உங்கள் மின்சார பில்லை குறைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க 8 வழிகள்

மின்சார உபயோகத்தை குறைத்தல், சுற்றுச்சூழலுக்கு நல்லது என்பது மட்டுமின்றி, உங்களின் பணத்தையும் கூட மிச்சப்படுத்தும்!

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

8 Ways to Cut Your Energy Bill and Save the Environment
விளம்பரம்
Nature Protect Floor Cleaner - leaderboard

நீங்கள் சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவர் என்றாலும் சரி அல்லது உங்களின் பணம் செலவாகிறது என்று கவலைப்படுபவர் ஆனாலும் சரி, எவ்வாறு மின்சாரத்தை சேமிக்க முடியும் என்பதை அறிந்தால் நீங்கள் வியப்படைய பல காரணங்கள் உள்ளன. அதிர்ஷ்டவசமாக, இதோ மின்சாரத்தை சேமிக்க 8 முக்கிய குறிப்புக்களை உங்களுக்காக வழங்குகிறோம். எனவே, எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதை நீங்கள் அறியாவிட்டாலும் கூட,  இதை தொடர்ந்து படித்துப் பாருங்கள், அது போதும்!

இயன்றவரை முழு லோட் துணிகளை போட்டு சலவை செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது மின்சாரத்தை சேமிக்க சிறந்த வழி மட்டுமின்றி, நீங்கள் தண்ணீரை சேமிக்கவும் கூட உதவுகிறது!

1) கருவிகளின் ப்ளக் ஸ்விட்ச்களை ஆஃப் செய்து விடுங்கள்.

போன்கள், லேப்டாப்கள், டேப்லெட்கள், டிவிக்கள் மற்றும் வேறு எதுவாயினும் பயன்படுத்தாத நேரத்தில் உங்களின் அனைத்து கருவிகளையும் ஸ்விட்ச் ஆஃப் செய்ய, பிளக் சுவிட்சுகளை ஆஃப் செய்து விடுங்கள். நீங்கள் அவற்றை பயன்படுத்தாதபோது கருவிகளை ஆஃப் செய்தால் மின்சாரத்தை அதிகமாக சேமிக்கலாம் என்பதோடு செலவுகளுமம் மிச்சமாகும். ஆனால், சார்ஜர்களுக்கும் இதே நிலைதான் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் எதிலும் இணைக்காவிட்டாலும் இந்தக் கருவிகள் மின்சாரத்தை பயன்படுத்தும். எனவே பாதுகாப்பானது என்பது  பிளக் சுவிட்சை ஆஃப் செய்து விடுவதுதான்.

2) ஷட் டவுண் செய்யுங்கள், ஸ்டாண்ட் பை வேண்டாம்!

டிவிக்கள் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் போன்ற பல மின்சார சாதனங்களில் ஸ்டாண்ட் பை மோடு என்ற வசதி உள்ளது. பயன்படுத்தாதபோது அவை பவர் டவுண் ஆகி விடுகின்றன என்று நினைக்கலாம். ஆனால், அது உண்மையல்ல, ஸ்டாண்ட் பை மோட்-ல் உள்ள ஒரு கருவி சுவிட்ச் ஆன் செய்யப்படும்போது எவ்வளவு மின்சாரத்தைப் பயன்படுத்துமோ, கிட்டத்தட்ட அதே அளவு மின்சாரத்தை பயன்படுத்துகிறது. எனவே, அடுத்த ஒரு மணி நேரத்திற்கோ அல்லது அதற்கு அதிகமான நேரத்திற்கோ நீங்கள் பயன்படுத்தாமல் இருப்பீர்கள் என்றால் கருவிகளை ஆஃப் செய்து விடுவது மிகவும் நல்லது.

விளம்பரம்
Nature Protect Floor Cleaner - mpu

3) ஒரு வேலைக்கு மிகச் சரியான கருவியைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் சமையலுக்கு பெரிதாக அல்லது சிறிதாக எந்த ஒரு பாத்திரத்தை பயன்படுத்தினாலும் ஒரு வித்தியாசணிம் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் தேவைக்கு அதிகமாக பெரிய பாத்திரத்தை நீங்கள் பயன்படுத்தும்போது அதை சூடுபடுத்த அதிக எரிசக்தி தேவைப்படுகிறது. உங்கள் உணவை சூடாக்கும்போது எரிசக்தியை சேமிக்க பாத்திரத்தின் அளவுக்கேற்ப தீச்சுடர் அளவை ஒப்பிட்டுப் பாருங்கள்.

4) நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் உங்கள் ஓவனை நிரப்புங்கள்.

ஒரு ஓவனை சூடாக்க மற்றும் தேவைப்படும் வெப்ப நிலையில் அதை தொடர்ந்து வைத்திருக்க அதிக வெப்ப சக்தி தேவை. உங்களுக்கு நேரணிம் பொருட்களும் இருந்தால் ஒரு நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உணவை சமைப்பது பற்றி சிந்தியுங்கள் மற்றும் எக்ஸ்ட்ராக்களை அடுத்த நாளுக்காக வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு தனிப்பட்ட உணவுக்காகவும், நீங்கள் சூடுபடுத்த நீங்கள் குறைந்த எரிசக்தியையே பயன்படுத்துவீர்கள் மற்றும் ஒரு பரப்பரப்பான வேலை நாளுக்கு பின் உங்களுக்காக சிறிது நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

5) குறைந்த வெப்ப நிலையில் உங்கள் ஆடைகளை வாஷ் செய்யுங்கள்

ஆடைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் ஸ்டெரிலைஸ் செய்யத் தேவையில்லை என்றால் 40 டிகிரிகளுக்கும் அதிகமான வெப்பத்தில் எதையும் வாஷ் செய்யத் தேவையில்லை. மின்சாரத்தை மிச்சப்படுத்த 30 டிகிரி வெப்பத்தில் எத்தனை முடியுமோ அத்தனை ஆடைகளை வாஷ் செய்யுங்கள்.

6) மின்சாரத்தை மிச்சப்படுத்தும் லைட் பல்புகளை பயன்படுத்துங்கள்

மின்சாரத்தை மிச்சப்படுத்துவதற்கு நீங்கள் செய்யக்கூடிய மிகச்சிறந்த தீர்மானங்களில் ஒன்று மின்சாரத்தை சேமிக்கும் லைட் பல்புகளை பயன்படுத்துவதே. தற்போது மின்சாரத்தை மிச்சப்படுத்தும் லைட் பல்புகள் சுலபமாக எங்கும் கிடைக்கின்றன. இவற்றின் விலை வழக்கமானவற்றை விட சிறிது அதிகம்தான். ஆனால், பொதுவாக இவை பல ஆண்டுகள் வரை உழைக்கும். பயன்படுத்தாத போது லைட்டுகளை ஆஃப் செய்வது எப்போதுமே ஒரு நல்ல ஐடியா என்றாலும், மின்சாரத்தை மிச்சப்படுத்தும் பல்புகளை பயன்படுத்தினால் உங்கள் மின்சார பில் உங்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது மற்றும் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு இல்லை.

7) தேவைப்படும் அளவு தண்ணீரை மட்டுமே பயன்படுத்துங்கள்.

நீங்கள் டீ அல்லது காபிக்காக தண்ணீரை கொதிக்க வைக்கும் போது தேவைப்படும் தண்ணீரை மட்டுமே பயன்படுத்தினால் எரிசக்தியை மிச்சப்படுத்தலாம். நீங்கள் உங்கள் கெட்டில் அல்லது பாத்திரத்தில் எந்த அளவு அதிகம் நிரப்பி சூடாக்குகிறீர்களோ அதற்கேற்ப அனைத்தையும் சூடாக்க உங்களுக்கு அதிக எரிசக்தி தேவைப்படும். உங்கள் வீட்டில் மின்சாரத்தை மிச்சப்படுத்த மிகச் சுலபமான வழிகளில் இதுவும் ஒன்று

8) ஒரு மரத்தை நடுங்கள்.

உங்கள் வீட்டிற்கு வெளியே காலியிடம் இருந்தால், வெப்பமான ஒரு பகுதியை மறைத்து நிழல் தர மரம் உதவும். உங்களுக்கு அதன் கீழ் உட்கார அழகான குளிர்ச்சியான இடமாக இருப்பதோடு மட்டுமின்றி வீட்டின் உள்ளே இருக்கும் கடுமையான வெப்பத்தையும் சமாளிக்க உதவும், அனைவருக்குமே இந்த வாய்ப்பு கிடைக்காது. ஆனால், உங்களால் ஒரு மரம் நட முடியும் எனில் நீங்கள் மின்சாரத்தை சேமிக்க ணிடியும். இல்லையேல் ஒரு ஃபேன் அல்லது ஏர்கண்டிஷனிங் இயக்க நீங்கள் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.

முக்கிய செயல்

  • மெயினில் கருவிகளை சுவிட்ச் ஆஃப் செய்ய வேண்டும் என்பதை முக்கியமாக நினைவில் வைத்திருங்கள்

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது