
பெற்றோர்களாகிய நாம், குழந்தைகளுக்கு தொற்று எங்கிருந்து வேண்டுமானாலும் ஏற்படலாம் என்கிற சூழல் நிலவுவதால், அவர்களை நாம் கிருமிகள் நிறைந்த சூழல் இருந்து காப்பதற்காக எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்படுகிறோம். “தொற்றுநோய் காலங்களில் எந்த அளவுக்கு நம்மால் எச்சரிக்கையாக இருக்க முடியும் ?” என்கிற கேள்விக்கான பதில் என்னவென்று நமக்கு தெரியாது.
பொது இடங்களில் இருக்கும் எல்லா மேல்புறமும் கிருமிகளற்றது என்பதை உறுதியாக சொல்ல முடியாது. மேலும், நமக்கு தெரிந்த சோப்புடன் தண்ணீர், ஆப்ப சோடா, வெள்ளை வினிகர் போன்ற வீட்டுக்குறிப்புகளை வெளியே செல்லும் போது முயற்சி செய்யவும் முடியாது. குழந்தைகளின் கைகள் மற்றும் அவர்கள் தொடர்பு கொள்ளும் மேற்பரப்புகள், பொருட்கள் ஆகியவற்றை சுத்தம் செய்ய கையில் எடுத்துச் செல்ல ஏதுவான தயாரிப்புகளை எடுத்து செல்வது சிறந்தது. இது போன்ற சூழலை நாங்களும் கடந்து வந்திருக்கிறோம். பொது இடங்களுக்கு செல்லும் போது உங்களையும் உங்கள் குழந்தைகளையும் கிருமிகளிடம் இருந்து பாதுகாக்க சில எளிய வழிகளை இங்கு பகிர்கிறோம்!
1. உங்கள் குழந்தைகளை எப்போது வெளியே அழைத்து செல்லலாம் என்பதை முடிவு செய்யுங்கள்
பொது இடங்களில் உங்கள் குழந்தையின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான முதல் மற்றும் மிக முக்கியமான வழி இதுவே ஆகும். குழந்தைகளுடனான எங்கள் அனுபவத்தில், குழந்தைகள் சுறுசுறுப்பாக இயங்கும் பகல் நேரங்களில் அவர்களை சமூக விலகலை கடைப் பிடிக்க வைப்பது மிகவும் கடினம். அதை மனதில் வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் கூட்ட நெரிசல் இல்லாத பல்வேறு இடங்களுக்கு செல்ல திட்டமிடுவது சிறந்தது. உதாரணத்திற்கு, வார நாட்களில் மாலுக்குச் செல்வதற்கும் அல்லது அதிகாலையில் பூங்காவை சுற்றவும் திட்டமிடுங்கள். பெரிய பூங்காக்களை தேடிச் சென்றால் சுற்றி ஓட அதிக இடம் கிடைக்கும். இதை பின்பற்றுவதன் மூலம் உங்கள் குழந்தைகள் பலரோடு கூட்டத்தில் இருக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.
2. வெளியே செல்வதற்கு முன் கிருமிநாசினி துடைப்பான்கள் போன்ற அவசியமான பொருட்களை பைகளில் வையுங்கள்

பூங்கா, உணவகம், மால் மற்றும் விளையாட்டு அரங்குகளுக்கு செல்வதற்காகவே தனியாக ஒரு கைப்பை வைத்துக் கொள்ளுங்கள். அடிப்படை தேவைகளான கூடுதல் முகக்கவசங்கள், தண்ணீர் பாட்டில், ஸ்நாக்ஸ், கைக்குட்டைகளும் வையுங்கள் அத்துடன் குழந்தைகளின் கைகளையும், மேற்பரப்பையும் சுத்தம் செய்வதற்கு ஏதுவான ஒரு கிருமிநாசினி தயாரிப்பை எடுத்துச் செல்லுமாறு நாங்கள் பரிந்துரை செய்கிறோம். நாம் கொண்டு செல்லும் அந்த பொருளில் இரசாயனங்கள் கலந்திருக்க கூடாது என்பது மிக முக்கியம் ஆதலால் நாங்கள் Nature Protect’s On-the-go Disinfectant Wipes- ஐ பரிந்துரை செய்கிறோம். இதில் பாக்டீரியா, பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி நிறைந்த வேம்பு, துளசி, கற்றாழை போன்ற இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்டது மேலும் இதை பயன்படுத்திய பின் அருமையான நறுமணத்தை விட்டுச் செல்கிறது.
குழந்தைகள் எப்படிப் பட்டவர்கள் என்பது நமக்குத் தெரியும். நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ அவர்கள் பொது இடங்களில் இருக்கும் கதவின் கைப்பிடி, லிஃப்ட் பட்டன்கள், உணவகத்தின் மேசைகள், ஊஞ்சல்கள் போன்றவைகளை கைகளால் தடவிக்கொண்டே செல்வார்கள். ஆதலால் அவர்களோடு வெளியில் செல்லும் போது கைகளில் சானிடைசிங் வைப்ஸ்களை கொண்டு செல்லும் சிறந்த பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்!
இந்த சானிடைசிங் வைப்ஸ்களைக் கொண்டு நம் கைகளைத் தவிர மொபைல் ஃபோன்ஸ், கார் சாவிகள் போன்ற பொருட்களையும் சுத்தம் செய்யலாம். வைப்பினால் சுத்தம் செய்த பின் நீங்கள் அதை காற்றில் உலர விடவும்.
3. உங்கள் குழந்தைகள் முகக்கவசம் அணிந்து உள்ளார்களா ? என்பதை உறுதி செய்யுங்கள்
“குழந்தைகள் முகக்கவசம் அணியலாமா வேண்டாமா?” என்கிற கேள்விக்கான வாய்ப்பே இல்லை. குழந்தைகள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டியது மிகவும் அவசியம். உங்கள் குழந்தை குறிப்பாக 2-4 வயதிற்குட்பட்ட முகக்கவசம் அணிய மறுத்தால் முதலில் அவர்களுக்கு பிடித்த கார்ட்டூன் கதாப்பாத்திரத்திற்கு அதை அணிவித்து அதனால் ஏற்படும் நன்மைகளை நகைச்சுவையாக புரிய வையுங்கள். இத்துடன் அவர்களோடு சேர்ந்து முகக்கவசத்தை வீட்டிலேயே செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் அவர்களுடன் நேரத்தையும் செலவிடலாம் அதே சமயம் நீங்கள் முகக் கவசத்தில் வண்ணம் தீட்டுவது, ஸ்டிக்கர்கள் ஓட்டுவது போன்ற கேளிக்கையான செயல்களிலும் ஈடுபடலாம். மேலும் இதனால் முகக்கவசத்தையும் அணிய விரும்புவார்கள். எங்களை நம்புங்கள் இந்த செயல்முறை கை மேல் பயனையும் தந்தது. இந்த செயல்முறையின் உதவியோடு குழந்தைகளையும் பாதுகாக்கலாம் அதே சமயம் அவர்களின் கற்பனை வளத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
4. பொது கழிப்பறையை பயன்படுத்தும் போது கூடுதலான கவனத்துடன் இருங்கள்
மார்க்கெட்கள் மற்றும் மால்களுக்கு போகும் போது கழிப்பறைக்கு செல்ல நேரிடலாம். அப்போது பொது கழிப்பறை பயன்படுத்துவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை. பொது இடங்களில் இருக்கும் கழிப்பறை எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியும். பல சமயங்களில் அவை அசுத்தமாக இருக்கும், வைரஸ்கள் மற்றும் கிருமிகளின் இருப்பிடங்கள் என்றும் கூறலாம். அவற்றை பயன்படுத்துவதன் மூலம் தொற்று ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. பொது கழிப்பறை பயன்படுத்தும் போது பாதுகாப்பு மற்றும் சுகாதார காரணங்களுக்காக, கூட்டம் குறையும் வரை காத்திருங்கள் என்கிற பரிந்துரையை உங்களுக்கு அளிக்கிறோம். Nature Protect’s On-the-go Disinfectant Wipes- ஐக் கொண்டு கதவின் கதவுகள் அல்லது பலரால் பயன்படுத்தப் படும் மேற்பரப்புகளை தொடுவதற்கு முன்பு அதை சுத்தப்படுத்துங்கள். அவற்றை பயன்படுத்திய பின்பு, உங்கள் கைகள் நல்ல நறுமணமாக இருக்கச் செய்கிறது! இந்த சானிடைசிங் வைப்பில் ப்ளீசிங் பொருட்கள் ஏதும் இல்லாததால் இது குழந்தைகளின் தோலிற்கு எவ்வித தீங்கும் ஏற்படுத்தாது.
பெற்றோர்களான நாம் தொற்று சமயத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கவலை இருக்கும். உங்கள் கவலைகள் மற்றும் குழப்பங்களை புரிந்து கொள்ள நாங்கள் எப்போதுமே உங்களுடன் இருக்கிறோம். பூங்காக்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும் போது கிருமிகளிடமிருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்க அடிப்படை எச்சரிக்கை நடவடிக்கைகளோடு சேர்த்து ஆல்கஹால் சானிடைசிங் வைப்ஸ்களை பயன்படுத்துங்கள்.
ரகசிய உதவிக் குறிப்பு: இந்தியாவின் சிறந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை இங்கே இலவசமாக பெற்று அதை பயன்படுத்திப் பாருங்கள்.