
மிக துர்நாற்றமுள்ள இடங்களில் உங்கள் கழுத்தை சுற்றி இருக்கும் ஸ்கார்ப்பினால் முகத்தையும் மூக்கையும் மூடிக்கொள்கிறீர்கள். எனவே உங்கள் ஸ்கார்ப்பில் நல்ல நறுமணம் இருப்பது நல்லது. உங்களை சுற்றியுள்ள காற்றில் வாடை இருந்தாலும்கூட, உங்கள் கழுத்தை சுற்றி வாசனையான ஸ்கார்ப் இருந்தால் அது உங்கள் மன நிலையை நன்றாக வைத்திருக்கும்.
துவைக்கும்போது உங்கள் ஸ்கார்ப்பிற்கு வாசனை தரும் எளிய குறிப்புகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1) வாசனையுள்ள டிடெர்ஜென்ட் பயன்படுத்தவும்
உங்கள் ஸ்கார்ப்பை வாசனையுள்ள டிடெர்ஜென்ட் பயன்படுத்தி, லேபிளில் கொடுத்துள்ள வழிமுறைகளின்படி, துவைக்கவும். பட்டு மற்றும் வூல்ஸ் போன்ற நாசூக்கான துணிகளை உங்கள் மெஷினில் ஜென்ட்டில் சுழற்சி முறையில் மட்டுமே துவைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
2) எசென்ஷியல் ஆயில்ஸ் சேர்க்கவும்.
உங்களுக்கு விருப்பமான எசென்ஷியல் ஆயி லை 10–15 சொட்டுக்கள் வாஷிங் லோடில் சேர்த்து வழக்கம்போல துவைக்கவும். உங்களுக்கே உரிய வாசனையை உரு வாக்க சில ஆயில்களின் கலவையை உருவாக்குவதற்கு தயங்காதீர்கள்.

3) வாஷரிலிருந்து நீக்கவும்.
ஸ்கார்ப்புகளை வாஷ் செய்த பிறகு தாமதிக்காமல் அவற்றை உடனடியாக உலர்த்திவிடவும். உங்கள் ஸ்கார்ப்புகளை துவைத்த பிறகு அவற்றை மெஷினிலேயே விட்டு வைத்திருக்காதீர்கள். அலசிய பிறகு அவற்றில் ஈர வாடை இருக்கும்.
4) முழுமையாக உலர்த்தவும்.
உங்கள் ஸ்கார்ப்புகளை வெயிலில் நேரடியாக உலர்த்தக்கூடாது. இதனால் அவற்றிலுள்ள நிறம் மங்கிவிடும். மேலும் ட்ரையர் பயன்படுத்தக்கூடாது, ஏனென்றால் அது உங்கள் ஸ்கார்ப்பின் துணியை சேதமாக்கிவிடலாம். ஸ்கார்ப்புகளை முறையாக பராமரிக்க அவற்றை நேரடி வெயில் படாமல் வீட்டினுள் உலர்த்தவும். உங்கள் அலமாரியில் அவற்றை மடித்து வைப்பதற்கு முன்பு அவை முழுமையாக உலர்ந்திருப்பதை உறுதி செய்து கொள்ளவும். ஸ்கார்ப்பில் ஈரப்பதம் தங்கி இருந்தால் அவற்றில் மீண்டும் துர்நாற்றம் வரும்.
இந்த எளிய குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் ஸ்கார்ப்புகளை எப்ப ோதும் நல்ல வாசனையாக வைத்திருக்கவும்!