
நவநாகரீக வெளிப்புற தளபாடங்கள் உங்கள் கொல்லைப்புறம், மொட்டை மாடி அல்லது பூல்சைடு பகுதியை அழகுபடுத்தும். ஆனால் இந்த தளபாடங்கள் தூசி, சூரிய ஒளி, மழை மற்றும் வானிலை மாற்றங்களுக்கு உட்படுவதால், அவைகளுக்கு வழக்கமான கவனிப்பு தேவைப்படுகிறது.உங்கள் வெளிப்புற தளபாடங்களை பராமரிக்க உதவும் சில குறிப்புகள் இங்கே.
1) மரத் தளபாடங்கள்
பெரும்பாலான வெளிப்புற மரத் தளபாடங்கள் , வார்னிஷ் கொண்டு பூசப்பட்டிருக்கும். எனவே அவற்றை எளிதில் சுத்தம் செய்ய முடியும். ஒரு க ுவளைத் தண்ணீரில் 5-6 சொட்டு சோப்பு நீரை கரைத்து, அதில் ஒரு பஞ்சையோ, துணியையோ கொண்டு நனைத்து, தளபாடங்களை துடைக்கவேண்டும் . குழாய் கொண்டு அழுக்கையும் சோப்பையும் நன்கு கழுவி, பின் உலர்ந்த துணியால் துடைக்க வேண்டும்.
2) உலோகத்தால் ஆன வெளிப்புற தளபாடங்கள்
தளபாடங்களின் இரும்பு, எஃகு மற்றும் அலுமினிய பிரேம்களை இலேசான சோப்புத் தண்ணீர் கொண்டு எளிதில் சுத்தம் செய்யலாம். ஒரு குவளைத் தண்ணீரில் 3-4 சொட்டு திரவ சோப்பை சேர்க்கவும்.அந்த சோப்பு கரைசலில் துணியை நனைத்து, பிரேம்களை நன்கு சுத்தம் செய்யவும். சோப்பு கரைசலை நீக்க, தண்ணீரை தெளிப்பதற்கு குழாயை பயன்படுத்தவும். நீங்கள் ஒரு துணியை சுத்தமான நீரில் நனைத்து பிரேம்களை துடைக்கவும். தண்ணீர் படிதல் மற்றும் துருப்பிடித்தலை தவிர்க்க பிரேம்களை நன்கு உலர்த்த வேண்டும்.

3) கூடையால் செய்த தளபாடங்கள்:
கூடையால் செய்த தளபாடங்கள், பால்கனி, தோட்டம் அல்லது மொட்டைமாடிக்கு ஒரு பிரபலமான தேர்வாகும். ஏனெனில் இவற்றை எளிதாக சுத்தம் செய்து, பராமரிக்கலாம். முதலில், இவற்றிலுள்ள தளர்வான தூசியை, தூசி உறிஞ்சி இயந்திரம் கொண்டு சுத்தம் செய்யவும். கறை ஏதேனும் இருப்பின் , 3 முதல் 4 சொட்டு லேசான சோப்பை, ஒரு குவளை வெதுவெதுப்பான நீரில் கலக்கவும்,அந்த சோப்பு கரைசலில் ஒரு பஞ்சை நனைத்து, கறை படிந்த பகுதியை துடைத்து எடுக்கவும். பின் உங்கள் தளபாடங்களை இயற்கையாக உலர்த்தவும்.
4) நெகிழியால் செய்யப்பட்ட தளபாடங்கள்
நெகிழியால் ஆன தளபாடங்கள், பராமரிக்க எளிதானவை, நன்றாக நீடிப்பவை, மலிவானவை, மற்றும் அழுகவோ, துருப்பிடிக்கவோ செய்யாதவை, இது ஒரு பிரபலமான தேர்வாக அமைகிறது. எனவே, அதை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். இவற்றின் மேல் படிந்த தூசியை, ஒரு துணி கொண்டு துடைக்கவும். பின் ,குழாய் நீர் கொண்டு கழுவவும். அடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில், 1 கிண்ணம் வினிகர் கலந்து, ஒரு துணியை அதில் நனைத்து, உங்கள் நெகிழியால் ஆன தளபாடங்களை நன்கு துடைக்கவும். கடைசியாக, ஒரு உலர்ந்த துணி கொண்டு உங்கள் நெகிழியால் ஆன தளபாடங்களை துடைத்து எடுக்கவும்.
அவ்வளவு தான்! இந்த எளிய குறிப்புகளை பின்பற்றி, உங்கள் வெளிப்புற தளபாடங்களை பிரகாசிக்க செய்யுங்கள்.