மால் அல்லது மார்க்கெட் செல்கிறீர்களா? உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள சில வழிகள்

நாம் நீண்ட இடைவெளிக்குப் பின் ஷாப்பிங் செய்வதற்காக மால்கள், மார்க்கெட்கள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் போன்ற இடங்களுக்கு செல்ல ஆரம்பித்து விட்டோம். நாம் மெதுவாக பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டு இருக்கும் இந்நிலையில் உங்களுக்கு விருப்பமான மால் அல்லது மார்க்கெட்களுக்கு செல்லும் போது உங்களை பாதுகாத்துக் கொள்ள சில பயனுள்ள வழிகளை பார்க்கலாம்!

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

விளம்பரம்
கடைக்கு செல்கையில் பாதுகாப்பாக இருப்பது எப்படி

தொற்று நோய் பரவலுக்கு பின் வெளியே செல்லும் பொழுது முகக்கவசம், கை சுத்திகரிப்பான் போன்றவற்றை பயன்படுத்த வேண்டி இருப்பதால் சற்று கடினமாகத்தான் இருக்கிறது.

முன்பெல்லாம் மால் அல்லது மார்க்கெட் செல்வது என்றாலே  ஒரு விதமான உற்சாகம் வரும். ஆனால் இன்றோ நாம் மிகுந்த எச்சரிக்கையோடு செல்ல வேண்டியுள்ளது. டிரஸ்ஸிங் ரூம் முதல் உணவகங்கள் வரை எங்கு வேண்டுமானாலும் வைரஸ் மற்றும் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது நாம் அதிக கவனத்துடன் செல்ல வேண்டியதாக இருக்கிறது. “அவர்கள் எதையாவது தொடுகிறார்களா?” என்பதை நாம் எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அதே சமயம் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்கவும் முடியாது. எதிர்பாராதவிதமாக அப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டால் அடிக்கடி கைகளை சுத்தப் படுத்துவது மிகவும் கடினம். மால்கள் அல்லது மார்க்கெட்டுக்கு செல்லும் போது சமூக விலகல் போன்ற நெறிமுறைகளை பின்பற்றினால் மட்டும் போதாது என்பதை நாங்கள் அறிந்து  கொண்டோம். அத்தகைய இடத்திற்கு செல்லும் போது உங்களை பாதுகாத்துக் கொள்ள சில வழிகள் இதோ:

1. பரபரப்பான நேரங்களில் செல்வதை தவிருங்கள்

தற்போது மால்கள், மார்க்கெட் போன்ற இடங்களில் குறைந்த அளவிலான மக்களைத் தான் காண முடிகிறது, இருந்தாலும் வார நாட்களில் பரபரப்பில்லாத நேரங்களில் திட்டமிட்டு செல்வது மிகவும் நல்லது. இதனால் மால்கள் அல்லது மார்க்கெட்டுக்கு செல்லும் பொழுது நம் பாதுகாப்பிற்குத் அவசியமான சமூக விலகல் தானாகவே அமைந்துவிடும்.

2. முகக்கவசம் அணியுங்கள்

விளம்பரம்

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதன் மூலம் உங்களை பாதுகாப்பதோடு சேர்த்து உங்களைச் சுற்றி உள்ளவர்களையும் பாதுகாக்கும், இதனால் முகக்கவசம் அணிவது என்பது அடிப்படையான ஒன்று. சமீபகாலங்களில் முகக்கவசங்கள் பல வகைகள், நிறங்கள், வடிவங்களில் கிடைக்கின்றது, அதிலிருந்து உங்களுக்கு பிடித்தவற்றை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் உங்கள் முகக்கவசத்தை தேர்வு செய்யும் போது அது உங்கள் வாய் மற்றும் முகத்தை நன்கு மூடியிருக்கிறதா?  என்பதை கவனித்து வாங்குங்கள். சுருக்கச் சொல்லப்போனால் நீங்கள் டிரஸ்ஸிங் அறை மற்றும் டாய்லெட் போன்ற இடங்களை பயன்படுத்தும் பொழுது  உங்களின் முகக்கவசம் இடம் மாறாமல் நன்கு பொருந்தியிருக்க வேண்டும்.

3. பல கடைகளுக்குள் செல்வதை தவிருங்கள்

மால்கள் அல்லது மார்க்கெட் போக ஆசைப்பட்டால் அங்கு போவதற்கு முன்பு போதிய எச்சரிக்கை நடவடிக்கைளோடு சேர்த்து திட்டமிடுதல் மிகவும் அவசியம். கடந்த சில முறைகள் நாங்கள் மாலுக்கு சென்றபோது, அங்குள்ள எல்லாக்  கடைகளுக்குள் செல்வதை தவிர்த்து தேவையான கடைகள் அல்லது இடங்களுக்கு மட்டுமே சென்று ஷாப்பிங் செய்தோம் அல்லது விரும்பிய உணவகத்தில் சாப்பிட்டோம். அங்கே நீங்கள் செய்ய வேண்டியவைகளை பட்டியலிட்டு அதன் பின் செல்லுங்கள் என்பதை நாங்கள் உங்களுக்கு பரிந்துரை செய்கிறோம். இதனால் கூட்டத்தில் இருக்கும் வாய்ப்பைக் குறைக்கலாம்.

4. உங்கள் ஷாப்பிங் வண்டியை கிருமிநாசினியால் சுத்தம் செய்யுங்கள்

மாலில் நாம் தொடக்கூடிய பொருட்களில் முக்கியமானது ஷாப்பிங் வண்டி அல்லது கூடைகள் ஆகும். மளிகைப்  பொருட்கள் வாங்கும் போது நம்மால் அவற்றை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. நாங்கள் மாலுக்கு சென்றபோது இதே சிக்கலை சந்திக்க நேர்ந்தது. கையில் எடுத்துச்செல்ல ஏதுவான Nature Protect’s Surface Disinfectant Sprayவை நாங்கள் கண்டுபிடித்தோம். இந்த கிருமிநாசினி ஸ்பிரேவை எங்கு வேண்டுமானாலும் எப்போதும் பயன்படுத்தலாம். நாங்கள் இதை  பயன்படுத்தி எங்களின் ஷாப்பிங் வண்டி / கூடையின் கைப்பிடியை சுத்தப்படுத்தியதைப் போல நீங்களும் இதை பயன்படுத்தலாம். இது பாக்டீரியா, பூஞ்சைகள் எதிர்ப்பு சக்தி நிறைந்த வேம்பு, கற்றாழை, துளசி, போன்ற இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்டது. இதில் 60% மேல் ஆல்கஹால் இருப்பதால், வைரஸ் மற்றும் கிருமிகளை அழிக்கப்   போதுமானது என்பதை CDC இணைதளத்தின் மூலம் நாங்கள் அறிந்து கொண்டோம். அழுக்குகள் மற்றும் ஒட்டக்கூடிய கைப்பிடிகள், கதவின் கைப்பிடி போன்ற எல்லா வகையான மேல் பரப்பிற்கும் இந்த கிருமிநாசினி ஸ்பிரேவை பயன்படுத்தலாம். பேக்கிங்கில் இருக்கும் வழிகாட்டுதலின் படி இந்த கிருமிநாசினியை நீங்களும் பயன்படுத்தலாம்.

5. டிரஸ்ஸிங் அறையை பயன்படுத்துவதை தவிருங்கள்

தற்போது பல கடைகளில் டிரஸ்ஸிங் அறையை பயன்படுத்த  அனுமதிக்கின்றனர். இருப்பினும் அது பலரால்  பயன்படுத்தப்படுவதால் வைரஸ் மற்றும் நோய் கிருமிகள் பரவ வாய்ப்புகள் அதிகம், ஆதலால் அதை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்பதை நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம். அறையை பயன்படுத்த வேண்டிய சூழல் அமைந்தால் Nature Protect’s Surface Disinfectant Sprayயைப் பயன்படுத்தி கதவின் கைப்பிடி, ஹாங்கர், துணிப் பை போன்றவற்றை சுத்தப்படுத்துங்கள் என்று நாங்கள் உங்களுக்கு பரிந்துரை செய்கிறோம். இதை பயன்படுத்திய பிறகு அந்த இடத்தில் நறுமணத்தை விட்டுச்செல்கிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

6. உணவகம் செல்வதை தவிர்க்கவும்

முன்பெல்லாம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன்  மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட உணவகங்களுக்கு செல்வது வழக்கமாக இருந்தது. அதை இன்றைய சூழலில் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக உணவை பார்சல் வாங்கிக் கொண்டு  செல்லலாம். உணவகத்தில் சாப்பிட நேர்ந்தால் நாம் அமரும் நாற்காலி, டேபிளுக்கு கிருமிநாசினியைக் கொண்டு சுத்தப்படுத்த மறக்காதீர்கள். அதே போல் சாப்பிடுவதற்கு முன்பு கைகளை கழுவுதல் / கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

7. லிப்ஃடுக்கு பதில் எஸ்கலேட்டரை பயன்படுத்துங்கள்

எப்போதும் லிஃப்டைப் போல மூடியிருக்கும் இடங்களில் சமூக விலகலைக் கடைப்பிடிப்பது கடினம் என்பதை நாங்கள் எங்கள் அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்டோம். மாலில் உள்ள படிக்கட்டுகள் அல்லது எஸ்கலேட்டரை பயன்படுத்துவதால் கூட்டத்தில் செல்வதை குறைக்கலாம். முடியாத நேரங்களில் லிப்ஃடை பயன்படுத்தும் போது பட்டன்கள் மற்றும் ரேல்களை Nature Protect’s On-the-Go Disinfectant Spray போன்ற கிருமிநாசினி ஸ்பிரேவை வைத்து சுத்தப்படுத்திய பின் அதை பயன்படுத்துங்கள்.

மால்கள், மார்க்கெட் மற்றும் மற்ற பொது இடங்களில் நம்மை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். போதிய திட்டமிடல் மற்றும் கூடுதல் பாதுகாப்பு இருந்தால் மகிழ்ச்சியாக வெளியே சென்று வரலாம்.

https://www.cdc.gov/handwashing/show-me-the-science-hand-sanitizer.html

ரகசிய உதவிக் குறிப்பு: இந்தியாவின் சிறந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை இங்கே இலவசமாக பெற்று அதை பயன்படுத்திப் பாருங்கள்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது