வெள்ளை உடைகள் பிரகாசிக்க

எந்தவிதக் கறையும் இல்லாமல் வெள்ளை நிற ஆடைகளை பராமரிப்பது, ஒரு கனவு போலத் தோன்றலாம். ஆனால் இந்தப் பயனுள்ள குறிப்புகளின் மூலமாக, இதை நீங்கள் பெறலாம்! இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளத் தொடர்ந்து படிக்கவும்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

வெள்ளை உடைகள் பிரகாசிக்க
விளம்பரம்
Rin ala

நமக்கு மிகவும் பிடித்த வெள்ளை நிற ஆடைகளில் ஏதாவது கறை பட்டுவிட்டால் அதை எப்படி நீக்குவது என்று நாம் கவலைப்படுகிறோம். நமது ஆடைகளில் மஞ்சள் படுவதால் ஏற்படும் கறைகள், பிரவுன் நிறமுடைய காபிக் கறைகள் அல்லது அக்குள் பகுதியில் வியர்வையினால் ஏற்பட்ட கறைகள் எல்லாம் முழுவதுமாக நீங்குவதில்லை. அதிக முயற்சிகள் எடுத்து நம்முடைய துணிகளைத் துவைத்தாலும் வெள்ளைநிற உடைகளை எப்பொழுதும் அதன் வெள்ளை நிறம் மாறாமல் வைத்துக்கொள்வது என்பது  சாத்தியமற்ற செயலாகிறது. மிகவும் அழுக்கான மற்றும் மண் கறைகள் அதிகம் உள்ள, வெள்ளை நிற ஆடைகளை, அதன் உண்மையான நிறத்திற்குத் திரும்பக் கொண்டு செல்வதற்கும், வெள்ளை நிற ஆடைகளை மேலும் வெண்ணிறமாக வைப்பதற்கும் சில யுக்திகளை நாங்கள் கையாண்டோம், அது நல்ல முறையில் வேலை செய்தது. உங்களின் வெள்ளை நிற ஆடைகள் புதிது போன்ற வெண்மையுடனும், அதிக நாட்கள் அணிவதற்கு ஏற்றதாகவும் இருக்க,  பயனுள்ள எளிமையான  வழிமுறைகளை இங்கே நீங்கள் பார்க்கலாம்.

1. வெள்ளை நிற ஆடைகளை ஒன்று அல்லது இரண்டு முறை அணிந்தபின் துவைக்கவும்

நம்முடைய உடம்பில் உள்ள எண்ணைப்பசை, வறண்ட சருமம் மற்றும் வியர்வைத்துளிகள் வெள்ளை நிற ஆடைகளை மஞ்சள் நிறமாகவோ அல்லது பழுப்பு நிறமாகவோ மாற்றும், ஆனால் இது விரைவாக நமது கண்களுக்குப் புலப்படுவதில்லை. ஆகவே, இதைத் தடுப்பதற்கான சிறந்த வழிமுறை என்னவென்றால் அதன் நிறம் மங்க ஆரம்பிக்கும் முன்பே  வெள்ளை நிற ஆடைகளை, நன்றாகத் துவைக்க வேண்டும். நாங்கள் உங்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவெனில், உங்களின் வெள்ளை நிற ஆடைகளை ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ பயன்படுத்தியபின், அதைத் துவைத்து விடவும், இதனால் அது மஞ்சள் நிறமாகவோ அல்லது பழுப்பு நிறமாகவோ மாறுவதைத் தடுக்கலாம்.

2. ஆடைகளில் படிந்துள்ள கரைகளை விரைந்து சுத்தம் செய்யவும்

கெட்சப் அல்லது காபி கறைகளை திறம்பட நன்றாகப் போக்க வேண்டும் எனில், நீங்கள் அந்தக் கறையை பார்த்த உடனேயே சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் சில நேரங்களில், நாம் அப்படிச் சுத்தம் செய்வதைத் தவற விட்டு விட்டால், கறையைச் சுத்தம் செய்ய, ரின் ஆலா ஃபேப்ரிக் ஒயிட்னர் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். விடாப்பிடியான கறைகளைப் போக்க வேண்டும் எனில் மூன்றரை மூடி ஃபேப்ரிக் ஒயிட்னரை ஒரு குவளையில் ஊற்றி, துணியின் கறை படிந்த பகுதியை 20 நிமிடம் அதில் ஊறவைக்கவும். அதன்பின்பு துணியை சோப்புத்தூள் கொண்டு துவைக்கவும். இப்பொழுது துணி புதியது போல காட்சியளிக்கும்!

