உங்கள் ஆடையின் பெர்ஃபெக்ட் ஷேடான கருப்பு நிறத்தை அப்படியே தக்க வைக்க ஆசையா? இந்த இரகசிய பகுதிப் பொருட்களை பயன்படுத்துங்கள்.
மீண்டும் மீண்டும் வாஷ் செய்த பின்பு உங்கள் கருப்பு ஆடைகள் வெளிற ஆரம்பித்திருப்பதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? இதோ அந்த நிறத்தை அப்படியே தக்கவைக்க உதவ ஒரு ஆற்றல்மிக்க வழி.
கட்டுரை புதுப்பிக்கப்பட்டது


கருப்பு ஆடைகள் எப்போதுமே எந்த ஒரு வயதினராயினும் அணிய விரும்பும் காலத்தை வென்ற ஆடைகள். சந்தேகமிருந்தால் கருப்பு ஆடையை அணிந்து பாருங்கள், சரிதானே? இந்த நிறம் எந்த ஒரு வைபவத்துக்கும் பொருத்தமானது. நீங்கள் இரவு நேர பார்ட்டிகளுக்கு சென்றாலும் சரி அல்லது ஒரு ப்ரஞ்ச் டேட்-க்கு போவதானாலும் சரி, கிட்டத்தட்ட ஒவ்வொரு நவநாகரீக சூழலுக்கும் இந்த ஷேட் பொருத்தமானதே. எனினும் அடிக்கடி பயன்படுத்தும்போது உங்கள்
கருப்பு ஆடைகள் நிறம் மங்குவது போல் தோன்றும். நீங்கள் உங்கள் ஆடைகளில் சிலவற்றை வேண்டாம் என ஒதுக்கி விடலாமா என்று நினைப்பீர்கள். ஆனால், ஒரு கனவு போல உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் பெர்ஃபெக்ட் கருப்பு ஆடைகளை நீங்கள் புறக்கணிப்பது அல்லது ஒதுக்கித் தள்ளுவது மிகவும் கடினம்.
கவலைப்படாதீர்கள், அவற்றை நீங்கள் ஒதுக்குவதற்கு பதிலாக அல்லது மங்கலான ஆடைகளுக்கு பதிலாக புதிய ஆடைகளை வாங்குவதற்கு மாற்றாக இதோ உங்கள் அபிமான ப்ளாக் டி–சர்ட் அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்த எல்பிடி-ன் நிறத்தை அப்படியே தக்க வைக்க இந்தக் குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள்.
உங்கள் வாஷிங் முறையில் ஒரு லிக்விட் டிடர்ஜெண்ட் பயன்படுத்துமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஏனெனில் இது நன்றாக கரைந்து விடும் பவுடர்கள் போல் எந்தக் கசடுகளையும் விட்டுச் செல்லாது.உங்கள் அடர் வண்ண ஆடைகளை மெஷின் ட்ரையிங் செய்யும்போது குறிப்பாக அவை உங்கள் ஆடைகளின் நிறம் மங்கலாவதற்கு காரணமாகலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது முக்கியம்.
1. வாஷிங் செய்யும் போது நிற அடிப்படையில் பிரியுங்கள்
விளம்பரம்

நீங்கள் பல்வேறு ஆடைகளை வாஷ் செய்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக ஒரே ஷேடு உள்ள ஆடைகளை ஒரே நேரத்தில் லோடு செய்ய வேண்டும். ஒரு ஆடையின் நிறம் மற்றொரு ஆடை மீது படிவதை தவிர்க்க இவ்வாறு செய்வது அவசியம்.
2. குளிர்ந்த தண்ணீரை பயன்படுத்துங்கள்
குளிர்ந்த தண்ணீரை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வழக்கமான வாஷ் சுழற்சியை ஆரம்பியுங்கள். அது உங்கள் ஆடையின் நிறம் மாறாமல் தக்க வைக்க உதவும்
3. காபியை பயன்படுத்துங்கள்
ஒரு ஸ்ட்ராங் ப்ளாக் காபியை வடித்து எடுங்கள் காபி எந்த அளவு ஸ்ட்ராங்காக உள்ளதோ அந்த அளவு அதன் பலன் நன்றாக இருக்கும். இந்த செயல்முறைக்கு உங்களுக்கு 2 கப்கள் காப்பி தேவை. எனவே ஒரு முழு அளவு காபி மேக்கர் பயன்படுத்துங்கள். அலசும் சுழற்சி நேரம் ஆரம்பித்ததும் வாஷிங் டிரம்மில் புதிதாக வடித்து எடுத்த காபியை ஊற்றுங்கள். உங்கள் வாஷரின் மூடியை மூடி அந்த அலசும் சுழற்சி முடியும் வரை காத்திருங்கள்.
4. உலர வையுங்கள்
இப்போது உங்கள் ஆடைகளை எடுத்து உலர்வதற்காக தொங்க விடுங்கள்.
உண்மையிலேயே இது ஒரு எளிய மற்றும் ஆற்றல்மிக்க வழி!
கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது