நாம் அனைவரும், நமது விலையுயர்ந்த, நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட பட்டுப் புடவைகளை, மிகவும் கவனமாகப் பராமரிப்போம். பெரும்பாலும், பட்டுப் புடவைகளை விசேஷங்களுக்காக மட்டுமே பயன்படுத்துவோம். அவற்றில் இருக்கும் நுண்மையான நூலிழை வேலைப்பாடுகள், மெல்லிய நுண் ஒப்பனைகள், இவற்றில் எல்லாம் ஏதேனும் கறைகள் ஏற்பட்டு விட்டால், அவற்றை தூய்மைப்படுத்துதல், கறைகளை அகற்றுதல் எல்லாம் மிகவும் சிரமமானவை. இவ்வகை உடைகளை, உலர் சலவைக்கு அனுப்பலாம் என்ற போதும், அடிக்கடி உலர் சலவை செய்வது, சரியான வழிமுறையாக இருக்காது, ஏனெனில் உலர்சலவை செய்வதற்கு அதிகப் பணம் செலவாகும் அது மட்டுமன்றி உலர் சலவை செய்த உடைகளும் சாயமிறங்கி, தோற்றம் மங்கலாகிப் போகின்றன.
பட்டுப் புடவைகளை வீட்டிலேயே சலவை செய்ய, மேற்கொள்ளக் கூடிய பல வழிமுறைகளான, பூந்திக் கொட்டை, ரீத்தா அல்லது ஷாம்பூ போன்றவற்றை கேள்விப்பட்டுள்ளோம். அவ்வழிமுறைகளை முயற்சித்துப் பார்த்ததில், பூந்திக் கொட்டை பயன்படுத்தி பட்டுப் புடவைகளை சலவை செய்வது, அதிக நேரமெடுப்பதையும், கறைகளை அவ்வளவு நேர்த்தியாக நீக்குவதில்லை என்பதையும் கண்டறிந்தோம். மற்றுமோர் சந்தர்ப்பத்தில், ஷாம்பூவை பயன்படுத்தியதில், புடவைகள் நிறம் மங்கியும், ஜரிகைகளின் பளபளப்பு குறைவதையும், எங்களால் அறிய முடிந்தது.
ஆனாலும், காலப்போக்கில், பட்டுப் புடவைகளை பதமாக, துணிக்கு எவ்வித சேதமும் ஏற்படுத்தாமல், சலவை செய்ய, ஒரு வழிமுறையை முயற்சி செய்து, அதை பரிசோதனையும் செய்து பார்த்துள்ளோம். உங்களது வேலையை சுலபமாக்க, பட்டுப் புடவைகளை வீட்டில் எவ்வாறு, சிரமமின்றி தூய்மைப்படுத்தலாம் என்ற படிமுறை விளக்கக் கையேடு ஒன்றினை பட்டியலிட்டுள்ளோம்.