
வாஷிங் மெஷின்கள் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விசயங்கள்.
வெந்நீரில் உடை அல்லது வேறு எதையும் துவைக்கும் முன்பாக, வழிகாட்டியில் கூறப்பட்டுள்ள விவரங்களை படித்து பார்க்க வேண்டும்.
வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
கொள்ளளவு
நீங்கள் க ணவன், மனைவி எனில், ஒரு 5 கிலோ கொள்ளளவு கொண்ட வாஷிங் மெஷின் நல்லது. அதுவே, பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருக்கும் வீடு எனில், 7 முதல் 8 கிலோ கொள்ளளவு உள்ள வாஷிங் மெஷினை வாங்குங்கள். பாரம்பரியமான கூட்டுக்குடும்பம் எனில், 9.5 கிலோ சுமை இழுக்கக்கூடிய வாஷிங் மெஷின் வாங்குவது நல்லது.

ஆட்டோமேட்டிக் அல்லது செமி-ஆட்டோமேட்டிக்
நீங்கள் வேலைக்குச் செல்லும் நபர் எனில், ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினை வாங்குங்கள். அது விரைவாக அதேசமயம் சௌகரியமாக இயக்கக்கூடியதாகும். ஆனால், சற்று விலை அதிகமானது.
மேல்புறம் அல்லது முன்புறம் திறப்பான்
மேல்புறத்தில் திறப்பான் உள்ள மெஷின்கள் விலை குறைந்தவை. ஆனால், அவை துணியை துவைக்க, அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அத்துடன், அதிக இரைச்சலும் உண்டாக்கக்கூடியவை. அதேசமயம், முன்புறத்தில் திறப்பான் வைத்துள்ள மெஷின்கள் விரைவாகச் செயல்படும், பயன்படுத்த சவுகரியமானவை. ஆனால், இவற்றின் விலை அதிகம்.
பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை
வினிகர்
வாஷிங் மெஷினை விரைவாக, சுத்தப்படுத்த, வினிகர் சிறந்த மூலப்பொருளாகும். துணிகள் ஏதுமின்றி, மெஷினை திறந்து, 2 கப் வினிகரை கொட்டி, பின்னர் மூடியபடி, சிறிது நேரம் இயக்கினால் போதும். மெஷின் சுத்தமாகிவிடும்.
வெந்நீர் பயன்படுத்தி பாக்டீரியா மற்றும் கிருமிகளை கொல்லுங்கள்
குளிர் நீரில் உடைகள் மற்றும் பெட்ஷீட்களை துவைப்பதற்குப் பதிலாக, வெந்நீரில் துவைப்பதன் மூலமாக, நோய்க்கிருமிகளை எளிதில் கொல்ல