அதிக ஈரம் படிந்து உங்களின் ஆடைகள் துர்நாற்றம் வீசுகிறதா? அந்த துர்நாற்றத்தை நீக்க இதோ சில எளிய வழிமுறைகள்!
வாஷிங் மெஷினில் துவைத்த துணிகளை உடனடியாக, காயப் போட வேண்டும். இல்லை எனில், அந்த ஈரம் துணியில் நீண்ட நேரம் படிந்து, ஒருவித துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அடிக்கடி இவ்வாறு நிகழ்ந்தால், துணிகள் துர்நாற்றம் உடையதாக மாறிவிடும்.
கட்டுரை புதுப்பிக்கப்பட்டது


முக்கிய-குறிப்பு:உங்களது அழுக்குத் துணிகளை வாஷிங் மெஷினில் போடும் முன்பாக, வெந்நீரில், ஒரு கப் வினிகர் கலந்து முதலில் ஊற வையுங்கள்.
இத்தகைய துர்நாற்றத்தை முதல்கட்டத்திலேயே அகற்றுவதுதான் சிறந்த வழி. எனினும், அந்த துர்நாற்றத்தை நீக்குவது அல்லது கட்டுப்படுத்துவது ஒன்றும் எளிதான விசயம் இல்லை. உங்கள் ஆடைகள் நல்ல நறுமணத்துடன் இருப்பதை உறுதி செய்ய இந்த யோசனைகள் சிலவற்றை முயற்சியுங்கள்.
ஆடைகளின் உள்ளே வினிகரை தெளித்து அதனை சில மணிநேரம் ஹேங்கரில் உலர விட வேண்டும்.
வாஷிங் மெஷினில், உங்களது ஆடைகளை போட்டு, வார்ம் டிரை ஸ்பின் கொடுங்கள். சில துளிகள் எலுமிச்சை சாறு கூட சேர்த்துக் கொள்ளலாம். துர்நாற்றம் நீங்கிவிடும்.
ஒருநாள் முழுக்க ஆடைகளை உறைய வையுங்கள். அடுத்த முறை துவைக்கும்போது, ஆடையில் துர்நாற்றம் எதுவும் இருக்காது.
பின்னர் அந்த ஆடைகளை வாஷிங் மெஷினில் போட்டு, வெந்நீரில் ஒரு கப் வினிகர் கலந்து, துவைத்து எடுங்கள். அவற்றை உடனே காயப்போட மறந்துவிடாதீர்கள்.
புத்தம் புதிய சலவையின் நறுமணத்தை நன்கு சுவாசித்து மகிழுங்கள்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது