சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத சோப்பை வீட்டிலேயே தயாரிப்பதற்கான எளிய வழி

சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே சோப்பை தயாரிப்பதற்காகத் திட்டமிடுகிறீர்களா? இங்கு அதற்கான குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

An Easy Way to Make Eco-Friendly Soap at Home
விளம்பரம்
Nature Protect Floor Cleaner - leaderboard

சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத தயாரிப்புகள் காலத்தின் தேவையாக உள்ளது. சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத சோப்புகளின் பயன்பாடு உங்கள் தோலின் பாதுகாப்பை மட்டுமல்லாது உலகத்தின் பாதுகாப்பையும் உறுதிசெய்கிறது. சோப்பைத் தயாரிக்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், அனைத்து வித இயற்கைப் பொருட்களுடன் சேர்த்துச் சிறந்த மணம் வீசும் நறுமண எண்ணெய்களைப் பயன்படுத்தி உங்கள் வீட்டிற்கான இந்தச் சோப்பை தயாரிப்பதற்குத் தேவையான குறிப்புகள் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

படிநிலை 1: சோப்பு கலவையை சூடுபடுத்தவும்

கிளிசரின், ஷியா வெண்ணெய், கற்றாழை, கோகோ வெண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற இயற்கைப் பொருட்களால் உருவான சோப்பு கலவைகள் இந்தியாவில் எளிதாகக் கிடைக்கிறது. சோப்பு கலவையைச் சிறு துண்டுகளாக வெட்டவும். அதன் பின், அதனை பாதுகாப்பான கிண்ணத்தில் மைக்ரோவேவில் வைக்கவும். உங்கள் மைக்ரோவேவை உயர் வெப்பநிலையில் வைத்து 30 விநாடிகளுக்கு சோப்பு கலவையை சூடுப்படுத்தவும். நீங்கள் சோப்பு கட்டிகளை உருக்க கொதிநீர் கலனினுள் அந்த கிண்ணத்தை வைக்கலாம். தீக்காயங்களைத் தடுப்பதற்காக சூடான சோப்பை உங்கள் கைகளால் தொடாமல் இருப்பதில் கவனமாய் இருங்கள்.

படிநிலை 2: நறுமண எண்ணெய்களைச் சேர்க்கவும்

நீங்கள் கொதிநீர் கலனுக்குள் கிண்ணத்தை வைத்து சூடுபடுத்தினால், 25 முதல் 30 துளிகள் உங்களுக்கு பிடித்தமான நறுமண எண்ணெய்யை அதில் நேரடியாகச் சேர்த்து கரண்டியால் கவனமாகக் கிளறவும். நீங்கள் மைக்ரோவேவிற்குரிய கிண்ணத்தைப் பயன்படுத்தினால், எண்ணெய்யை சேர்க்கும் முன் மைக்ரோவேவிலிருந்து முதலில் வெளியே எடுக்கவும்.

விளம்பரம்

Nature Protect Floor Cleaner - mpu

படிநிலை 3: அதை வார்ப்புரு செய்தல்

இப்போது உங்களுக்கு பிடித்தமான வடிவத்தில் உள்ள அச்சினை எடுத்துக் கொள்ளவும். சோப்பு அச்சுகள் சந்தையில் எளிதாகக் கிடைக்கிறது. அதன் அடிப்பரப்பில் சிறிது தேங்காய் எண்ணெய்யைத் தடவிக் கொள்ளவும். சோப்பு கலவையை இதன் மீது ஊற்றிக் கொள்ளவும். 6 முதல் 7 மணி நேரம் வரை அதை சூடு ஆற விடவும். குளிர்ச்சிப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்த நீங்கள் இந்த சோப்பைக் குளிர்சாதனப்பெட்டியில் 2 முதல் மூன்று மணி நேரம் வரையிலோ அல்லது அதற்கு மேலாகவோ வைக்கலாம்.

படிநிலை 4: இதை சேமிக்கவும்

சோப்பு திடமானவுடன், அதிலுள்ள அச்சை அகற்றி விட்டு, கத்தியைக் கொண்டு உங்களுக்கு பிடித்தமான வகையில் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இந்த துண்டுகளை தனித்தனியாக வேக்ஸ் காகிதத்தால் மூடவும். அவை நிலையாக மாற நான்கு வாரங்கள் அப்படியே சேமித்து வைக்கவும்.

இயல்பான, சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத உங்கள் சோப்பு ஒரே மாதத்தில் தயாராக இருக்கும்! நீங்கள் பல்வேறு நறுமண எண்ணெய்களைப் பயன்படுத்தி நறுமணம் வீசும் சோப்பை உருவாக்கலாம். ரோஸ்மேரி, புதினா, லேவண்டர், டீ மரம், இலவங்கப்பட்டை ஆகியவை சோப்பு தயாரிப்பில் பயனபடுத்தக்கூடிய சில சிறந்த நறுமண எண்ணெய்களாகும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது