
இந்த குறிப்புக்கள் வீட்டில் நீங்கள் தண்ணீரை சேமிக்க உதவுவதோடு சுற்றுச்சூலையும் சீராக்க உதவும்.
உங்கள் ஷவரில் ரெகுலேட்டர் பொருத்துங்கள். இது தண்ணீர் பாயும் விகிதங்களின் அதிகபட்ச வரம்பை பராமரிக்கும்.
1) பற்களை பிரஷ் செய்யும் போது தண்ணீர் குழாயை அடைக்கவும்.
நாம் அழகாக, ஆரோக்கியமாக புன்னகைக்கலாம், அதே நேரத்தில் தண்ணீரையும் சேமிக்க முடியும். நீங்கள் உங்கள் பற்களை பிரஷ் செய்யும் போது நீர் வீணாகாமல் குழாயை மூடி விடுங்கள். இதன் மூலம் நீங்கள் ஒரு நிமிடத்திற்கு 6 லிட்டர்கள் வரை தண்ணீரை சேமிக்கலாம்!
2) சிறிது நேரம் மட்டுமே ஷவர் பயன்படுத்துங்கள்
தண்ணீரும் காற்றும் சேர்ந்து வரும் ஒரு ஏரேட்டட் ஷவர் பயன்படுத்துவது பற்றி சிந்தியுங்கள். இது நீண்ட ஷவர்களின் போது தண்ணீர் சேதம் ஆவதை குறைத்து விடுகிறது. பொதுவாக ஒரு குளியலுக்கு சுமார் 100 லிட்டர் தண்ணீர் தேவைப்படும் எனில் சிறிது நேரம் ஷவர் பயன்படுத்தும்போது 60-70 லிட்டர்கள் தண்ணீர் மட்டுமே போதும். எனவே, சிறிது நேரம் மட்டுமே ஷவர் பயன்படுத்துங்கள்.

3) ஆற்றல்மிக்க லாண்டரி டிடர்ஜென்ட் பயன்படுத்தும் பக்கெட்-வாஷ்
உங்கள் ஆடைகளை ஆற்றல்மிக்க லாண்டரி டிடர்ஜென்ட் மூலம் பக்கெட் வாஷிங் செய்தால், நீங்கள் அதிகபட்சமாக தண்ணீரை சேமிக்கலாம். ஆடைகளை பக்கெட் வாஷிங் செய்யும் போது நாம் ரின் பவுடர் பயன்படுத்த விரும்புகிறோம். ஏனெனில் இதற்கு பாதி தண்ணீரே போதும். ஆச்சரியமாக இருக்கிறதல்‘வா?
4) ஒழுகும் குழாயை சரி செய்தல்
கசியும் நீர்க் குழாயால் தினசரி 15 லிட்டர்கள் வரை தண்ணீர் சேதமாகும். ஆண்டுக்கு சேதமாகும் நீர் 5500 லிட்டர்கள். ஒரு சிறிய கசிவு கூட நமது சுற்றுச்சூழலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே எப்போதுமே நமது மதிப்புமிக்க தண்ணீர் வீணாகாமல் சேமிக்கப்பட, குழாய்கள் ஒழுகவே கூடாது என்பதை உறுதி செய்யுங்கள்.
5) உங்கள் வாட்டர் மீட்டரை தொடர்ந்து பரிசோதியுங்கள்
பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவை கண்காணிக்க வேண்டிய நேரம் நமக்கு வந்துவிட்டது. எனவே தண்ணீரை இயன்ற அளவில் அதிகம் சேமியுங்கள். எந்த அளவு தண்ணீரை பயன்படுத்துகிறீர்கள் என்று நீங்கள் பார்க்கும்போது அடுத்த மாதத்தில் எவ்வளவு தண்ணீரை சேமிக்க முடியும் என்பதும் உங்களுக்கு தெரிந்து விடும்.
முக்கிய செயல்கள்
உங்கள் பற்களை பிரஷிங் செய்யும் போது குழாயை மூடி விடுவதால் ஒரு நிமிடத்திற்கு 6 லிட்டர் வரை தண்ணீர் மிச்சம்.
ஒரு ஏரேட்டட் ஷவர் பயன்படுத்துவதால் தண்ணீர் சேதம் குறைவாகிறது.
ஒழுகும் குழாய்களை சரி செய்யுங்கள்