உங்களுடைய கை துண்டுகளை எவ்வாறு சுத்தமாகவும் நறுமணமாகவும் வைத்திருப்பது

உங்களுடைய கை துண்டுகள் நாள் முழுவதும் புதிய வாசனையுடன் இருப்பதற்கு சில குறிப்புதவிகளை நீங்கள் தேடுகிறீர்களா? இந்த குறிப்புதவிகள் உங்களுக்கானவை!

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

How to Get Your Hand TowelsClean and Smelling Fresh
விளம்பரம்
Surf Excel Matic Liquid

நீங்கள் கைகளைக் கழுவிய உடன் கைகளைத் துடைப்பதற்கு கை துண்டை பயன்படுத்துவீர்கள், ஆகவே அதனைச் சுத்தமாகவும், புதிய வாசனையுடனும் வைத்திருப்பது முக்கியம். உங்கள் கை துண்டுகள் நல்ல நறுமணத்துடன் வைக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில உதவிக்குறிப்புகள் மற்றும் யுக்திகள் எங்களிடம் இருக்கிறது.

உங்களுடைய கை துண்டுகள் அனைத்தையும் அலசுவதற்கு இதே  முறையையும் வாசனைப் பொருளையும் பயன்படுத்துங்கள், இதனால் உங்களை அடையாளப்படுத்தும் வாசனையானது உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொரு பரவி ஊடுருவி நிற்கும்.

1) துவைப்பதற்கு முன்னர் 

உங்களுடைய கை துண்டுகளைத் துவைக்கும் போது, உங்களுடைய  சலவை இயந்திரத்தில் அலசும் சுழற்சியில் உங்களுக்குப் பிடித்த நறுமண எண்ணெய் 1 கப் அளவிற்கு சேர்க்கவும். நீங்கள் அவற்றைக் கைகளினால் துவைத்தால், ஒரு வாளி மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் 1 தேக்கரண்டி அளவில் நறுமண எண்ணெய்யை சேர்க்கவும். கை துண்டுகளை 10-15 நிமிடங்கள் வரை அதில் ஊற வைக்கவும், பின்னர் அதிகப்படியான தண்ணீரை பிழிந்து காற்றில் உலர வைக்கவும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஏதாவது நறுமண  எண்ணெய்யையும் நீங்கள் பயன்படுத்தலாம், அதாவது லாவெண்டர், பெப்பர்மின்ட், ஆர்கனோ அல்லது எலுமிச்சை போன்றவை நீங்கள் துவைத்த துண்டுகளுக்கு நல்ல மணம் சேர்க்கக்கூடிய சில நல்ல நறுமண எண்ணெய்கள் ஆகும்.

2) துவைக்கும் போது

உங்களுடைய கை துண்டுகள் ஃபேப்ரிக் சாஃப்ட்னரைப் பயன்படுத்தும் போது நன்றாக இருக்கும். நீங்கள் அவற்றைச் சலவை இயந்திரத்தில் துவைத்தீர்கள் எனில், அலசும் சுழற்சியில் 1 மேஜைக்கரண்டி அளவில் ஃபேப்ரிக் சாஃப்ட்னரைப் சேர்க்கவும். பின்னர், வழக்கம் போல் துவைக்க  வேண்டும். நீங்கள் அவற்றை கைகளால் துவைத்தால், துவைத்த  பிறகு, ஒரு வாளி தண்ணீரில் ½ மேஜைக்கரண்டி அளவில் ஃபேப்ரிக் சாஃப்ட்னரைப் சேர்த்து உங்கள் கை துண்டுகளை 15 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். பின்னர் அதிகப்படியான தண்ணீரைப் பிழிந்து காற்றில் உலர வைக்கவும்.

விளம்பரம்
Surf Excel Matic Liquid

3) துவைத்தப் பிறகு 

வினிகர் மற்றும் நறுமண எண்ணெய்களின் கலவையானது உங்களது கை துண்டுகளைப் பூக்களைப் போல வாசனை கிடைக்க  வழி செய்கிறது. ஒரு வாளி மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் ½ கப் வினிகர் மற்றும் உங்களுக்குப் பிடித்த நறுமண எண்ணெய்யிலிருந்து 6-7 சொட்டுகளைச் சேர்த்து இந்த திரவத்தில்  உங்களுடைய கை துண்டுகளை 30 நிமிடங்கள் வரை ஊறவைத்து பிறகு வழக்கம் போல் துவைக்கவும்.

இந்த உதவிக்குறிப்புகள் நன்றாக வேலை செய்கிறது. அவற்றை நீங்களே முயற்சி செய்யுங்கள்!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது