
நீங்கள் சரியான முடிவெடுக்க உதவும் சில வழிமுறைகள் பின்வருமாறு:
உங்களால் முடிந்தால், ரூ.14,000 முதல் ரூ.21,000 வரை விலை உள்ள வாஷிங் மெஷின்களை வாங்குவது நலம்.
திறப்பான் வகைகள்
மேல்புறத்தில் திறப்பான் உள்ள வாஷிங் மெஷின்களின் விலை குறைவு. இதுவே, முன்புறத்தில் திறப்பான் உள்ள மெஷின்கள் விலை அதிகம். எனினும், இவ்வகை மெஷின்கள் அதிக நீர் இழுக்காது.
ஆற்றல் சேமிப்புத் திறன்

அக்வா சேவர், மோட்டார் செயல்திறன், எக்கோ ஃபிரெண்ட்லி வாஷ் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் உள்ள வாஷிங் மெஷினை வாங்குங்கள். இவ்வகை மெஷின்கள், மற்றவற்றை விடவும் 35% குறைவான நீரை பயன்படுத்தி, 20% அதிக ஆற்றலை சேமிக்கக்கூடியவை.
அளவு
பெரிய மெஷினை வாங்க வேண்டாம். 4 பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு, 6 கிலோ வரை லோடு இழுக்கும் மெஷின் வாங்கினால் போதுமானது. குடும்ப அளவுக்கு ஏற்ப, வாஷிங் மெஷின் வாங்குவது நலம்.
மற்ற அம்சங்கள்
இதுதவிர, கூடுதல் வசதிகள் என்னென்ன இருக்கு என்று பார்த்து வாங்குங்கள். அதாவது, வெப்பநிலை கட்டுப்பாடு, எக்ஸ்ட்ரா ரின்ஸ் சைக்கிள் உள்ளிட்ட ஆட்டோமேட்டிக் லோடிங் வசதிகள் உள்ள மெஷினை வாங்கலாம்.
வாஷிங் மெஷின் வாங்கும்போது உங்களுக்கு வழிகாட்ட மேற்கூறியுள்ள குறிப்புகள் போதும்.