பலமுறை துவைக்காமல், துணிகளில் நறுமணம் வீச

புகை, ரசாயனங்கள், வியர்வை மற்றும் வேறு சில காரணங்களால் உங்கள் துணிகளை சுத்தம் செய்த பின்னரும் கூட துர்நாற்றம் வீசக்கூடும் என்பதை நீங்கள் அறிவீர்களா? பலமுறை துவைக்காமல் உங்கள் துணிகளில் இருக்கும் துர்நாற்றத்தை எவ்வாறு அகற்றுவது என்பதை அறிய இந்த உதவிக்குறிப்புகளைப் படியுங்கள்!

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

பலமுறை துவைக்காமல், துணிகளில் நறுமணம் வீச
விளம்பரம்
Comfort core

ஆடைகளிலுள்ள துர்நாற்றத்தை நீக்குவதற்காக மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வன் மூலம் அதன் நூலிழியையிலும் உடைகளிலும் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தும் என்பதை அனுபவத்தால் அறிந்து கொண்டோம். இத்தகைய சேதத்தை நம்முடைய விலை உயர்ந்த ஆடைகளுக்கு ஏற்படும் எனில் அதை நாம் எப்போதும் விரும்ப மாட்டோம். வியர்வை நிறைந்த உங்கள் துணிகளில் குறிப்பாக ஜிம்மிற்கு அணிந்து செல்லும் ஆடைகளை துவைத்த பின்னரும் அதில் துர்நாற்றம் வீசுகிறது என்றால், அவை இன்னும் அழுக்காக இருக்கின்றது என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள்.இது போன்ற துணிகள் அனைத்தும் சுத்தம் செய்த பிறகு புத்துணர்ச்சி ஊட்டும் சிறந்த வாசனையோடு நீண்ட காலம் இருக்க வேண்டும் என்பது நம் அனைவரின் விரும்பம், சரியா? காபி, வினிகர் மற்றும் பேக்கிங் சோடா போன்ற வீட்டு பொருட்களை நாங்கள் முயற்சி செய்து பார்த்தோம், ஆனால் அவை எதுவும் நாங்கள் விரும்பிய அளவிற்கு முடிவுகளை தரவில்லை. தினசரி உடைகள் புதிய மணத்தோடு அழகாகவும் வைத்திருக்க அதை மீண்டும் மீண்டும் துவைப்பதை தவிர்த்து துணிகளை புதியதாக மாற்றுவதற்கு வேறு பல வழிகள் உள்ளன. அவற்றை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

 1. துணிகளை உடனுக்குடன் சுத்தம் செய்யுங்கள்

வியர்வை நிறைந்த துணிகளில் உள்ள துர்நாற்றத்தை நீக்க முதலாவதாக நீங்கள் செய்யவேண்டியது உபயோகித்த துணிகளை உடனுக்குடன் சுத்தம் செய்யுங்கள். சலவை செய்யாமல் நீண்ட நேரம் வைத்தால் அதிலிருக்கும் வாசனையை நீக்குவது என்பது  மிகவும் கடினம். சீக்கிரமாக துணிகளை சுத்தம் செய்வதால் பாக்டீரியா, கிருமிகள் மற்றும் கெட்ட வாசனைகளை எளிதாக நீக்கலாம்.

2.  துர்நாற்றத்தை நீக்குவதற்கு வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துங்கள்

அழுக்கான துணிகளை சுத்தம் செய்ய வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துவது மிகுந்த உதவியாக இருக்கும் என்று அனுபவத்தில் நாங்கள் அறிந்து கொண்டோம். துணிகளின் லேபிளை பார்த்து அதற்கேற்றவாறு உயர்ந்த வெப்பநிலையை தேர்வு செய்து சலவை செய்தால் துணிகளுக்கு ஏற்படும் சேதத்தை தவிர்க்க முடியும் . துவைப்பதற்கு  முன்பு சுமார்  10 நிமிடங்களுக்கு  துணிகளை டிட்டர்ஜென்டில் ஊற வைக்கும் முறை மிகவும் சிறந்தது என்று நாங்கள் நினைக்கிறோம். துர்நாற்றம் மிகுதியாக இருந்தால் 30 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் வரை துணியை ஊற வைத்தால் சிறந்த முறை ஆகும்.

விளம்பரம்
Comfort core

துவைத்த பிறகு, துணிகளை மென்மையாக்கி புத்துணர்வூட்டும் கம்ஃபர்ட் ஃபேப்ரிக் கண்டிஷனர் போன்ற தயாரிப்பை பயன்படுத்த நாங்கள் பரிந்துரைக்கிறோம். கம்ஃபர்ட் ஃபேப்ரிக் கண்டிஷனர் இல் ஒரே ஒரு அலசலில் துணிகள் அனைத்தும் புதியது போல் காட்சியளிப்பதை நாங்கள் உணர்ந்தோம். மேலும் துணிகள் அனைத்தும் நாள் முழுவதும் புதியதைப் போல் பளிச்சென்று புதிய பொலிவுடன் காட்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல் புத்தம் புதிய நறுமணத்துடனும் இருக்கும். இந்த தயாரிப்பை பயன்படுத்துவது மிகவும் எளிது. அரை மூடி பயன்படுத்தி அதிக அளவிலான துணிகளை சிறந்த முறையில்  சுத்தம் செய்யலாம். பேக்கில் உள்ள அறிவுரைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப பயன்படுத்துங்கள்.

3. துணிதுவைக்கும் இயந்திரத்தில்  மிக அதிகமான துணிகளைப் போடுவதை தவிர்க்கவும்

வாஷிங் மெஷினில் ஒரு தடவைக்கு எத்தனை துணிகள் போடுகிறோம் என்பதை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். மெஷினில் அதிக அளவில் துணிகள் இருந்தால் சரியான முறையில் சுத்தம் செய்ய போதுமான இடமிருக்காது. இதனால் வியர்வை, துர்நாற்றம் போன்றவை துணிகளைவிட்டு நீங்காமல் தங்கிவிடும். அச்சமயங்களில் துணி துவைக்கும் மெஷினில் இன்னொரு முறை அலசும் வசதி இருந்தால் ஆடைகளை மற்றொரு  தடவை அலசுவது மிகவும் சிறந்தது என்பதை நாங்கள் உணர்ந்தோம். சுத்தம் செய்த துணிகளை உடனுக்குடன்  வெளியே எடுத்து காய வையுங்கள்.

4. துர்நாற்றத்தை நீக்க காற்று மற்றும் சூரிய ஒளியில் உலரவிடுங்கள்

நம் துணிகளில் உள்ள துர்நாற்றத்தை நீக்க திரும்பத் திரும்ப அவற்றை துவைக்காமல், காற்று படும்படியாக சூரிய ஒளியில் உலர விடுவது எளிமையான வழி என்பதை உணர்ந்து கொண்டோம். சூரிய ஒளியோடு சேர்ந்து ஃபேப்ரிக் கண்டிஷனரும் இணைந்து துணிகளில் உள்ள  துர்நாற்றத்தை எதிர்க்கும்.  மெல்லிய காற்று ஆடைகளின் மேல்பட்டு ஆடைகளுக்குள் இயற்கையாக உள்ளே நுழைகிறது. ஆதலால் சூரிய ஒளியில் குறைந்தது ஒரு மணி நேரம் உலர விடுதல் சிறந்த முறை என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்.இந்த வழியை பின்பற்றினால் ஆடைகளில் இருக்கும் துர்நாற்றத்தை நீக்குவதற்காக கூடுதலாக இரண்டு அல்லது மூன்று முறை அலசுவதையும் தவிர்க்கலாம்.

5.துணியிலிருக்கும் வாசனையை உறிஞ்ச செய்தித்தாள்களை பயன்படுத்துங்கள்

துணிகளில் நல்ல வாசம் வீசுவதற்கு செய்தித்தாள்களை பயன்படுத்துவது விசித்திரமான வழியாக தோன்றும் ஆனால் அதுவே சிறந்த வழியாகும். அது எப்படி? துர்நாற்றத்தை ஏற்படுத்தும் எண்ணெய் அல்லது வியர்வையால் ஏற்படும் ஈரப்பதத்தை செய்தித்தாளைக் கொண்டு உறிய முடியும் என்பதை நாங்கள் கவனித்தோம். செய்தித்தாள்களில் பந்துகள் தயாரித்து, வியர்வை அதிகம் வரும் இடங்களில் இரவு முழுவதும் வைத்திருங்கள். இதன் மூலம் ஈரப்பதம் நீக்குவதோடு சேர்த்து துர்நாற்றமும் அகலும் என்பதை நீங்கள் உணர்வீர்கள். இரவு முழுவதும் முடியாதெனில் பல மணிநேரம் வைத்தாலே போதுமானது. துணிகளை இந்த முறையில் சுத்தம் செய்த பின் சிறந்த துணி கண்டிஷனரை பயன்படுத்தினால் மட்டுமே நல்ல பலனளிக்கும் என்பதை நினைவில் வையுங்கள்.

இந்த வழிமுறைகளை முயற்சி செய்வதன் மூலம் உங்கள் துணிகளிலுள்ள துர்நாற்றத்தை நீக்க, அதை பலமுறை துவைப்பதிலிருந்து தவிர்க்கலாம்

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது