உங்கள் பட்டு வேஷ்டியை (சில்க் தோதிஸ்) எவ்வாறு பராமரிப்பது

உங்கள் பட்டு வேஷ்டிகளை கையால் துவைப்பதற்கு எளிதான உதவிக்குறிப்புகளைத் தேடுகிறீர்களா? நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். உங்கள் பட்டுத் வேஷ்டிகளிலிருந்து தொந்தரவான சில கறைகளை அகற்ற இந்த எளிய உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

How to Maintain Your Silk Veshti (Silk Dhotis)
விளம்பரம்
Comfort core

படிநிலை 1: உடனடியாக சுத்தம் செய்யவும்

முடிந்தால், கறை படிந்தவுடன் வேஷ்டியை சுத்தம் செய்யுங்கள், ஏனெனில் உலர்ந்ததும், கறை / அழுக்கு மேலும் கடினமாக மாறும். பின்னர் அவற்றை துவைப்பது மிகவும் கடினமாகிவிடும்.

படிநிலை 2: துணி சுத்தம் செய்யும் கரைசலை உபயோகிக்கவும்

ஒரு வாளி வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் 1 கப் துணி சுத்தம் செய்யும் கரைசலை சேர்க்கவும்.

படிநிலை 3: வேஷ்டியை ஊறவிடவும்

வேஷ்டியை வாளியில் போட்டு 1 மணி நேரம் ஊற விடவும். இது வேஷ்டியில் உள்ள கறை / அழுக்கை போக்கும்.

விளம்பரம்
Comfort core

படிநிலை 4: நன்றாக தேய்க்கவும்

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, வேஷ்டியை வெளியே எடுத்து, மென்மையான தூரிகையைப் பயன்படுத்தி கறையை மெதுவாக தேய்க்கவும்.

படிநிலை 5: வினிகர் கரைசலை பயன்படுத்தவும்

கறை இன்னும் தெரிந்தால், ஒரு கப் வெள்ளை வினிகரை எடுத்து கறைக்கு மேல் ஊற்றி வேஷ்டியை 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

படிநிலை 6: கறையை தேய்க்கவும்

இப்போது கறையை மெதுவாக தேய்க்க முயற்சி செய்யுங்கள், கறை மறைந்து போவதை நீங்கள் காணலாம்.

படிநிலை 7: துணி மென்மையாக்கியை பயன்படுத்தவும்

இப்போது மற்றொரு வாளியில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, 1 கப் துணி மென்மையாக்கியை சேர்த்து, வேஷ்டியை வாளியின் உள்ளே வைத்து 5 நிமிடங்கள்  ஊற விடவும்.

படிநிலை 8: வேஷ்டியை பிழியவும்

அதன் பிறகு, வேஷ்டியை வெளியே எடுத்து மெதுவாக பிழிந்து தண்ணீரை வெளியேற்றவும்.

படிநிலை 9: வேஷ்டியை உலர்த்தவும்

இப்போது வேஷ்டியை நன்றாக பரப்பி, இயற்கையாக உலர வெயிலின் கீழ் தொங்க விடுங்கள்.

படிநிலை 10: இஸ்திரி செய்யவும்

வேஷ்டி காய்ந்ததும், உங்கள் இஸ்திரி பெட்டி / துணி நீராவியில் குறைந்த வெப்பநிலை அமைப்புகளைப் பயன்படுத்தி இஸ்திரி செய்யுங்கள்.

படிநிலை 11: பாதுகாப்பாக எடுத்து வைக்கவும்

எந்த சுருக்கமும் இல்லாமல் கவனமாக மடித்து உங்கள் அலமாரியில் ஒரு விசாலமான இடத்தில் தனித்தனியாக வைக்கவும்.

படிநிலை 12: பெட்டியை பயன்படுத்தவும்

இதை மற்ற ஆடைகளுக்கு இடையில் செருகுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது வேஷ்டிக்கு சுருக்கத்தை ஏற்படுத்தும். முடிந்தால், அதை ஒரு தனி பெட்டியில் போட்டு வைக்கவும்.

சுலபம் அல்லவா? இந்த குறிப்புகளை முயற்சி செய்து, உங்கள் கறை படிந்த வேஷ்டியை புதியது போல் மாற்றவும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது