உங்கள் லெஹங்காவில் உணவுக் கறைகளை நீக்கி அதை பாதுகாக்கும் அருமையான குறிப்புகள்
உங்கள் லெஹாங்காவில் எப்போதாவது உணவு விழுந்துள்ளதா? ஆம் என்றால் இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம்! அதன் அழகை மீட்டுக்கொள்வதற்கான இந்த குறிப்புகளை செய்து பாருங்கள்.
கட்டுரை புதுப்பிக்கப்பட்டது


நீங்கள் சிறப்பாக தோற்றமளிக்க திருமணத்தைவிட சிறந்த விசேஷம் வேறு எதுவும் இல்லை. இதில் உங்கள் ஸ்டைலைக் காட்டுவதற்கு லெஹங்கா மிகவும் பயனுள்ளது. இந்த விசேஷத்தில்தான் விருந்தும் சுவைப்பதற்கு மிக நன்றாக இருக்கும். அன்றைய நாளில் உணவு உங்கள் உடையில் சிந்தி கறை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.
கொஞ்சம் உணவு சிந்து விட்டது என்பதற்காக நீங்கள் உங்கள் விலை உயர்ந்த லெஹங்காவை அணியாமல் இருக்க வேண்டாம். இந்த எளிய குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் டிசைனர் டிரெஸ்ஸிலிருக்கும் உணவுக் கறையை நீக்கிவிடலாம்.
விரைவில் செயல்படுங்கள்
உடனடியாக கறைகளை நீக்குவதற்கு ஆவண செய்யுங்கள். கறை பட்ட இடத்தில் சிறிது தண்ணீர் விட்டு அதை டிஷ்யூ பேப்பரால் துடைத்து கறையை நீக்குங்கள்.
1) எண்ணெய்க் கறைகள்
விளம்பரம்

கறை மீது கொஞ்சம் டால்கம் பவுடரை தூவுங்கள். அது சிறிது நேரம் அப்படியே இருக்கட்டும். பிறகு ஈரமான ஸ்பாஞ்ஜால் தேய்க்கவும். பிறகு ஒரு சுத்தமான துணியால் படிந்திருக்கும் டால்கம் பவுடரை நீக்கவும். தேவைப்பட்டால் துவைக்கவும்.
2) உலர்ந்த கறைகளுக்கு
ஒரு சுத்தமான டூத்பிரஷ்ஷால் உலர்ந்த கறைகளின் துகள்களை நீக்கவும். அதன் மீது கொஞ்சம் டால்கம் பவுடர் தூவி ஈரமான துணியால் மெதுவாக துடைக்கவும். பிறகு வழக்கம்போல துவைக்கவும். வாஷ் கேர் லேபிளில் உள்ள வழிமுறைகளை படித்து பார்ப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
3) போரிக் பவுடர் பயன்படுத்துங்கள்
ஒயின், ஜூஸ், வியர்வை மற்றும் டீ கறைகளை போரிக் பவுடர் பயன்படுத்தி சுலபமாக நீக்கிவிடலாம். உங்கள் லெஹங்காவை 2 மேஜைக்கரண்டி போரிக் பவுடரை வாஷரில் நேரடியாக போட்டு சுத்தம் செய்யவும்.
இந்த சுலபமான ஆற்றல் மிக்க முறைகளை பயன்படுத்தினால் உங்கள் லெஹங்கா மீண்டும் புதிது போல அசத்தல் தோற்றத்துடன் இருக்கும். எனவே கல்யாண விருந்தில் தயக்கமில்லாமல், டிசைனர் டிரெஸ்ஸில் உணவு சிந்தி, அதனால் கறை ஏற்பட்டு சேதமாகும் என்ற கவலை இல்லாமல் சாப்பிடுங்கள்.
கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது