உங்களுடைய பட்டு சேலைகள் பழசாவதை குறைக்க உதவிட இந்த அற்புதமான குறிப்புகளை பின்பற்றவும்.

உங்கள் அழகான பட்டு சேலை இளமையிலே அழிந்துபோவதை நீங்கள் அனுமதிக்கலாமா? கூடாது. அவை நீண்ட காலம் உழைத்திட இந்த ஆற்றல் மிக்க குறிப்புகளை பின்பற்றுங்கள்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Try These Amazing Tips to Reduce the Ageing of Your Silk Sarees!
விளம்பரம்
Comfort core

ஒரு பட்டு சேலை ஒரு பெண்ணின் அழகை பன்மடங்காக கூட்டிக் காட்டுகிறது. இதனால் உங்களுக்கு ஏற்படும் உணர்வும் விளைவும் அபரிமிதமானது. நீங்கள் பட்டு சேலைகளை சரியாக சேமித்து பராமரித்து வந்தால் பல ஆண்டுகளுக்கு பெருமிதத்தோடு அணிந்து மகிழலாம். அது மட்டுமல்ல, நீங்கள் அனுபவித்த மகிழ்ச்சியை அடுத்து வரும் தலைமுறையும் எளிதாக அனுபவித்திட வழிவகுத்திட முடியும்.

இதோ அதனுடைய பொலிவையும் பளபளப்பையும் தக்கவைக்கும் முறையில் பராமரித்திட சில பயனுள்ள குறிப்புகள். பின்பற்றுங்கள், பயன் பெறுங்கள்.

உங்கள் பட்டு சேலைகளின் வாழ் நாளை விரிவடையச் செய்ய, 2-3 மாதங்களுக்கு ஒரு முறை அவற்றை விரித்து கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நிழலில் காற்றோட்டமாக விட்டு வைக்க வேண்டும்.

1) சரியாக சேமிக்கவும்

உங்களுடைய பட்டு சேலையும் உயிர்ப்புடன் இருக்க சுவாசிக்க வேண்டும். ஆகவே ஒரு பிளாஸ்டிக் பையில் சேமித்து வைப்பது பரிந்துரைக்கப்படுவதில்லை.

விளம்பரம்
Comfort core

இது ஒரு காட்டன் சேலை உறைக்குள் அல்லது ஒரு மென்மையான காட்டன் துணியை சுற்றி வைத்து பாதுகாக்க வேண்டும். ஒளியும் தூசியும் உங்கள் பட்டு சேலைகளின் முக்கிய எதிரிகளாகும், ஆகவே இரண்டிலிருந்தும் சேலையை சரியாக பாதுகாக்க வேண்டும்.

2) காற்றில் உலர வைக்கவும்

மற்ற துணிகளைப்போலவே பட்டு சேலைகளையும் அவ்வப்போது வெளியே எடுத்து நன்றாக காற்றுபட கிட்டத்தட்ட 10 நிமிடம் நிழலில் விரித்து திரும்ப மடித்து வைக்கும் போது நன்றாக சுவாசிக்க முடிகிறது, வாழ்நாளும் விரிவடைகிறது. இந்த முறையை 2-3 மாதங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். இருப்பினும் நீண்ட நேரம் நேரடியாக வெயில் படும்படியாக வைக்கக் கூடாது.

3) ஹாங்கர்களை உபயோகிக்கவும்

எப்போதும் உங்களுடைய பட்டு சேலைகளை ஹாங்கர்களில் தொங்கவிடுவது நல்லது. இவ்வாறு தொங்க விடுவதால் சுருக்கங்கள் இல்லாமல் இருக்கும். உலோக ஹாங்கர்களை பயன்படுத்தக் கூடாது. இது பட்டுடன் மறிவினை புரிந்து துரு கறை படிய வழிவகுக்கலாம். இது தேவையின்றி பிரச்சினையை விலைக்கு வாங்குவது போலாகும். ஆகவே எப்போதும் மர ஹாங்கர்களையே பயன்படுத்தவும்.

4) பூச்சி விரட்டிகளை பயன்படுத்தவும்

அந்துப்பூச்சி மற்றும் வெள்ளிமீன்களை விரட்டியடிக்க நாப்தலீன் உருண்டைகளை பயன்படுத்தவும். இருப்பினும் நாப்தலீன் நேரடியாக உங்கள் பட்டு சேலையுடன் தொடாதிருப்பதில் கவனமாக இருக்கவும். இது ஜரிகை வேலைப்பாட்டை நிறம் மங்கச் செய்யலாம். இதைவிட சிறந்த வழி கற்பூரம், காய்ந்த மிளகாய், அல்லது வேப்பிலைகள் போன்ற இயற்கையான மூலப்பொருள்களை உபயோகிப்பது சிறந்தது. அவை பூச்சி எதிர்ப்பு சக்தி மற்றும் பூசண எதிர்ப்பு சக்தி கொண்டவை.

இந்த குறிப்பு விதிமுறைகளை பின்பற்றினால் உங்களுடைய மனம் கவர்ந்த பட்டு சேலை பாழ்பட்டுவிடுமோ என்பது பற்றி ஒருபோதும் கவலை கொள்ளத் தேவை இல்லை.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது