
சுகாதார சூழலில் குழந்தைகளின் ஆடைகளை கிருமிகளற்றதாக வைத்திருப்பது மிகவும் சவாலானது என்பதை எங்கள் அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்டோம். குழந்தைகளின் தோலானது மிகவும் நாசூக்கானது, மேலும் எல்லா விதமான தோல் பிரச்சனைகளும் ஏற்படும் வாய்ப்புக்களும் அதிகம். ஆதலால் குழந்தைகளுக்கு சுத்தமான, மற்றும் மென்மையான துணிகளை அணிவிக்க வேண்டும். இதனால் அவர்களை கிருமிகள் மற்றும் பாக்டீரியாவிமிருந்து பாதுகாக்கலாம் அதே சமயம் குழந்தைகளும் உற்சாகத்துடன் இருப்பார்கள். கைக்குழந்தைகளின் துணியில் இருந்து சிந்திய பால் வாசனை வருவது இயற்கை, அதை நீக்குவதற்காக நம்மில் பலர் அந்தத் துணியை பலமுறை துவைத்திருப்போம். இவ்வாறு குழந்தையின் துணியை பலமுறை துவைப்பதன் மூலம் துணியின் தன்மையானது மாறி அவர்களின் சருமத்திற்கு எரிச்சலை உருவாக்கலாம். இத்துடன் எங்கள் குழந்தைகளின் துணிகளை துவைப்பதற்கு வழக்கமான சோப்புத் தூளை பயன்படுத்தினோம் ஆனால் அதில் அதிக ரசாயன கலவைகள் இருப்பதால் தோல் எரிச்சலை ஏற்படுத்தியது. வினிகர் போன்ற வீட்டு பொருட்களை பயன்படுத்திப் பார்த்தோம் ஆனால் அவை நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வேலை செய்வதாகத் தெரியவில்லை, மேலும் பயன்படுத்திய பின் துணிகளில் துர்நாற்றம் ஏற்படுத்துகிறது, இத்துடன் துணிகளிலிருந்து பாக்டீரியா மற்றும் கிருமிகளை அகற்றுவதற்கான எவ்வித உத்தரவாதமும் இல்லை. எனவே, இது போன்ற பல சோதனைகளுக்கு பிறகு, உங்கள் குழந்தைகளின் துணிகளை மென்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவிக்குறிப்புகளை நாங்கள் பட்டியலிடுள்ளோம்!
1. உங்கள் குழந்தைக்கு ஏற்ற சரியான ஆடையை வாங்குங்கள்
உங்கள் குழந்தைகளுக்கு துணிகள் வாங்கும் போது, விரைவாக உலரக்கூடிய ஆடைகளை தேர்வு செய்யுங்கள். குழந்தைகளுக்கு காட்டன் துணிகளே சுவாசிப்பதற்கு ஏற்றதாகும். ஏனெனில் அவை வியர்வையை உறியும் தன்மைக் கொண்டது மேலும் எந்தவித தோல் எரிச்சலையும் ஏற்படுத்தாது என்பதையும் நாங்கள் கவனித்தோம். பாதுகாக்கும் அறிவுரைகளைக் கொண்ட துணிகளை விட காட்டன் துணிகளை பாதுகாப்பது மிகவும் சுலபம். குழந்தையின் தோலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய சமிக்கிகள் மற்றும் இதர கைவேலைபாடுகள் உடைய துணியினை தவிர்ப்பது சிறந்தது. இது போன்ற துணியை சுத்தம் செய்யும் போது இவை சேதம் அடைய வாய்ப்புகளும் அதிகம்.
2. கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற ஊறவைத்தல் முக்கியம்
துவைப்பதற்க ு முன் உங்கள் குழந்தையின் ஆடைகளை வெதுவெதுப்பான நீரில் ஊற வவைப்பதே சிறந்த வழி என்று நாங்கள் எண்ணுகிறோம். இது துணிகளில் இருந்து அழுக்கை அகற்ற உதவுவதோடு மட்டுமல்லாமல் அவற்றில் இருக்கும் அனைத்து விதமான கிருமிகளையும் அகற்றும்.

3. பாதுகாப்பான, சுகாதாரமான முறையில் ஆடைகளை சேமித்து வையுங்கள்
துவைத்த பின் துணிகளை உலர்த்தி காய வைத்த பிறகு அவற்றை சுத்தமான காட்டன் பையில் வையுங்கள். உங்களிடம் காட்டன் பை இல்லை என்றால் அல்லது வாங்க விருப்பம் இல்லை என்றால் மென்மையான காட்டன் துணியில் குழந்தையின் துணியை சுற்றி வையுங்கள். இது உங்கள் குழந்தையின் ஆடைகளை கிருமிகள் மற்றும் அழுக்குகளிலிருந்து பாதுகாக்க உதவும் என்பதை நாங்கள் கவனித்தோம்.
4. டையபர்ஸ் மற்றும் நாப்பீஸ்- ஐ தனித்தனியே சுத்தம் செய்யுங்கள்
அசுத்தமான டையபர்ஸ் மற்றும் நாப்பீஸ்- ஐ வெந்நீரில் தனியாக சலவை செய்ய வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். கிருமிகள் மற்றும் பாக்டீரியாக ்களை அகற்றுவதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று என்பதை நாங்கள் எங்கள் அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்டோம். மேலும், இந்த அழுக்கு
டையபர்கள் மற்றும் நாப்பீஸ்களை தனியாக துவைப்பதன் மூலம் அதில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் மற்ற ஆடைகளுக்கு பரவுவதை தவிர்க்கலாம்.
5. நல்லதொரு ஃபேப்ரிக் கண்டிஷனர்- ஐ பயன்படுத்துங்கள்
குழந்தைகளின் துணிகளை துவைக்கும் போது நம்முடைய துணிகளை எவ்வாறு வெள்ளை மற்றும் வண்ணமிகு ஆடைகளை பிரித்து துவைப்பவமோ அதைப் போல பிரித்து வையுங்கள். துணியில் உணவின் கறையோ அல்லது கடினமான கறையோ இருந்தால் அதை வாஷின் மெஷினில் போடுவதற்கு (அல்லது கைகளால் துவைப்பதற்கு) முன்பு நீக்குங்கள். இத்துடன் சருமத்தில் பரிசோதிக்கப்பட்ட, மற்றும் உங்கள் குழந்தைகளின் ஆடைகளுக்கு பாதுகாப்பான கம்ஃபர்ட் ப்யூர் ஃபேப்ரிக் கண்டிஷனர் போன்ற நல்ல ஃபேப்ரிக் கண்டிஷனரை பயன்படுத்துங்கள். சோப்புப் பொடியை பயன்படுத்தும் போது துணிகளுக்கு கிடைத்திடாத மென்மையை இந்த ஃபேப்ரிக் கண்டிஷனர் பயன்படுத்திய பின் கிடைத்தது என்பதை நாங்கள் கவனித்தோம். இந்த தயாரிப்பானது குழந்தைகளின் மிருதுவான சருமத்திற்கு ஏற்ப வடிவமைக்கப் பட்டுள்ளது. கம்ஃபர்ட் ப்யூர் ஃபேப்ரிக் கண்டிஷனர் உங்கள் குழந்தைகளின் துணிகளுக்கு வியக்கும் அளவிலான மென்மை அளிக்கும். இது பாக்டீரியா எதிர்ப்பு சக்தி மற்றும் கிருமி நாசினியின் தன்மைகளைக் கொண்டது என்பதை நீங்கள் இதன் பேக்கிங்கை படித்து அறிந்து கொள்ளலாம். ஆதலால் இது உங்கள் குழந்தைகளின் துணிகளை சுத்தம் செய்வதற்கு உகந்த நம்பகமான கிருமி மற்றும் பாக்டீரியாவை அகற்றும் தயாரிப்பாக விளங்குகிறது. இந்த ஃபேப்ரிக் கண்டிஷனர் பயன்படுத்தி சுத்தம் செய்த பின் குழந்தையின் துணிகளில் புத்துணர்ச்சி ஊட்டும் மணத்தை விட்டுச் செல்லும் இந்த குணத்தை நாங்கள் விரும்புகிறோம்!
6. துவைத்த ஆடைகளை சூரிய ஒளியில் உலர விடுங்கள்
துணிகளில் எஞ்சி இருக்கும் கிருமிகளை அகற்ற மெஷினில் டம்பிள் டிரை செய்வதை விட சூரிய ஒளியில் உலர விடுவதே சிறந்தது என்ற தகவல் நாம் அறிந்த ஒன்றே! குழந்தைகளின் துணிகளை இயற்கையான சூரிய ஒளியில் உலர விடுவதன் மூலம் துணிகளில் உள்ள கிருமிகளை நீக்குவதோடு சேர்த்து துணியை மிருதுவாக வைக்கும் என்பதை நாங்கள் எங்கள் அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்டோம்.
7. விரைவாக செயல்படுங்கள்
உங்கள் குழந்தை அணிந்திருக்கும் துணியில் உணவை சிந்தி விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், உடனடியாக அந்தக் கறையை துடைக்க வேண்டும். துணியை துவைப்பதற்கு முன்பு உங்களால் இயன்ற அளவிற்கு அதில் இருக்கும் கறையை அகற்றுங்கள். இந்த செயல்முறையை பின்பற்றுவதன் மூலம் துணியை எளிதாக துவைத்து சுத்தம் செய்யலாம். இவ்வாறு துரிதமாக கறையை அகற்றுவதன் மூலம் துணியில் இருக்கும் கறையை நீக்குவதற்காக அவற்றை பலமுறை துவைப்பதை தவிர்க்கலாம். எங்களைப் போல் நீங்களும் பேபி வைப்பின் வைத்து சிந்திய உணவினை துடைத்து, பின் அதை துவைக்கும் வரை நீரில் ஊற வைக்கலாம்.
எல்லா சமயங்களிலும் உங்கள் குழந்தையின் உடைகள் மென்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க இந்த உதவிக்குறிப்புகளை நினைவுகொள்ளுங்கள்.