வெள்ளை ஆடைகளை துவைப்பது

சலவை இயந்திரத்தில் வெள்ளை ஆடைகளிலிருந்து கடுமையான கறைகளை அகற்றுவதற்கான உதவிக்குறிப்புகள். வெள்ளை ஆடைகளிலிருந்து கடினமான கறைகளை அகற்றுவது எளிதானது அல்ல. எனினும் சாத்தியமற்றதும் அல்ல. உங்கள் வெள்ளை ஆடைகளை எப்படி பிரகாசமாக கறையின்றி வைத்திருக்க முடியும் என்பதற்கான சில உத்திகள் இங்கே!

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

வெள்ளை ஆடைகளை துவைப்பது
விளம்பரம்
Surf Excel Matic Liquid

பிரகாசமான சுத்தமான வெள்ளை சட்டை, அழகிய வெள்ளை ரவிக்கை அல்லது மிருதுவான வெள்ளை பாண்டுகள் அணிவது போன்ற நேர்த்தியான  ஆடைக்கு  ஈடு இணையே இல்லை.  ஆனால் இந்த வெள்ளை ஆடைகளில் கறை ஏற்பட்டால் அதை  நீக்குவது எவ்வளவு கடினம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே! குறிப்பாக காலர்கள், அக்குள் பகுதி மற்றும் ஸ்லீவ்ஸ் போன்ற பகுதிகளில் கடினமான கறைகளை நீக்குவது மிகவும் கடினம்.  பெரும்பாலும் நம்மில் பலர் உணவு உண்ணும்போது கை பகுதிகளில் கரை படியும். சில நேரம் தவறுதலாக பானம் சிந்திவிடலாம் அல்லது துணி அழுக்காகிவிடுவோமோ என்ற பயத்தில் நமக்கு பிடித்த வெள்ளை ஆடைகளை அணிவதைத் தவிர்க்கிறோம்.  நேரத்தை மிச்சப்படுத்தவும் கைகளால் துவைப்பதன் மூலம் ஏற்படும் சிரமத்தை  குறைக்கவும்  பெரும்பாலும் துணி துவைக்கும் இயந்திரத்தை பயன்படுத்துவதால், க்ரீஸ், எண்ணெய் மற்றும் அழுக்கு கறைகள் திறம்பட நீக்கப்படுமா இல்லையா என்பதைக் கணிப்பது கடினம்.  துணி துவைக்கும் இயந்திரத்தில் துணி துவைத்த பின் துணியின் அமைப்பும், பிரகாசமும் அப்படியே இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.  எனவே, அவற்றைக் சலவை செய்வதில் நாம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

எனவே, உங்கள் வெள்ளை ஆடைகளிலிருந்து அந்த கடினமான கறைகளை எவ்வாறு நீக்குவது என்ற  கவலை இனி வேண்டாம். ஏனென்றால் அவற்றை முழுமையாக சுத்தம் செய்வதற்கான நேர்த்தியான தீர்வுகளோடு  இங்கே வந்திருக்கிறோம்!

1. சலவை செய்வதற்கு முன்பு எப்போதும் வெள்ளை துணிகளை பிரித்து தனியாக வைக்கவும்

சலவை செய்வதற்கு முன்பு எப்போதும் வெள்ளை துணிகளை பிரித்து தனியாக துவைப்பது சிறந்தது. ஏனெனில் வண்ணமயமான ஆடைகள் மற்ற துணிகளில் உள்ள நிறங்கள் சிறிதளவும்  ஒட்டிக்கொள்ளாமல் தடுக்கிறது.  எனவே வெள்ளை துணிகளை பிரித்தெடுத்து கடினமான கரை இருந்தால் தனியே வைக்கவும்.

2. கடினமான கறைகளை அகற்ற சலவை செய்வதற்கு முன் ஊறவைக்கவும்

விளம்பரம்
Surf Excel Matic Liquid

சில கறைகள் விடாப்பிடியாக இருக்கும். அவற்றை சலவை இயந்திரத்தில் துவைக்கும் சுழற்சியின் மூலம் அகற்றுவது கடினம்.  அவைகளுக்கு கொஞ்சம் கூடுதல் கவனமும் முயற்சியும் தேவை.  அதற்காக, அவற்றை ஒரு வாளியில் மிதமான சூடு தண்ணீரில் சுமார் 30-40 நிமிடங்கள் ஊற வைப்பது உத்தமம். மேலும் சர்ஃப் எக்செல் மேட்டிக் லிக்விட் ஒரு மூடி வாளியில் சேர்த்து ஊறவைத்து துவைத்தப்போது ஆடைகளை சேதப்படுத்தாமல் கடினமான கறைகளை தளர்த்த உதவியது என்பதைக் கண்டுகொண்டோம்.

3. தேவைப்பட்டால் கடுமையான கறைகளை நீக்க கரை படிந்த இடத்தை கசக்குவது அவசியம்

பெரும்பாலும்,  வெள்ளை ஆடைகளை முன்கூட்டியே ஊறவைத்து துவைப்பது கடினமான கறைகளைத் தளர்த்த போதுமானது, மீதமுள்ள வேலைகளை சலவை இயந்திரம் மூலம் செய்ய முடியும்.  ஆனால், சில சமயங்களில், கறை மிக நீண்ட காலமாக நீக்காமல் விடப்பட்டிருந்தால் , அதை நீக்குவதற்கு கொஞ்சம் கூடுதல் முயற்சி தேவைப்படுகிறது.

சர்ஃப் எக்செல் மேட்டிக் லிக்விட் ஒன்று  அல்லது இரண்டு துளிகள் கறையின் மீது ஊற்றி, மூடியின் மறுமுனை (இது ஒரு உள்ளடிக்கிய ஸ்க்ரப்பரைக் கொண்டுள்ளது) கொண்டு மெதுவாக தேய்த்த பிறகு சலவைக்கு போடுவது உத்தமம்.  இயந்திரத்தில் போடுவதற்கு முன்பு மேலும் தேவைக்கேற்ப டிடர்ஜெண்டை சேர்த்துக்கொள்ள வேண்டும்.  ஆடையில் உள்ள கரையை நீக்க உள்ளடிக்கிய ஸ்க்ரப்பரைக் கொண்டு கடிகாரம் சுற்றுவதை போல் மெதுவாக தேய்க்கவும்.  இந்த தயாரிப்பு மிகவும் எளிதில் உபயோகப்படுத்த முடியும். மேலும் ஒரு திரவமாக இருப்பதால் எளிதில் கரைந்துவிடும் ,பயன்படுத்துவதும் மிகவும் சுலபம். இது கடினமான கறைகளை திறம்பட நீக்குகிறது. எனவே,  இது துணிகளைக் சுத்தப்படுத்திவதற்கும், கடினமான கறைகளை வெளியேற்றுவதற்கும் சிறந்த தேர்வாக அமைகிறது.  அதன் புதிய நறுமணம் கூடுதல் போனஸ் . இது மிகவும் பிடித்த அம்சமாகும்.

4. சலவை இயந்திரத்தில் சரியான சலவை சோப்பை பயன்படுத்த வேண்டும்

உங்கள் வெள்ளை உடைகள் சுத்தமாகவும், புதியதாகவும் வெளிப்படுவதை உறுதி செய்யவும், சலவை இயந்திரம் தன் வேலையைச் செய்ய நீங்கள் அனுமதிக்கும் நேரம் இது.  உங்கள் சலவை சுமையை குறைக்க , முன்பே ஊறவைத்த வெள்ளை துணிகளையும் மற்ற வெள்ளை ஆடைகளையும் ஒன்றாக சேர்க்கவும்.  மேலும், சலவை இயந்திரத்தின் டிரம் சுவருக்கும் துணிகளுக்கும் இடையில் உங்கள் உள்ளங்கை பொருந்துவதற்கு  இடம் இருப்பதை உறுதிசெய்வது நல்லது.இது இயந்திரத்தின் அதிகபட்ச அளவை தாண்டி துணி சேர்வதை தடுக்கும்.

சர்ஃப் எக்செல் மேட்டிக் லிக்விட் போன்ற உயர்தர டிடர்ஜெண்டை சேர்க்கவும்.  இது டாப் லோட் மற்றும் ஃபிரன்ட் லோட்  மெஷினில் பயன்படுத்தும் வகையில் இரண்டும் மாறுபட்ட வகையிலும் கிடைக்கிறது.  இது வெவ்வேறு வகையான சலவை இயந்திரத்திற்கும் ஏற்றதாக அமைகிறது.  பாக்கின் படி, சர்ஃப் எக்செல் மேட்டிக் லிக்விட் விரைவாக தண்ணீரில் கரைந்து, கறைகளில் திறம்பட செயல்படுகிறது. மேலும் துணிகளிலோ அல்லது இயந்திரத்திலோ எச்சங்களை விட்டுவிடாதவாறு செயல்படுகிறது!  வெள்ளை ஆடைகளைப் பொறுத்தவரை, இது இன்னும் முக்கியமானது, ஏனென்றால் நம்முடைய அழகிய வெள்ளை துணிகளில் சிறிதளவு சோப்பு எச்சங்களை கூட பார்ப்பதை நாம் விரும்ப மாட்டோம்.

5. சலவை சுழற்சியை அமைப்பதற்கு முன் ஆடைகளின் பராமரிப்பு லேபிளை சரிபார்க்கவும்

கறைகள் உள்ள ஆடைகளை முன்கூட்டியே ஊறவைத்த பிறகு (தேவைப்பட்டால்), நீங்கள் சலவை இயந்திரத்தில் வைக்க விரும்பும் ஆடைகளின் துணி பராமரிப்பு லேபிளை சரிபார்க்க ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.  ஆடைகளை சலவை செய்ய பரிந்துரைக்கப்பட்ட வெப்பநிலையையும், உலர்த்தும் முறையையும்( சூரியன் வெளிச்சத்தில் உலர்தும் வகை, காற்றில் உலர்தும் வகை துணிகள்) சரிபார்ப்பது ஒரு நல்ல நடைமுறையாகும். இவைகளை சரி பார்த்து துணிகளை இயந்திரத்தில் வைத்து சரியான சூழர்ச்சி முறையை தேர்தெடுத்து, சலவை டிடெர்ஜெண்ட் சேர்த்து  இயந்திரத்தை தனது வேலையைச் செய்ய அனுமதிக்க வேண்டும்.  மென்மையான  ஆடைகளுக்கு மென்மையான சுழற்சியை தேர்தெடுக்கவும். பேன்ட்கள், கைத்தறி போன்ற பிற வெள்ளை துணிகளுக்கு  சாதாரண அல்லது சக்தி மிகுந்த சுழற்சியைபயன்படுத்த பரிந்துரைக்கிறோம். துணிகளின் வகையின் அடிப்படையில் நீரின் வெப்பநிலையை அமைக்கவும். (சற்று அழுக்கடைந்த அலுவலகம்  ஆடைக்கு குளிர்ந்த நீர் சுழற்சியும், பெரிதும் அழுக்கடைந்த ஆடைகள், துண்டுகள் மற்றும் பெட் ஷீட்டுகளுக்கும் சூடான நீர் சுழற்சியைபயன்படுத்த பரிந்துரை செய்ய படுகிறது).

6. வெள்ளை துணிகள் இயற்கையாக உலரட்டும்

ஒரு முறை சலவை சுழற்சி முடிந்ததும், சலவை இயந்திரத்திலிருந்து வெள்ளை ஆடைகளை அகற்றி, இயற்கையாக உலர வெளியே கொடியில் தொங்க விடுங்கள்.  மெஷின் ட்ரையர்கள் வெப்ப நிலைகளில் நிறைய மாற்றங்கள் இருப்பதால் உங்கள் வெள்ளை ஆடைகளை பாழடைய செய்யலாம்.  மாற்றாக, கொடியில் உலர்த்துவது உங்கள் வெள்ளை ஆடைகளுக்கு மிகவும் சிறந்தது.

கடுமையான கறைகளை அகற்ற இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றினால் உங்கள் வெள்ளை உடைகள் அணிய புதியது போலவே இருக்கும். பின்னர், ஸ்மார்ட், பிரகாசமான வெள்ளை துணி அணிவது உங்களுக்கு அளிக்கும் நம்பிக்கை அனுபவிப்பதில் இருந்து உங்களைத் தடுக்க எந்த தடையும் இருக்காது.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது