
உரம் என்பது தாவரங்களை வளர்ப்பதற்கு, சிதைந்த கரிமப் பொருளை, மண்- போன்ற பொருளாக மாற்றும் செயல்முறையாகும். இது இயற்கையானது, எளிதானது மற்றுமல்லாமல் தாவரங்களும் அதைத்தான் விரும்புகின்றன. பழங்கள், காய்கறிகள், இலைகள், புல், நொறுக்கப்பட்ட முட்டைக் கூடுகள், பயன்படுத்தப்பட்ட தேநீர்ப்பைகள், காகிதம், அச்சிடப்படாத அட்டைப் பலகைகள் போன்ற எந்தவொரு கரிமப் பொருளைக் கொண்டும் உரம் தயாரிக்கலாம்.
முதலில், உரம் தயாரிக்க வசதியான இடத்தைத் தேர்வுசெய்க. மொட்டை மாடி போன்ற தட்டையான ம ற்றும் வெயிலாக இருக்கும் இடத்தைத் தேர்வுசெய்க. அடுத்து, ஒரு உரம் தயாரிக்கும் தொட்டி, வழக்கமான குப்பைத்தொட்டி அல்லது வாளியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது உரம் தயாரிக்க இந்த படிப்படியான செயல்முறையைப் பின்பற்றவும்..
Step 1: அத்தியாவசியங்களை சேகரிக்கவும்
இரண்டு கொள்கலன்களை எடுத்துக் கொள்ளுங்கள், ஒன்று பழுப்பு நிற பொருட்களுக்கும் மற்றொன்று பச்சை நிறத்திற்கும். பழுப்பு நிற உருப்படிகளில் விழுந்த இலைகள், துண்டாக்கப்பட்ட மரக் கிளைகள், கிழிந்த காகிதம் மற்றும் அச்சிடப்படாத அட்டை ஆகியவை அடங்கும். மற்ற கொள்கலனில், பழ தோல்கள், மீதமுள்ள பச்சை காய்கறிகள், பச்சை இலைகள் மற்றும் வீணான சமைத்த உணவு (ஒரு சிறிய அளவு) போன்ற சமையல் பொருட்களை வைக்கலாம். இரண்டு கொள்கலன்களையும் மூடி வைக்கவும்.

Step 2: தொட்டியில் சேர்க்கவும்
உலர்ந்த மற்றும் ஈரமான கழிவுகளை அடுக்குகளாக சேர்க்கத் தொடங்குங்கள். ஈரமான கழிவுகளின் ஒவ்வொரு அடுக்குக்குப் பிறகு, உலர்ந்த கழிவுகளின் இரண்டு அடுக்குகளைச் சேர்க்கவும். ஈரப்பதம் சேர்க்க ஒவ்வொரு மட்டத்திலும் சிறிது தண்ணீர் தெளிக்கவும். இது கரிமப் பொருளை சிதைக்க உதவுகிறது.
Step 3: கலக்கவும்
தொட்டி நிரம்பும் வரை பழுப்பு மற்றும் பச்சை கழிவுகளை உங்கள் உரத்தொட்டியில் சேர்க்கவும். விரும்பத்தகாத துர்நாற்றத்தைத் தடுக்க ஒவ்வொரு வாரமும் உரத்தை கலக்கும் வைக்கோல் வாரியை பயன்படுத்தவும். கழிவுகள் முற்றிலுமாக சிதைய குறைந்தது மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும்.
Step 4: பழுப்பு நிறமாகும் வரை காத்திருக்கவும்
உரம் பழுப்பு நிறமாக மாறத் தொடங்கி உலர்ந்து காணப்பட்டால், அது தயாராகி விட்டது என்று அர்த்தமாகும்.
பால் பொருட்கள், நோயுற்ற தாவரங்கள், எலும்புகள் அல்லது விலங்குகளின் கழிவுகள் போன்றவற்றை உங்கள் உரத்தில் சேர்க்க வேண்டாம், ஏனெனில் இவை தீங்கு விளைவிக்கும்.
அவ்வளவுதான்! உங்கள் கரிம, இயற்கை உரம், தோட்டத்தில் பயன்படுத்த தயாராக உள்ளது. இந்த உரத்தை பயன்படுத்தி, உங்கள் குடும்பத்திற்கு ஆரோக்கியமான, கரிம தாவரங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்த்து, நன்மைகளை அறுவடை செய்யுங்கள். இன்றே தொடங்கவும்!