
தொற்றுநோய் பரவலுக்கு முன்பு வரை டாக்ஸியில் அதிக முறை பயணித்து வந்தோம். ஆனால் இப்போது பொது இடங்களுக்கு செல்லும் போதும் டாக்சியில் பயணிக்கும் போதும் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுகிறோம். டாக்சியை ஒவ்வொரு பயணத்திற்கு முன்பும் சரியான முறையில் சுத்தம் செய்வதாகவும், 48 மணி நேரத்திற்கு ஒரு முறை கிருமிகள் நீக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதாக டாக்ஸி நிறுவனங்கள் கூறினாலும், இவை அனைத்தும் ஒழுங்காக செய்யப்படுகிறதா? என்கிற கேள்வி மனதில் எழுகிறது. அதே போல அனைத்து இடங்களும் ஒழுங்கான முறையில் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்படுகிறதா ? என்ற அச்சம் நம்மிடையே எழுகிறது.
மேற்கூறிய அனைத்தும் கருத்தில்கொண்டு
கேப்-ல் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளோம். இவற்றைப் பின்பற்றி உங்கள் பயணத்தை பாதுகாப்பானதாக்குங்கள்.
1. அனைவரும் முகக்கவசம் அணிந்து உள்ளார்களா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்
பயணியான நீங்களும் ஓட்டுநரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். மூடியிருக்கும் இடங்களில் முகக்கவசம் அணிவது என்பது மிகவும் அவசியமானது என்பதை எங்கள் அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்டோம். சுவாசக்குழாயில் நுண்ணிய நீர்த்துளிகளின் மூலம் வைரஸ்கள் மற்றும் கிருமிகள் பரவுகிறது. ஆகையால் முகக்கவசம் இல்லாமல் ஒருவர் இருமினாலோ அல்லது தும்மினாலோ தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். டாக்ஸியில் ஏறுவதற்கு முன் “ஓட்டுநர் முகக்கவசம் அணிந்திருக்கிறாரா?” என்பதை கவனித்த பிறகு பயணத்தை தொடருங்கள் என்ற ஆலோசனையை உங்களுக்குத் தருகிறோம். இதைத் தான் நாங்களும் கடைப்பிடிக்கிறோம். ஓட்டுநர் முகக்கவசம் அணிந்து கொள்ளவில்லை எனில் பயணத்தை ரத்து செய்ய சிறிதும் தயங்காதீர்கள் அல்லது ஓட்டுநரிடம் முகக்கவசம் அணியும்படி கேட்டுக்கொள்ளலாம். பயணம் முழுவதும் நீங்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு முறையும் முகக்கவசம் பயன்படுத்திய பின் அதை சுத்தம் செய்ய மறக்காதீர்கள்.

2. ஓட்டுனரிடம் இருந்து போதிய இடைவெளியில் இருங்கள்
சமீப பயணத்தின் போது ஓட்டுநரிடமிருந்து முடிந்த அளவு சமூக இடைவெளியை கடைப்பிடித்தோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரிடமிருந்து இயன்ற அளவிற்கு இடைவெளி விட்டு அமரலாம். முன் இருக்கையில் அமர்வதை தவிர்த்து பின்னாலோ அல்லது ஓட்டுநருக்கு குறுக்காக அமரலாம். மற்றவர்களோடு ஷேர் ரைட் செய்வதால் வைரஸ் கிருமிகள் பரவ வாய்ப்புகள் அதிகம் ஆதலால் இத்தகைய பயணத்தை தவிர்க்கலாம் என்கிற பரிந்துரையை நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம்.
3.அதிகமாக தொடும் இடங்களை கிருமிநாசினியால் சுத்தம் செய்யுங்கள்
பொதுவாக கேப் பயணத்தில் கதவுகளின் கைப்பிடி, கார் கதவுகள், சீட்பெல்ட், தலைசாய்ந்து கொள்ளும் இடம் ஆகிய இடங்களை நம்மால் தொடாமல் இருக்க முடியாது. ஆனால் இவை அனைத்துமே நம்மைப் போல ஒரு நாளைக்கு பலரால் கையாளப்படும் இடங்களாகும். எனவே அவற்றில் வைரஸ், கிருமிகள் இருக்கும். அவ்விடங்களின் மூலம் நமக்கு முன் பயணித்தவர் இடமிருந்து தொற்று பரவ வாய்ப்புகள் அதிகம். இதற்கான தீர்வாக இத்தகைய இடத்தை சுத்தம் செய்வதற்காக Nature Protect’s On-The-Go Disinfectant Spray கிருமிநாசினி ஸ்ப்ரேயை பயன்படுத்துங்கள். இதுவே நாங்கள் உங்களுக்கு அளிக்கும் பரிந்துரை ஆகும். இதை நாம் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். இது கடினமான மற்றும் மென்மையான மேற்புறத்தில் பயன்படுத்தலாம் என்பதை உணர்ந்தோம். இதை பயன்படுத்த தண்ணீரோ சோப்போ தேவையில்லை ஆதலால் இதை எப்போது வேண்டுமானாலும் நாம் பயன்படுத்தலாம். வேம்பு, கற்றாழை, துளசி போன்ற இயற்கை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் இதை உங்களுக்கு பரிந்துரைக்கிறோம். 60% மேல் ஆல்கஹாலால் ஆனது என்ற காரணத்தால், கிருமிகளைக் கொல்லப் போதுமானது என்ற தகவலை CDC இணையத்தின் மூலம் தெரிந்து கொண்டோம். பாக்டீரியா எதிர்ப்பு சக்தி நிறைந்த வேம்பானது இயற்கை கிருமி நாசினி என்ற விவரம் நாம் அனைவரும் அறிந்ததே. இதைப் பயன்படுத்திய பின்னர் வரும் இயற்கையான நறுமணத்தை நாங்கள் ரசித்ததைப் போல நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
4. டாக்சி ஜன்னல்களை காற்று வரும்படி கீழே இறக்க வேண்டும்
காற்றோட்டம் இல்லாத இடத்தில் சிறிது நேரம் பயணம் செய்தாலும் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம். ஆதலால் காற்றோட்டம் கம்மியாக இருக்கும் சூழலில் பயணிப்பத்தை தவிர்க்கலாம். டாக்ஸியில் ஏறும் போதே ஓட்டுநரிடம் ஜன்னல்களை திறந்து வைக்கச் சொல்லலாம்.இதன் மூலம் காற்றோட்டத்தின் தூய்மையை உறுதி செய்து கொள்ளலாம்.
பயணிகளான நாம், நம் பயணத்தின் போது ஜன்னல்கள் திறந்திருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஜன்னல்களை திறக்கும் போது, பட்டனை தொடுவதற்கு முன் அதை எப்போதும் கிருமிநாசினியில் தூய்மைப்படுத்த வேண்டும்.
5. தொடர்பில்லா கட்டண பரிவர்த்தனை முறைகளை பயன்படுத்துங்கள்
கேப்பில் பயணம் செய்ய சில சமயங்களில் நாங்கள் அதற்கான கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி விடுவோம் அல்லது இணையம் வாயிலாக பரிமாற்றத்தை தேர்வு செய்வோம். முடிந்த வரை பணப்பரிமாற்றம் செய்வதை தவிர்க்கலாம். இதனால் ஓட்டுநருக்கும் பயணம் கொடுப்பவருக்குமான ஏற்படும் தொடர்பு குறையும்.
கட்டணத்தை பணமாக கொடுப்பதாக இருந்தால், அதன்பிறகு சரியான தொகையை கொடுக்க வேண்டும். சில்லறையை வாங்கியவுடன் கிரமிநாசினியால் கையை சுத்தம் செய்ய வேண்டும்.
6. வீட்டுக்கு திரும்பிய உடன் அணிந்த துணிகளை துவைத்து, பொருட்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்
வீட்டுக்கு திரும்பிய பின், கேப்–ல் நாம் எடுத்துச் சென்ற பேக், ஷூ, கைப்பை, சாவி, கைபேசி ஆகியவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அந்த வகையில் எல்லா விதமான இடங்களையும், பொருட்களையும் சுத்தப்படுத்தும் Nature Protect கிருமிநாசினியை தான் நாங்கள் எப்போதும் பயன்படுத்தி வருகிறோம். பேக்கில் உள்ள அறிவுரைகளை பின்பற்ற இதை நீங்கள் புரிந்துகொண்டு பயன்படுத்தலாம். இதைத் தவிர நீங்கள் அணிந்த துணிகளை சரியான முறையில் சுத்தம் செய்து அதையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
நோய் தொற்று காலத்தில் மேற் கூறிய எளிய வழிமுறைகளை பின்பற்றி கேப்பில் பாதுகாப்பாக பயணிக்கலாம்.
ரகசிய உதவிக் குறிப்பு: இந்தியாவின் சிறந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை இங்கே இலவசமாக பெற்று அதை பயன்படுத்திப் பாருங்கள்.