உங்கள் காட்டன் சிகன்காரி குர்த்தாவை எவ்வாறு துவைத்து பராமரிப்பது.

காட்டன் ஆடைகளில் உபயோகப்படுத்தப்படும் துணி மற்றும் சிகன்காரி எம்பிராய்டரி, ஆகிய இரண்டுமே மிகவும் மென்மையானவை ஆகும்.இந்த உதவிக் குறிப்புகள் உங்கள் சிகன்காரி குர்தாவை சரியான வழியில் நீங்கள் பராமரிக்க உதவும்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

How to Wash and Take Care of Your Cotton Chikankari Kurta
விளம்பரம்
Surf Excel Matic Liquid

காட்டன் சிகன்காரி குர்தா போன்ற அழகான மற்றும் மென்மையான ஆடைகளுக்கு எப்பொழுதும் அதிக பராமரிப்பு தேவைப்படும். இந்த ஆடை பராமரிப்பு மற்றும் பேணுதல் குறித்த பரிந்துரைகள் சில நேரங்களில் அதிக நேரம் எடுப்பது போலவும், சிக்கலானது போலவும் தோன்றலாம் ஆனால் அவை அப்படி இல்லை. உங்கள் முயற்சிகளை சுலபமாக்கவும், உங்களுக்கான பலன்களை அதிகரிக்கவும், நாங்கள் சில எளிமையான பராமரிப்பு உதவிக் குறிப்புகளை வழங்கியுள்ளோம்.

இந்த அற்புதமான உதவிக் குறிப்புகளை முயற்சி செய்து பார்க்கவும்

1) உங்கள் குர்தாவை கைகளால் துவைக்கவும்

உங்கள் சிகன்காரி குர்தாவை எப்பொழுதும் குளிர்ந்த நீரை பயன்படுத்தி கைகளால் துவைக்கவும். சூடான நீரை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம், ஏனென்றால் அது காட்டன் ஆடையை சுருங்கிப் போக செய்வதோடு அதில் இருக்கும் எம்ப்ராய்டரியையும் பாதித்துவிடும்.

2) லேசான சோப்புத் தூளை பயன்படுத்தவும்

உங்கள் குர்தாவை லேசான சோப்புத்தூள் கொண்டு துவைக்கவே நாங்கள் பரிந்துரைக்கிறோம். 1/2 வாளி குளிர்ந்த நீரை எடுத்துக் கொண்டு, அதில் 1/2 கப் லேசான சோப்புத்தூள் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையில் உங்கள் குர்தாவை போட்டு 10 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு சாதாரண நீரில் குர்தாவை மெதுவாக அலசவும். இதற்காக நீங்கள் ஸர்ஃப் எக்சல் ஈஸி வாஷ் போன்ற லேசான சோப்புத் தூளை பயன்படுத்த முயற்சி செய்யலாம்.

விளம்பரம்
Surf Excel Matic Liquid

3) பிரஷ் பயன்படுத்துவதை தவிர்க்கவும்

உங்கள் சிகன்காரி குர்தாவை துவைக்கையில், ஒரு போதும் அதை தேய்ப்பதற்கு பிரஷ்ஷை பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் ஆடையில் உள்ள எம்ப்ராய்டரியை அது பாதிக்கும்.

உங்கள் ஆடையில் கறை ஏதேனும் இருந்தால், உங்கள் விரல்களை கொண்டு மெதுவாக தேய்த்து அவற்றை நீக்கவும். ஒரு லேசான சோப்பு தூளை இரண்டு முதல் மூன்று துளிகள் கரையின் மீது தடவி, வட்ட வாக்கில் தேய்த்து , குளிர்ந்த நீரில் அலசுவதன் மூலம் கறைகளை எளிதில் நீக்கலாம்.

4) ஆடையை பிழிவதை தவிர்க்கவும்

உங்கள் சிகன்காரி காட்டன் குர்தாவை துவைத்த பின் ஒருபொழுதும் பிழிந்து விடக்கூடாது. அதை ஒரு தடிமனான காட்டன் டவலில் சுற்றி, அதை மெதுவாக அழுத்தி அதிலிருந்து நீரை வெளியேற்ற வேண்டும். இந்த செயல்முறையை மீண்டும் சில முறை செய்து, நீரை முழுவதுமாக வெளியேற்றவும்.

5) உங்கள் குர்தாவை ஒரு சமமான தரையில் விரித்து உலர்த்தவும்

உங்கள் துணியை துவைத்த பின் அதை நிழலில் ஒரு சமமான தரையில் விரித்து உலர்த்தவும். நேரடியான சூரிய ஒளியில் உலர்த்த வேண்டாம், ஏனென்றால் அது ஆடையின் நிறத்தை மங்க செய்வதோடு எம்பிராய்டரியின் அழகையும் கெடுத்துவிடும்.

உங்கள் குர்தா முழுவதுமாக உலர்ந்தவுடன் அதன் உள் பக்கத்தை வெளிப்புறமாக திருப்பி ஒரு மஸ்லின் துணியில் சுற்றி வைக்கவும். இவ்வாறு செய்தபின், அடுத்த முறை பயன்படுத்தும் வரை, அதை உங்கள் அலமாரியில் பத்திரமாக எடுத்து வைக்கவும்.

இந்த உதவிக் குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் சிகன்காரி காட்டன் குர்தாவை நீண்ட நாட்கள் சிறந்த நிலையில் வைத்துக்கொள்ள முடியும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது