நீங்கள் வீட்டில் சுலபமாக தண்ணீரை மிச்சப்படுத்த இதோ சில வழிகள்

தண்ணீரை மிச்சப்படுத்த 4 ஸ்மார்ட் குறிப்புகளை படியுங்கள். இவை மின்சார பில்களையும் குறைப்பதற்கு உதவும். இது சுலபமானது மற்றும் சிக்கனமானது!

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Here's How You Can Easily Save Water at Your Home
விளம்பரம்
Nature Protect Floor Cleaner - leaderboard

யாருமே தண்ணீர் வீணாவதை பார்க்க விரும்ப மாட்டார்கள். குறிப்பாக நமது சுற்றுச்சூழல் மற்றும் மாதாந்திர பில்கள் மீது இவற்றால் அதிக பாதிப்பு என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். எனவே, வீட்டில் தண்ணீரை எவ்வாறு சேமிப்பது என்று உங்களுக்கு கவலை இருந்தால் உங்களுக்கு எங்களின் பாராட்டுக்கள்! தண்ணீர் பயன்படுத்துவது பற்றிய ஒரு விழிப்புணர்வு மற்றும் தண்ணீரை மிச்சப்படுத்த சிறப்பான வழிகளை சிந்திப்பதற்காக நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும்.

இன்று முதலே உங்கள் பணம் மற்றும் நமது சுற்றுச்சூழலை வீட்டில் இருந்தபடியே பாதுகாக்க தண்ணீரை மிச்சப்படுத்தும் எங்களின் முக்கிய 4 ஸ்மார்ட் மற்றும் எளிய குறிப்புகளைப் படியுங்கள்!

வீட்டில் நீங்கள் தண்ணீரை சேமிக்க நேரம் மற்றும் சக்தியை தியாகம் செய்ய வேண்டாம்! அதோடு சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை மனதில் பதிய வைப்பது மிக முக்கியம். குறைந்த தண்ணீர் உடன் விரைவாக மற்றும் சிறப்பாக செயல்படும் தயாரிப்புகளை பயன்படுத்துவது நீங்கள் தண்ணீரை, நேரத்தை மற்றும் சக்தியை மிச்சப்படுத்த மிக ஸ்மார்ட்டான வழிகளில் ஒன்று.

1) பிரஷிங் அல்லது ஷேவிங் செய்யும்போது

நீங்கள் உங்கள் பற்களை பிரஷிங் செய்யும்போது அல்லது முகத்தை ஷேவிங் செய்யும்போது தண்ணீர் குழாயை மூடி விடுவது நீங்கள் தண்ணீரை மிச்சப்படுத்துவதற்கு மிக சுலபமான வழிகளில் ஒன்று. அதுமட்டுமல்ல, இது உங்கள் மின்சார பில்களையும் கூட சிறிதளவு மிச்சப்படுத்த உதவும். தேவைப்பட்டால் மட்டுமே வெந்நீர் பயன்படுத்துங்கள். பெரும்பாலானவர்களுக்கு குளிர்ச்சியான தண்ணீரே போதுமானது!

விளம்பரம்

Nature Protect Floor Cleaner - mpu

2) சலவை செய்யும்போது

குறைந்த தண்ணீரில் நீங்கள் உங்கள் துணிகளை, ஆடைகளை சுலபமாக வாஷ் செய்து தண்ணீர் மற்றும் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். அதுமட்டுமல்ல, ரின் பவுடர் போன்ற சிறப்பான சலவை தயாரிப்பை நீங்கள் பயன்படுத்தும்போது உங்கள் ஆடைகள் சுத்தமாக குறுகிய சலவை முயற்சியே போதும். பெரும்பாலான நேரங்களில் நீண்ட நேரத்திற்கு பதிலாக குயிக் வாஷ் மூலமே ஆடைகளை நன்கு சலவை செய்ய இயலும். எனவே, நீங்கள் அடுத்த முறை அவற்றை வாஷ் செய்ய போடும்போது  இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்

3) தண்ணீரை மறுசுழற்சி செய்தல்

பெரும்பாலானோர் அவர்களின் ஆடைகளை சலவை செய்தபின் அல்லது தரைகளை சுத்தம் செய்த பின் தண்ணீரை வெளியேற்றி விடுகிறார்கள். ஆனால், தண்ணீரை மறுசுழற்சி செய்து மிச்சப்படுத்த முடியும்! நீங்கள் இந்த தண்ணீரை செடிகளுக்கு பாய்ச்சவோ அல்லது உங்கள் குழந்தைகளின் சைக்கிள்களை கழுவி சுத்தம் செய்யவோ பயன்படுத்தலாம். எனவே, ஒன்றில் இரண்டு பலன்கள் பெறலாம்!

4) குளிர்ச்சியான தண்ணீரில் அல்லது குறுகிய நேரத்தில் சலவை

இயன்றவரை உங்கள் ஆடைகளை குளிர்ச்சியான தண்ணீரில் மற்றும்/அல்லது குறுகிய நேரத்தில் சலவை செய்யுங்கள். சுகாதார குறைவாகுமோ என நீங்கள் பயப்படத் தேவையில்லை. ஏனெனில், குறுகிய சலவை நேரங்களுக்கு மற்றும் குறைவான தண்ணீருக்காகவே ரின் பவுடர் போன்ற தயாரிப்புகள் குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த குறிப்புகள் அனைத்தையும் கருத்தில் கொண்டால் நீங்கள் சுற்றுச்சூழலை காப்பற்ற முடியும் என்பதோடு உங்கள் மின்சார பில்லையும் மிச்சப்படுத்தி நீங்கள் பெருமைப்படலாம்!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது