
பல மாதங்களாக உங்கள் வீட்டை ஆழ்ந்த சுத்தம் செய்யாமல் மிகவும் பிஸியாக இருந்தால், செய்யாமல் இருக்கும் சுத்தத்தை செய்ய வேண்டிய நேரம் இது. நீங்கள் வீட்டிலேயே இருக்கும்போது உங்கள் நேரத்தை பயன்படுத்திக் கொள்வது நல்லது, ஏனென்றால் உங்கள் வீட்டை சுத்தம் செய்வது உடற்பயிற்சி போலிருக்கும்.
உங்கள் கண்ணாடி அசுத்தமாக மாறியுள்ளதா அல்லது உங்கள் வெள்ளை தலையணை கவர்கள் மஞ்சள் நிறமாக மாறியுள்ளதா? இதற்கு முன் தினசரி அலுவலக வேலைகள் மற்றும் வீட்டு வேலைகள் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கலாம். இருப்பினும், அவற்றை சுத்தம் செய்ய இதுதான் சரியான நேரம்.
1) மிக்சர் மற்றும் கிரைண்டர்
-mixer-and-grinder.jpg)
நீங்கள் நம்பியிருக்கும் மிக்ஸர் மற்றும் கிரைண்டர் அழுக்கு படிந்து உள்ளதா? பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் பாத்திரங்களைக் கழுவும் ஜெல் கலவையைச் சேர்த்து உங்கள் மிக்ஸரை இயக்கவும். இது கூர்மையான ப்ளேட்களைத் தொடாமல் உங்கள் மிக்சரின் உட்புறங்களை சுத்தம் செய்யும். சோப்பு கரைசலை உருவாக்க நீங்கள் விம் பாத்திரங்களைக் கழுவும் திரவத்தைப் பயன்படுத்தலாம். இது சந்தையில் எளிதாகக் கிடைக்கக்கூடியதாகும்.

2) மைக்ரோவேவ்

இந்த நாட்களில் நீங்கள் வீட்டிலேயே இருப்பதால், உங்கள் குடும்பத்தினருக்காக பேக் செய்ய விரும்பலாம் அல்லது வீட்டில் பீஸ்ஸா தயாரிக்க முயற்சி செய்யலாம். ஆனால் உங்கள் மைக்ரோவேவை கடைசியாக எப்போது சுத்தம் செய்தீர்கள்? அதை சுத்தம் செய்ய தண்ணீர் மற்றும் பாத்திரங்களைக் கழுவும் திரவத்தைப் பயன்படுத்தவும், நீங்கள் அதை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு நன்கு உலர விடவும்.
3) சமையலறை அலமாரிகள்
-kitchen-shelves.jpg)
நாங்கள் தினமும் பாத்திரங்களை கழுவுகிறோம், ஆனால் எங்கள் சமையலறையில் உள்ள அலமாரிகளை துடைக்க நேரம் கிடைப்பதில்லை. இதன் விளைவாக, இந்த உயரமான மேற்பரப்புகளில் எண்ணெய் மற்றும் பிசுக்கு சேர்கிறது. இந்த மேற்பரப்புகள் அனைத்தையும் வீட்டில் பயன்படுத்தும் சோப்பு மற்றும் தண்ணீரில் சுத்தம் செய்யலாம்.
சுத்தம் செய்த பிறகு, சிறந்த சுகாதாரத்திற்காக அவற்றை கிருமி நீக்கமும் செய்யலாம். அடிக்கடி தொட்ட மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்ய சோடியம் ஹைபோகுளோரைட்டை 0.5% (சமமான 5000 பிபிஎம்) பயன்படுத்த முன்னணி தேசிய மற்றும் சர்வதேச சுகாதார நிறுவனங்கள் பரிந்துரைக்கின்றன. உங்கள் வீட்டில் மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்ய, செயல்திறன் வாய்ந்த மூலப்பொருளாக சோடியம் ஹைபோகுளோரைட்டின் 0.5% க்கும் அதிகமான செறிவுகளைக் கொண்ட டொமக்ஸ் ஃப்ளோர் கிளீனர் போன்ற தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்தலாம். பேக்கில் அறிவுறித்தியபடி பயன்படுத்தவும், எப்போதும் ஒரு சிறிய மறைக்கப்பட்ட பகுதியில் சோதித்து சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்த பின் துவைக்கவும்.
4) மசாலா கொள்கலன்கள்
-spice-containers.jpg)
உங்கள் சமையலறையில் உள்ள மசாலா டப்பாக்களில் எண்ணெய் மற்றும் பிசுக்கு படிந்துள்ளதா? அனைத்து டப்பாக்களையும் காலி செய்து, தண்ணீர் மற்றும் பாத்திரங்களைக் கழுவும் திரவம் கொண்டு கொள்கலன்களை சுத்தம் செய்யுங்கள். நீங்கள் மீண்டும் மசாலாப் பொருள்களை நிரப்புவதற்கு முன்பு அவற்றை உலர வைக்கவும்.
5) தண்ணீர் பாட்டில்கள்
-water-bottles.jpg)
நீங்கள் சமீபத்தில் உங்கள் தண்ணீர் பாட்டில்களைக் கழுவவில்லை என்றால், அவை துர்நாற்றம் வீசத் தொடங்கலாம். தண்ணீர் மற்றும் பாத்திரங்களைக் கழுவும் திரவத்தின் கலவையில் பாட்டில்களில் ஊற்றி வைக்கவும். இது சில மணிநேரங்கள் அல்லது ஒரே இரவில் கூட இருக்கட்டும். அடுத்து, தண்ணீரில் அவற்றை நன்கு சுத்தம் செய்யுங்கள்.
6) விளக்குதிரை

நீங்கள் வீட்டில் விளக்குகளை விரும்பினாலும், விளக்குத்திரைகளை சுத்தம் செய்ய உங்களுக்கு நேரமில்லை. உங்கள் வீட்டிற்கு பிரகாசமான தோற்றத்தை அளிக்க இந்த பணியை இப்போது ஏன் மேற்கொள்ளக்கூடாது? நீங்கள் பழைய துணியால் உலோக விளக்கு விளக்குகளை துடைக்கலாம், அவை துணியால் செய்யப்பட்டால் அவற்றை கையால் கழுவலாம்.
7) ஜன்னல் திரைச்சீலைகள்
-window-curtains.jpg)
உங்கள் ஜன்னல் திரைச்சீலைகளை கழற்றி உங்கள் சலவை இயந்திரத்தில் இடவும். அவற்றில் எந்த கொக்கிகள் இணைக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவும். நேரடி சூரிய ஒளி நிறமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், திரைச்சீலைகளை நிழலில் உலர வைக்கவும்.
8) வெள்ளை தலையணை உறைகள்
-white-pillowcases.jpg)
வெள்ளை தலையணை உறைகள் உங்கள் படுக்கையில் பஞ்சுபோன்ற மேகங்களைப் போல இருக்கும். இருப்பினும், காலப்போக்கில், அவை மஞ்சள் நிறமாக மாறும். கறைகளை அகற்ற நீங்கள் இப்போது அவற்றை துவைக்கலாம். போர்வைகள் மற்றும் துணிகளை மீண்டும் வெண்மையாக்குவதற்கு ரின் ஆலா போன்ற ப்ளீச் அடிப்படையிலான (சோடியம் ஹைபோகுளோரைட்) தயாரிப்பைப் பயன்படுத்தலாம். ரின் ஆலா ஒரு சோடியம் ஹைபோகுளோரைட் ப்ளீச் மற்றும் வெள்ளை ஆடைகளில் மட்டுமே பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
வண்ண ஆடைகளில் இதைப் பயன்படுத்த வேண் டாம்.
9) கண்ணாடிகள்

உங்கள் வீட்டில் உள்ள கண்ணாடிகள் பனிமூட்டமாக மாறிவிட்டதா? உங்கள் அலமாரி மற்றும் டிரஸ்ஸிங் கண்ணாடிகள் மற்றும் அலங்கார பொருட்களில் தூசு குவித்து அழுக்காகின்றன. கண்ணாடியைத் துடைக்க பழைய செய்தித்தாள் அல்லது பஞ்சு இல்லாத துணியைப் பயன்படுத்தி அவற்றை மீண்டும் பிரகாசிப்பதைப் பாருங்கள்!
10) ஷவர் திரைசீலைகள்
-shower-curtains.jpg)
ஷவர் திரைச்சீலைகள் உங்கள் குளியலறையின் எஞ்சிய பகுதிகளை உலர வைக்க உதவுகின்றன, ஆனால் நுரை மற்றும் அசுத்தம் படிந்துவிடும். சோப்பு மற்றும் தண்ணீரில் அவற்றைக் கழுவி, அவை புதிதாக பிரகாசிப்பதைப் பாருங்கள்!
நீங்கள் வீட்டிற்குள் அதிக நேரம் செலவிடும்போது உங்கள் வீட்டை சுத்தம் செய்வது நல்ல யோசனையாக இருக்கும். உங்கள் வீட்டை தூசி மற்றும் கிருமிகள் இல்லாமல் வைத்திருக்க எங்கள் துப்புரவு உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தவும். அதே போல் உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் பாது காப்பீர்கள்.