
உங்களுடைய துணிகள் துவைத்த பிறகு புதிய வாசனையுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதை எப்படிச் செய்வது என்பது குறித்துச் சொல்வதற்கு நாங்கள் இங்கு இருக்கிறோம். உங்களுடைய துணிகள் நல்ல மணத்துடன் இருக்க சில எளிய உதவிக்குறிப்புகள் எங்களிடம் இருக்கிறது.
உங்களுடைய துணிகளைத் துவைத்தப் பின், அதிகப்படியான சூரிய ஒளியில் அவற்றை உலர வைக்காதீர்கள், ஏனெனில் வாசனையை அதிகப்படியான அளவில் ஆவியாகிவிடும். நீங்கள் டிரையரைப் பயன்படுத்தலாம் அல்லது வீட்டிலேயே ஒரு தட்டையான மேற்பரப்பில் இயற்கையான முறையில் காய வைக்கலாம்.
1) ஃபேப்ரிக் சாஃப்ட்னர்
உங்களுடைய துணிகள் நல்ல நறுமணத்துடன் இருப்பதற்கு ஃபேப்ரிக் சாஃப்ட்னரை பயன்படுத்துவது சிறந்த வழிகளில் ஒன்றாக இருக்கும். நீங்கள் சலவை இயந்திரத்தைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், அதில் துணிகளை அலசும் போது 1 மேஜைக்கரண்டி அளவில் ஃபேப்ரிக் சாஃப்ட்னரை சேர்க்க வேண்டும். நீங்கள் கைகளால் துவைக்கிறீர்கள் எனில், துணிகளை அலசி முடிந்ததும், ½ மேஜைக்கரண்டி ஃபேப்ரிக் சாஃப்ட்னரை எடுத்து ஒரு வாளி தண்ணீரில் சேர்க்கவும். அதில் உங்களுடைய துணிகளை போட்டு 15 நிமிடங்கள் வைத்திருக்கவும். பின்ன ர் துணிகளை வெளியே எடுத்து அதிகப்படியான தண்ணீரை பிழிந்து விட்டு உலர வைக்கவும்.
2) நறுமணம் மிக்க சலவைத்தூள்
உங்களுடைய துணிகளைத் துவைப்பதற்கு நல்ல மணம் கொண்ட சலவைத்தூளை தேர்ந்தெடுக்கலாம். இதற்காக சந்தையில் பல்வேறு விருப்பங்கள் இருக்கிறது. உங்கள் துணிகளைத் துவைப்பதற்கு முன், ½ கப் அளவுக்கு நல்ல மணம் கொண்ட சலவைத்தூளை எடுத்து அதனை ஒரு வாளி தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் வழக்கம் போல் துவைக்க வேண்டும். உங்கள் உடைகள் நன்றாக இருக்கும்!

3) வினிகர்
நீங்கள் சலவை செய்யும் துணிகள் இயற்கையான முறையில் இனிமையான வாசனையுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதற்கான நல்ல தீர்வாக வினிகர் இருக்கும். உங்கள் துணிகளை துவைப்பதற்கு முன், ஒரு வாளி மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரை எடுத்து அதில் ½ கப் அளவில் வினிகரைச் சேர்க்கவும். இந்த கரைசலில் உங்கள் துணிகளை 30 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் சாதாரணமாகத் துவைக்க வேண்டும்.
4) லவெண்டர் நீர்
உங்களுடைய சலவையை நல்ல நறுமணத்துடன் வைத்திருப்பதற்கு லாவெண்டர் நீரானது திறம்படச் செயலாற்றுகிறது மேலும் இது சந்தையில் எளிதாகவும் கிடைக்கும். நீங்கள் சலவை இயந்திரத்தைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், துணிகளை அலசும் போது 1 மேஜைக்கரண்டி அளவில் லாவெண்டர் நீரை சேர்க்கவும். நீங்கள் கைகளால் துவைக்கிறீர்கள் எனில், துணிகளைத் அலசி முடிந்ததும், ஒரு வாளி நீரில் 1 மேஜைக்கரண்டி அளவில் லாவெண்டர் நீரை சேர்க்கவும். அதில் உங்களுடைய துணிகளைப் போட்டு, 15 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும். பின்னர் அதிகப்படியான தண்ணீரை பிழிந்து விட்டு உலர வைக்கவும். உங்களுடைய துணி நீண்ட நேரம் நறுமணத்துடன் இருப்பதற்கு, 1 தேக்கரண்டி அளவுக்கு லாவெண்டர் நீரில் வெண்ணிலா எசன்ஸை சேர்க்கவும்.
! இந்த உதவிக்குறிப்புகளை முயற்சி செய்து, ஒவ்வொரு முறை நீங்கள் துணிகளை துவைக்கும் போதும் புதிய வாசனையுடன் வைத்திருங்கள்