருக்கட்டும் குளிர்ச்சியான நீரே வாஷ் செய்வதற்கு ஏற்றது.

2) அவற்றை ஊற வையுங்கள்

நீங்கள் அவற்றை ஹாண்ட் வாஷ் செய்வதானால் ஒரு வாளி தண்ணீரில் 2 கப்கள் மிதமான தன்மையுள்ள டிடர்ஜெண்ட் போட்டு, உங்கள் கைகளால் இந்த கரைசலை சுற்றி கலக்கி கொள்ளுங்கள். ஆடைகள் அந்த கரைசலில் 5 - 10 நிமிடங்கள் ஊறிய பின்பு, மீண்டும் கைகளால் அந்த துணியையும், கரைசலையும் சுழற்றுங்கள். இதன் பின்பு நீங்கள் இதமாக பிழிந்து மிகுதியான தண்ணீரை வெளியேற்றி விடுங்கள்.

விளம்பரம்
Comfort core

நீங்கள் அவற்றை ஹாண்ட் வாஷ் செய்வதானால் ஒரு வாளி தண்ணீரில் 2 கப்கள் மிதமான தன்மையுள்ள டிடர்ஜெண்ட் போட்டு, உங்கள் கைகளால் இந்த கரைசலை சுற்றி கலக்கி கொள்ளுங்கள். ஆடைகள் அந்த கரைசலில் 5 - 10 நிமிடங்கள் ஊறிய பின்பு, மீண்டும் கைகளால் அந்த துணியையும், கரைசலையும் சுழற்றுங்கள். இதன் பின்பு நீங்கள் இதமாக பிழிந்து மிகுதியான தண்ணீரை வெளியேற்றி விடுங்கள்.

3) நிறம் வாரியாக பிரியுங்கள்

உங்கள் பருத்தி துணிகளை நிறம் வாரியாக பிரியுங்கள். நீங்கள் அடர் நிறம் உள்ள பருத்தி துணிகளோடு, இலேசான நிறம் உள்ள துணிகளையும் சலவை செய்தால் பல துணிகள், ஆடைகளின் நிறம் மங்கி விடும்.  

4) வினிகர் பயன்படுத்துங்கள்

சலவை செய்யும் போது வாஷிங் மெஷினில் 1 கப் வினிகர் ஊற்றுங்கள். இது உங்கள் பருத்தி ஆடைகள் மங்கலாகாமல் தடுத்து அவற்றின் பளிச்சென்ற தோற்றத்தை தக்க வைக்கிறது. மேலும் உங்கள் ஆடைகள் மென்மையாக புத்துணர்வு மணத்துடன் இருக்கும்.

5) அவற்றை ஃப்ளாட் ஆக (கிடைமட்டமாக) வைத்து உலர விடுங்கள்

உங்கள் பருத்தி ஆடைகளை நிழலில் ஃப்ளாட்டாக வைத்து உலர விடுங்கள். நேரடி வெயில் அவற்றின் மீது படக்கூடாது. நேரடி வெயில் படுவதால்  நிறம் மங்கலாகும் மற்றும் துணியும் சுருங்கி விடும்.

இந்த குறிப்புகளை பயன்படுத்தி ஒரு ஃபேஷன் விரும்பி போல் பளிச்சென்ற பருத்தி ஆடைகளை உற்சாகமாக அணியுங்கள்!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது