
நீங்கள் உங்களுடைய கைகளாலேயே இயற்கை மூலப் பொருட்களிலிருந்து வாசனை திரவியத்தை தயாரிக்க விரும்புகிறீர்களா? இது ஒரு அருமையான யோசனை, ஏனெனில் இது சுற்று சூழலை பாதிக்காத மூலப்பொருட்களைப் பயன்படுத்தி ஒரு நறுமண திரவத்தை உருவாக்க உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. இதற்கு சிறிது நேரம் ஆனாலும் கூட, இது மதிப்பு மிக்கதாக இருக்கும். உங்கள் சருமத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் உகந்த ஒரு நறுமணம் கொண்ட வாசனை திரவியத்தை எவ்வாறு தயாரிப்பது என்பதை இங்கே காணலாம்.
நீண்ட நேரத்தி ற்கு வாசனையைத் தக்கவைத்திருக்கும் அற்புதமான வாசனைத் திரவியத்தை உருவாக்க எளிதான செயல்முறையை நாங்கள் சுருக்கமாக காட்டியுள்ளோம். நீங்கள் இதனை ஒரு சிறிய கொள்கலனில் சேமிக்கலாம்; நீங்கள் பயணம் செய்யும் போது இதனை எளிதாக எடுத்து செல்லலாம், நீங்கள் வேலைக்குச் செல்லும்போது இதனை உங்களுடைய கைப்பையில் வைத்திருக்கலாம். இது உங்களுடைய துணிகளை மிகவும் நன்றாக வாசனையுடன் வைத்திருக்கிறது!
உங்களுடைய வாசனை திரவியம் மிகவும் கடுமையானதாக இருந்தால், மற்றொரு மேஜைக்கரண்டி அளவுக்கு வடிகட்டிய நீரைச் சேர்த்து அதனை நீர்க்க செய்யவும்.
படி 1: திரவத்தை தயாரிக்கவும்
ஒரு பாட்டிலை எடுத்து, அதில் 2 தேக்கரண்டி அளவில் பாதாம் எண்ணெய் மற்றும் 6-7 சொட்டுகள் நறுமண எண்ணெய்யோ அல்லது உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப ஏதாவது நறுமண எண்ண ெய்களின் கலவையை சேர்க்கவும்.

படி 2: அது அப்படியே இருக்கட்டும்
1 நிமிடம் வரையிலும் பாட்டிலை நன்றாகக் குலுக்கவும். பின்னர் அதனை ஒரு இடத்தில் அப்படியே வைத்து 2-3 நாட்கள் வரை அசைக்காமல் வைத்திருக்கவும்.
படி 3: அதை வடிகட்டுதல்
2-3 நாட்களுக்குப் பிறகு, 2 மேஜைக்கரண்டி அளவுக்கு வடிகட்டிய நீரைச் சேர்க்கவும்.1 நிமிடம் வரை பாட்டிலை நன்றாகக் குலுக்கி, பின்னர் ஒரு வலை வடிகட்டி மூலம் அதில் இருப்பவற்றை வடிகட்டவும்.
படி 4: அதைச் சேமித்தல்
ஒரு ஸ்ப்ரே பாட்டில ில் அதனை ஊற்றவும். பின்னர் 1 வாரம் வரையிலும் வெப்பம் மற்றும் ஒளி படாமல் பாதுகாக்கவும்.
படி 5: இதே தயாராகிவிட்டது!
1 வாரத்திற்குப் பிறகு, வலை வடிகட்டியை பயன்படுத்தி பாட்டிலின் அடிப்பகுதியில் தங்கியிருக்கும் அனைத்து வண்டலையும் வடிகட்டவும். ஒரு அழகான பாட்டிலில் வாசனைத் திரவியத்தை ஊற்றவும்.
தற்போது நீங்கள் அதனைப் பயன்படுத்தத் தொடங்கலாம். இந்த வாசனை திரவியங்களை விழாக்கள் மற்றும் பிறந்தநாளுக்கு பரிசளிக்க ஒரு சிறந்த யோசனையாக இருக்கும். நீங்கள் தயாரித்த நறுமணம் கொண்ட படைப்புகளை அனுபவித்து, அந்த அனுபவத்தை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!