குழந்தையின் ஆடைகளை துவைக்கும்போது செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்!

நம் குழந்தைகளுக்கு, சிறந்த ஒன்றையே எப்போதும் தர விரும்புகிறோம். அவர்களின் ஆடைகளை துவைக்கும்போது, நீங்கள் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாத விசயங்களும்

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

check-out-this-simple-diy-detergent-recipe-for-baby-clothes
விளம்பரம்
Comfort core

புதிய ஆடைகள் வாங்கினால் அவற்றை துவைத்து, உலர வைத்த பிறகே குழந்தைக்கு அணிவிக்க வேண்டும்.

பற்றிய பட்டியல் இதோ பின்வருமாறு:

குழந்தையின் ஆடைகளை சிறப்பாக துவைப்பதற்கு செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்

உங்களது குழந்தையின் ஆடைகளை துவைக்கும்போது, அது நன்கு சுத்தம் செய்யப்படுகிறதா என்று கவனிக்க வேண்டும். இல்லை எனில், அந்த ஆடையை அணியும்போது, குழந்தைக்கு தடிப்புகள், ஒவ்வாமை அல்லது இதர சரும பாதிப்புகள் வரக்கூடும்.

விளம்பரம்
Comfort core

செய்ய வேண்டிய விசயங்கள்

1) உங்களது குழந்தையின் ஆடைகளை குளிர்ந்த நீரில் துவைக்க வேண்டும்.

2) பவுடர் டிடர்ஜென்ட் பயன்படுத்துவதற்குப் பதிலாக, லிக்யூட் டிடர்ஜென்ட் பயன்படுத்துவது நலம். ஏனெனில், அது நீரில் எளிதாகக் கரையும் தன்மை கொண்டதாகும்.

3) குழந்தையின் துவைத்த துணிகளை தனிக் கூடையில் வைக்க பழகுங்கள். ஆபத்தான டிடர்ஜெண்ட் கொண்டு துவைக்கப்பட்ட ஆடைகளுடன் அவற்றை கலக்கக்கூடாது. 

செய்யக் கூடாத விசயங்கள்

1) சூடான நீரில், துணி துவைக்க வேண்டாம். ஏனெனில், அவை துணிகள் மீது கடுமையாக வினைபுரிவதோடு, துணியை சுருங்கச் செய்துவிடும்.

2) ஃபேப்ரிக் சாஃப்ட்னர், டிரையர் ஷீட்களை உபயோகிக்க வேண்டாம், இவற்றால் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படக்கூடும்.

3) வாஷிங் மெஷினில் அழுக்குத் துணிகளை போடும் முன்பாக, கறைகளுக்கு முன்-சிகிச்சையை  பயன்படுத்துங்கள்.சிறந்த முடிவுகளுக்கு கறைநீக்கியை பயன்படுத்தவும்.

கவனிக்க வேண்டிய விசயம்:

புதியதாக வாங்கும் துணிகளை குழந்தைக்கு அணிவிக்கும் முன்பாக, துவைக்க வேண்டும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது