
உங்களுடைய படுக்கையறை என்பது நீங்கள் ஓய்வெடுக்கவும், ஆசுவாசமாக இருக்கக்கூடிய, போதுமான தூக்கத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு இடமாகும், எனவே உங்களுடைய போர்வைகள் மற்றும் மெத்தைகள் நறுமணம் மிக்கதாக இருப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறீர்கள். உங்கள் போர்வைகள் மற்றும் மெத்தைகளுக்கு ஒரு புதிய நறுமணம் சேர்க்க எளிதான வழி என்பது, அவற்றைச் சரியான வழியில் துவைப்பதே ஆகும். உங்களுடைய துணிகளையும் போர்வைகளையும் துவைத்த பின் புதிய வாசனையுடன் இருக்க ஒரு எளிய படிப்படியான செயல்முறையை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
நறுமணம்மிக்க படுக்கைவிரிப்புகளுக்காக
படி 1 : உங்களுடைய விரிப்புகளை ஊறவைக்கவும்
மிதமான சூட்டில் இருக்கும்படியாக ஒரு வாளி தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். 1 கப் அளவு வினிகரை அதில் சேர்த்து அத்துடன் 1 மேஜைக்கரண்டி அளவு டிஷ்வாஷிங் தூளைச் சேர்க்கவும். உங்களுடைய விரிப்புகளை இந்த வாளியில் வைத்து, அவற்றை 30 நிமிடங்கள் வரை ஊற விடவும். வினிகர் அனைத்து வாசனையையும் மறைக்க உதவும்.
படி 2: வாசனைத் திரவியம்
உங்களுடைய விரிப்புகளை ஊறவைத்த வாளியிலிருந்து அகற்றவும். பின்னர் அதிகப்படியான தண்ணீரை நீக்கி அவற்றை உ ங்கள் சலவை இயந்திரத்தில் வைக்கவும். உங்களுடைய போர்வைகள் துவைத்த பின் புதிய வாசனையுடன் இருக்க, உங்களுக்கு பிடித்த நறுமண எண்ணெய்யின் 4-5 சொட்டுகளுடன் ½ கப் சமையல் சோடாவை உங்கள் சலவை இயந்திரத்தில் நேரடியாகச் சேர்த்து, சாதாரண சுழற்சியில் இயந்திரத்தை இயக்கவும். உங்கள் சலவை இயந்திரம் தண்ணீருக்கான வெப்பநிலை அமைப்பைக் கொண்டிருந்தால், நீங்கள் ‘வார்ம்’ என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும், வெப்பநிலையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு உங்களுடைய விரிப்புகளின் பராமரிப்பு லேபிளை எப்போதும் சரிபார்க்கவும்.

படி 3: உங்களுடைய விரிப்புகளை உலர வைத்தல்
கடைசி படியாக உங்களுடைய விரிப்புகளை உலர்த்த வேண்டும். லேசான சூரிய ஒளியில் இதைச் செய்வது சிறந்தது, ஏனெனில் இது கிருமிகளையும் கொல்ல உதவுகிறது, மேலும் புதிய காற்று உங்களுடைய விரிப்புகளை புதியது போல் மணக்கச் செய்யும்.
நறுமணம்மிக்க மெத்தைகளுக்காக
படி 1: உங்களுடைய மெத்தைகளை துவைக்கவும்
உங்களுடைய சலவை இயந்திரத்தில் மெத்தையை வைத்து வழக்கமான சுழற்சியை இயக்கவும்.
படி 2: திரவத்தைத் தயாரித்தல்
தண்ணீர், வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றின் சம பாகங்களை உள்ளடக்கிய ஒரு திரவத்தைத் தயாரிக்கவும். உலர்த்திய பின் இதனை ஒரு தெளிப்பான் பாட்டிலில் போட்டு உங்கள் டூவெட் முழுவதும் தடவவும். வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு ஏற்கனவே இருக்கும் நாற்றங்களை அழித்து, உங்கள் மெத்தைக்கு புதிய வாசனை சேர்க்கிறது.
படி 3: உங்களுடைய மெத்தையை உலர வைக்கவும்
உங்களுடைய மெத்தையைச் சமதள பரப்பில் இயற்கையான முறையில் உலர வைக்கவும்.
இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், உங்களுடைய மெத்தை, விரிப்புகள் சுத்தமாகவும், புதிய நறுமணத்துடனும் இருக்கும்!