
கம்பளி சால்வைகள் குளிர்காலங்களில் உபயோகப்படுத்தப்படும் இன்றியமையாத ஒரு பொருளாகும். இந்த சால்வைகள் நம் உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ள மிகவும் உதவுகிறது. இந்த சால்வைகளில், தூசு மற்றும் மாசினால் ஏற்படும் அழுக்குகளை, அவற்றின் நுண்மையான துணி இழைகள் பாதிக்காதவாறு சலவை செய்யும் வழிமுறைகளை காண்போம்.
எங்களின் சுலபமான சுத்தப்படுத்தும் செயல்முறைகளை பின்பற்றி இவற்றைகைகளாலும், இயந்திரத்தாலும்எளிதாகசலவைசெய்யும்முறைகளைகீழேகாண்போம்:
கம்பளி சால்வைகளை கையால் துவைக்கும் முறை
STep 1: துவைக்கும் கலவை
அரைவாளி சூடான தண்ணீரில், இரண்டு மேசைக்கரண்டி சோப்புதூள் சேர்த்து, நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.

STep 2: ஊற வைத்தல்
கம்பளி சால்வையை 15 நிமிடம் இந்த கலவையில் ஊறவைக்கவும்.
Step 3: அலசுதல்
இன்னொரு வாளியில் சூடான தண்ணீர் எடுத்து அதில் இந்த சால்வையை அலச வேண்டும்.
Step 4: பிழிதல்
சால்வையை நன்றாக பிழிய வேண்டும்
STep 5: துணி கொண்டு உலர்த்துதல்
மீதமுள்ள தண்ணீர் நன்றாக வடிவதற்கு, ஒரு துண்டை தரையில் விரித்து அதன் மேல் கம்பளியை பரப்பவும். அதை சுழற்றி 5 நிமிடங்கள் பொறுக்கவும், பின்காயவிட வேண்டும்.
Step 6: காற்றில் உலரவிடுதல்
மற்றுமொறு துண்டைதரையில் விரித்து அதில் கம்பளியை விரித்து , காற்றில் உலர விடவேண்டும்.
இயந்திரத்தில் துவைக்கும் முறை
சலவை செய்யும் முன், இயந்திரத்தில் துவைக்ககூடியதா என்று சால்வையின் கவனிப்பு சீட்டை நன்றாக ஆராயவும்.
Step 1: ஊறவைத்தல்
அரைவாளி சூடான தண்ணீரில் இரண்டு மேசைக்கரண்டி சோப்புதூள் சேர்த்து சால்வையை 5 நிமிடம் நன்றாக ஊறவைக்கவேண்டும்.
STep 2: சலவை செய்தல்
இயந்திரத்தில் சூடான தண்ணீர் கொண்டு நிரப்பி சால்வையை மென்மையான சுழற்சி முறையில் துவைக்க வேண்டும். உங்கள் சலவை இயந்திரத்தில் கம்பளித்துணிகள் துவைக்கும் பிரத்தியேக அம்சம் உண்டென்றால் அதை பயன்படுத்தலாம். துணிமென்மைப்படுத்தும் திரவங்களை சேர ்த்து உபயோகப்படுத்தினால் சால்வை மேலும் மென்மையாகவும் நறுமணத்துடன் இருக்கும்.
Step 3: துணிகொண்டு உலர்த்துதல்
சுழற்சி முடிந்த பின் ஒரு துண்டை தரையில் விரித்து அதில் கம்பளியை சுற்றி நன்றாக உலரவைக்க வேண்டும்.
Step 4: காற்றில் உலரவிடுதல்
மற்றும் ஒரு துண்டை தரையில் விரித்து அதில் கம்பளியை விரித்து காற்றில் உலர விட வேண்டும்.
இந்த முறைகளைக்கொண்டு நீங்கள் அங்கோரா மற்றும் அக்ரிலிக் போன்ற பலவிதமான கம்பளிகளை சலவைசெய்யலாம் .