
நமக்கு பிடித்த ஆடையை சுத்தம் செய்த பின், அதன் நிறம் மற்றொரு துணியின் சாயம் இறங்கியதைக் கண்ட மாத்திரத்தில் அதிர்ந்து போன நிகழ்வுகள் பல நம்மில் பலருக்கு நடந்திருக்கும். இத்துடன் ஆடைகளில் சுருக்கம், வடிவத்தில் மாற்றம், தளர்ந்த நூல் மற்றும் துணியை விட்டு பட்டன் பிரிதல் போன்ற பல சேதங்களை சமாளித்தும் இருப்போம். மேலும் “ஆடைகளை சுத்தம் செய்ய டிடர்ஜென்ட் மட்டுமே போதுமானது” என்ற எண்ணத்தில் இருக்கிறோம். ஆனால் எல்லா சமயங்களிலும் நாம் எதிர்பார்த்த அளவிற்கு சிறந்த பலனளிப்பதில்லை. சில சமயங்களில் ஆடைகள் புத்துணர்ச்சி ஊட்டும் மணமின்றி இருக்கலாம், பார்ப்பதற்கு பொலிவின்றி தென்படலாம் அல்லது ஒரு முறை துவைத்த பிறகும் கூட சேதம் அடைந்திருக்கலாம். இது போன்ற பிரச்சனைகளைக் கண்டு நாங்கள் இதற்கான தீர்வினை கண்டுபிடிக்க சில முயற்சிகளில் ஈடுபட்டோம். வீட்டுப் பொருட்களான வினிகர் போன்றவற்றை துணிகளை சுத்தம் செய்ய பயன்படுத்தினோம் ஆனால் துணிகளில் ஒரு விதமான புளிச்ச வாசனையை ஏற்படுத்தியது. இவ்வாறு பல சோதனைகளுக்குப் பிறகு ஆடைகள் சேதம் அடைவதை தவிர்க்கவும் ஒவ்வொரு சலவைக்குப் பின்னர் துணிகள் புதியதாக காட்சியளிப்பதற்கான சில உதவிக்குறிப்புகளை இங்கு பகிர்கிறோம்!
1. துணிகள் பராமரிப்பு லேபிளில் உள்ள அறிவுரைகளை கவனமாக பின்பற்றுங்கள்
உங்கள் துணிகள் நீண்ட காலம் நன்றாக இருக்க வேண்டுமெனில் துணிகள் பராமரிப்பு லேபிளின் அறிவுரைகளை பின்பற்றுவதே சிறந்தது. லேபிளின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளில் குறிப்பிட்ட துணிகள் சுருங்குவதற்கான வாய்ப்பு உண்டா?, துணியை, கையில் துவைக்க வேண்டுமா அல்லது மெஷினில் துவைக்கலாமா? அல்லது டிரை கிளீன் செய்ய வேண்டுமா? போன்ற அனைத்தும் தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த வழிகாட்டுதலை பின்பற்றி துணிகளுக்கு ஏற்ப அவற்றை சேதமடையாமல் சுத்தம் செய்யலாம். லேபிளில் குறிப்பிட்ட துணிகளை சுத்தம் செய்ய நாம் உபயோகிக்கும் நீரின் வெப்பநிலை முதல் அயர்னிங் வரை கடைபிடிக்க வேண்டிய முறைகளை பின்பற்றி உங்கள் துணிகளை பாதுகாப்பாக கையாளுங்கள்.
2. உங்கள் துணிகளின் உள்புறத்தை வெளியே எடுத்து சுத்தம் செய்யுங்கள்
சலவை செய்யும் போது துணியின் வெளிப்புறம் பாதுகாப்பாக இருக்க இது ஒரு சிறந்த வழியாகும். நாங்கள் இந்த வழியை முயற்சி செய்த பின் வியத்தகு பலனை கண்ட பிறகே உங்களுக்கு இதை பரிந்துரைக்கிறோம். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், உங்கள் துணிகளை உள்பக்கத்தை வெளிப்பக்கமாக திருப்பி துவைப்பதற்கு போடுங்கள். இந்த வழிமுறை எளிதாகத் தோன்றலாம் ஆனால் துணியை அழகுப் படுத்தும் எம்பிராய்டரி, கைவேலைப் பாடுகள், ஓர மடிப்புகள் போன்ற அனைத்தும் சேதமாகாமல் இருக்க இதுவே சிறந்த வழி. மேலும் இந்த வழியை பின்பற்றி துணிகளில் இருக்கும் பிரின்ட்களின் நிறம் மங்காமல் காக்கலாம்!

3. சிறந்த ஃபாப்ரிக் கண்டிஷனர் பயன்படுத்துங்கள்
நம்மில் பலர் ஃபாப்ரிக் கண்டிஷனர் துணிகளுக்கு மென்மையானதாகவும் சிறந்த நறுமணத்தையும் தருவதாக எண்ணுகிறோம். இதில் இன்னும் பல நன்மைகள் நிறைந்துள்ளது என்பதைக் கண்டு நாங்கள் வியந்துள்ளோம். குறிப்பாக சொல்லப் போனால் நாங்கள் கம்ஃபர்ட் ஃபாப்ரிக் கண்டிஷனர் உபயோகித்துப் பார்த்த பின் துணிகளின் ஆயுள் காலம் நீண்டதைக் கண்டு வியந்துப் போனோம். ஃபாப்ரிக் கண்டிஷனரில், ஆடைகளின் இழைளுக்கு பாதுகாப்பளிக்கும் பூச்சை அளிக்கிறது என்பதை லேபிளை படித்த பிறகு நாங்கள் தெரிந்து கொண்டோம். இந்த பூச்சு வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்கும் போது அதன் இடையே ஏற்படும் உராய்வை குறைத்து துணிகள் நீண்ட காலத்திற்கு கிழியாமல் பாதுகாக்கும். இந்த ஃபாப்ரிக் ஸாஃப்ட்னர்-ஐ உபயோகித்த பிறகு துணிகள் நீண்ட காலம் இருப்பதை கவனித்தோம். இந்த தயாரிப்பை பயன்படுத்திய பின் துணிகளில் மிகப்பெரிய வித்தியாசத்தை பார்த்தோம். டிடர்ஜென்ட் மட்டும் உபயோகித்த போது பார்த்திடாத மென்மையை தற்போது உணர முடிந்தது. மேலும் ஓவ்வொரு சலவைக்கு பின்னும் துணிகளின் வண்ணம் மங்காமலும், அவற்றின் வடிவத்தை தக்க வைத்துக்கொள்ள முடிகிறது.
4. ஆடைகள் நிறம்மாறுவதை தவிர்க்க காற்றில் உலரவிடுங்கள்
டிரையரின் வெப்பத்தினால் காலப்போக்கில் துணியை சேதப்படுத்துகின்றன என்பதை நாங்கள் கவனித்தோம். மின் உலர்த்திகள் துணி சுருங்குவதற்கும், இழைகள் பலவீனமாக்குவதற்கும், மற்றும் நிறம் மங்குவதற்கும் காரணமாகின்றன. ஆதலால் உலர்த்தும் ரேக்கில் துணிகளை உலர்த்தி காற்றில் காயவிடுங்கள்.
5. உங்கள் ஆடைகளை சரியான இடத்தில் வையுங்கள்
நாம் சில சமயங்களில் வீட்டுக்கு சென்றவுடன் துணிகளை எடுத்து படுக்கையின் மீதோ அல்லது நாற்காலியிலோ குவித்து அலமாரியில் வேகமாக அடைத்து வைப்போம். உங்கள் துணிகளை எவ்வாறு பாதுகாத்து வைப்பதை பொறுத்து தான் அதன் ஆயுட்காலம் நீடிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா? ஸ்வெட்டர்களை மடித்து ஷெல்ஃபில் அடுக்கி வைப்பதற்கு பதிலாக தொங்க விடுவதால் அதன் அமைப்பு மாறாமல் அப்படியே இருப்பதை கவனித்து இருக்கிறோம். நீங்கள் எந்த வகையான ஹாங்கர் பயன்படுத்துகிறீர்களோ அதைப் பொறுத்து ஆடைகளில் அதன் வித்தியாசத்தை உணரலாம். ஒயர் அல்லது பிளாஸ்டிக் ஹாங்கரில் துணியின் தோள்பட்டை பகுதியை வெளியே நீட்டிய படி இருக்கும், ஆனால் மர ஹாங்கரில் அவ்வாறு வைக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறோம். இது போன்ற சிறிய விஷயங்களைக் கடைபிடிப்பதன் மூலம் நம் ஆடைகளின் ஆயுட்காலம் அதிகரிக்கும் என்பதை உணர்ந்தோம். மேலும் ஆடைகளை பிளாஸ்டிக் பைகளில் வைக்காமல் காட்டன் தாள் அல்லது பைகளில் வைப்பது சிறந்தது. ஏனெனில் பிளாஸ்டிக் பைகளில் ஈரப்பதத்தினால் ஏற்படும் பூஞ்சை வரலாம் என்பதை எங்கள் அனுபவத்தில் மூலம் அறிந்து கொண்டோம்.
6 . உங்கள் ஆடைகளை சுழற்சி முறையில் அணிந்து சேதமாவதை தவிருங்கள்
“முதலில் வந்ததற்கே முதல் உரிமை” என்ற விதி உற்பத்தி பொருட்களுக்கு மட்டுமின்றி அலமாரியில் வைத்திருக்கும் துணிகளுக்கும் பொருந்தும். இந்த எளிய வழிமுறையை பின்பற்றி நீங்கள் உங்கள் துணிகளை சேதம் அடை வதிலிருந்து தவிர்க்கலாம். அண்மையிலதுவைத்த துணிகளை பின்னால் அடுக்குங்கள் இதனால் அலமாரியின் முன் வரிசையில் உள்ளவற்றை எளிதாக பார்த்து எடுக்க ஏதுவாக இருக்கும். ஆடைகளை சுழற்சி முறையில் அணிவதால் கிழிந்து போவதை தடுக்கலாம்.
இந்த வழிமுறைகளை பின்பற்றி உங்கள் ஆடைகளை எப்பொழுதும் புதியதுபோல் வைக்கலாம்.