விளம்பரம்
Rin ala

3. வெள்ளை நிற ஆடைகளை மற்ற வண்ண ஆடைகளில் இருந்து தனியாகப் பிரித்தல்

நம்முடைய நேரம், உழைப்பு மற்றும் சலவைத்தூளை மிச்சப்படுத்துவதற்காக, வெள்ளை நிற ஆடைகள் மற்றும் வண்ண ஆடைகளையும் ஒன்றாகத் துவைக்கும் தவறினைச் செய்கிறோம். இப்படி துவைப்பதால் வண்ண ஆடைகளில் இருந்து அதன் சாயம் வெளிப்பட்டு வெள்ளை நிற ஆடைகளுடன் அவை கலந்து அந்த ஆடைகளை வேறு நிறத்திற்கு மாற்றி விடுகிறது. இதனால் அந்த ஆடை நமக்குப் பயனற்றதாகப் போகிறது. இதை தவிர்ப்பதற்கான எளிமையான வழிமுறை என்னவெனில், வெள்ளை நிற ஆடைகளை, வண்ண நிற ஆடைகளில் இருந்து தனியாகப் பிரித்துத் துவைப்பதால் அதன் நிறம் மாறாமல் இருக்கும்.

4. ஃபேப்ரிக் ஒயிட்னரைப் பயன்படுத்துங்கள்

வெள்ளை துணிகளின் உண்மையான நிறத்தை மீட்டெடுக்க ஃபேப்ரிக் ஒயிட்னர் பயன்படுத்துவது சிறந்த வழியாகும். நாங்கள் ரின் ஆலா ஃபேபிரிக் ஒயிட்னரை இதற்காகப் பயன்படுத்திப் பார்த்தோம், இதனால் நாங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு எங்களின் துணிகள் வெண்மையான நிறத்தைப் பெற்றன. இதை வெள்ளை நிற ஆடைகளுக்கு மட்டுமல்ல, காலப்போக்கில் மஞ்சள் நிறமாக மாறி இருக்கும் வெள்ளை நிற கட்டில் விரிப்புகள் மற்றும் துண்டுகளுக்கும் உபயோகப்படுத்தலாம். இதன் மூலம் மிகவும் கடினமான கறைகளை நீக்கலாம் மற்றும் துணிகளைப் புதிது போல வைத்துக் கொள்ளலாம். இதன் லேபிளை பார்த்தபொழுது, அதில் உள்ள மேம்பட்ட ப்ளீச் தண்ணீரில் சேர்க்கும் போது ஆக்சிஜனை  வெளியிடுவதைக் கண்டறிந்தோம். இது கடுமையான கறைகளை நீக்கி, உங்களுக்கு வெண்மையான ஆடைகளைத் தருகிறது. இந்தத் தயாரிப்பைப் பயன்படுத்த நாம் செய்யவேண்டியது, மூன்றரை மூடி ரின் ஆலா ஃபேப்ரிக் ஒயிட்னரை அரை வாளி தண்ணீரில் சேர்த்து, நமது வெள்ளை நிற ஆடைகளை 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர் வழக்கமான சலவைத்தூள் கொண்டு அவற்றை அலசி, துவைக்க வேண்டும்.

5. அதிக அளவு சலவைத்தூள் பயன்படுத்த வேண்டாம்

அதிக அளவு சலவைத்தூள் பயன்படுத்தினால் நம்முடைய ஆடைகள் இன்னும் அதிக வெண்மையாகவும் மற்றும் சுத்தமாகவும் இருக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதிக அளவு சலவைத்தூள் பயன்படுத்துவதால் அது நம்முடைய  துணிகளில் சில எச்சங்களை விட்டுச் செல்கிறது, இதனால் அதிக அளவு அழுக்குகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதை நாங்கள் கண்டறிந்தோம். எனவே அதிக அளவு சலவைத்தூள் நம்முடைய ஆடைகளை அசுத்தப்படுத்துகிறது. அதனால் எவ்வளவு சலவைத்தூள் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்கிறார்களோ, அதே அளவு சலவைத் தூளை பயன்படுத்தவும் மற்றும் இதனால் துணிகளைச் சரியாக அலச முடியும்.

6. சூரிய ஒளியில் காய வைத்தல்

சூரியக் கதிர்கள் இயற்கையாகவே துணிகளை வெண்மை நிறமாக மாற்றும் ஆற்றல் பெற்றவை. துணிகளை வெயிலில் தொங்க விடுவதால், துணிகள் உலர்வதோடு மட்டுமல்லாமல், அதிக வெண்மையையும் பெறுகிறது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். 

மோசமான வானிலை காரணமாகவோ அல்லது வேறு ஏதாவது காரணத்தினாலோ, உங்களால் சூரிய ஒளியில் துணிகளை உலர்த்த முடியவில்லை என்றால் டிரையர் மூலமாக உங்களின் வெள்ளை நிற ஆடைகளைக் காய வைக்கலாம். ட்ரையர் பயன்படுத்தும் பொழுது அதிக அளவு வெப்பத்துடன் உபயோகித்தால் ஆடைகள் சேதமடைந்து விடும் எனவே குறைந்த அளவு வெப்பத்தை பயன்படுத்த நாங்கள் பரிந்துரை செய்கிறோம் மற்றும் ஆடைகள் மஞ்சள் நிறம் ஆவதை தடுக்க அவற்றில் சிறிது ஈரம் இருக்கும் பொழுதே எடுத்து விட வேண்டும்.

இந்தக் குறிப்புகள் மூலம் உங்களின் வெள்ளை நிற ஆடைகள் புதியது போன்ற தோற்றத்துடனும், பிரகாசத்துடனும் இருக்கும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது